Tuesday, 14 August 2012

கூபா பள்ளிவாசலின்சுவர்களும் இடிந்து விழுதல் ஹஸ்ரத் மஹ்தி (அலை) அவர்களின் வருகை....

கூபா பள்ளிவாசலின்மினாரத்தும்(dome) சுவர்களும் இடிந்து விழுதல் ஹஸ்ரத் மஹ்தி (அலை) அவர்களின் வருகைக்கு அடையாளமாகும்.
கூபா நகரம் பக்தாதின் தென்பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு முக்கியத்துவமிக்க கரொன்றாகும்.இங்கேதான் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதும் அவர்களின் அடக்கஸ்தலமும் அமைந்துள்ளது. ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களின் காலத்தில் இதுவே இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாகவிருந்தது.

மறுமை நாள் நெரு
ங்கும்போது ஹஸ்ரத் மஹ்தி (அலை) அவர்கள் பூமிக்கு மீண்டும் வருவார்கள் என எமது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அக்காலப்பிரிவில் கூபா நகரில் சண்டைகள் மூண்டிருக்குமெனவும் கூறினார்கள்.மேலும் அப்போது கூபா பள்ளிவாசலின்மினாரத்தும்(dome) சுவர்களும் இடிந்து விழுமென்றும் முன்னறிவிப்புச்செய்துள்ளார்கள்.
நான் எப்போது மஹ்தி (அலை) அவர்கள் வருவார்கள் என்று ரசூல் (ஸல்) அவர்களை கேட்டபோது ‘’அப்போது ஈராக்கில் அன்பார் நகரின் படைகளை யூப்ரடீஸ்,சிராஸ்,தைக்கிரீஸ் நதிக்கரைகளில் காண்பீர்.கூபா பள்ளியின் மினாரத் அழிக்கப்படுவதோடு கூபாவில் பல வீடுகள் எரிக்கபடும்.அப்போது அல்லாஹ் மஹ்தி (அலை) அவர்களின் வருகையை உறுதிப்படுத்துவான்.அல்லாஹ்வின் கட்டளையை யாராலும் தடுக்கவோ மறுபரிசிலனை செய்யவோ முடியது.’’என்றும் கூறினார்கள்.
(Falahi Ssa’il: 199; and in Al-Misbaah: 51 and Al-Baladul Ameen: 35)



ஹுசைன் இப்னு அலி (ரலி) அவர்கள் கூறியதாக அபு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.’’ கூபா பள்ளியின் மினாரத் அழிக்கப்படுவதோடு மக்கள் தமது சொத்துக்களையும் உடைமைகளையும் இழப்பார்கள்.அந்நேரம் மஹ்தி (அலை) அவர்கள் பூமிக்கு வருவார்கள்.’’
(Al-Muttaqi al-Hindi, Al-Burhan fi Alamat al-Mahdi Akhir az-Zaman, p. 27)



உண்மை என்னவெனில், கடந்த 1400 வருடமாக பாதூகாப்பாகவிருந்த கூபா பள்ளியின் மினாரத்தும் சுவர்களும் ஈராக்கில் உருவாகியுள்ள அமைதியின்மையினால் சேதமுற்றன.
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ள நூற்றுக்கணக்கான எதிர்வு கூறல்களில் அனேகமானவை கடந்த முப்பது வருடமாக நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.எனவே முஸ்லிம்கள் இதனை ஏனைய முஸ்லிம்களுடன் பகிர்ந்து கொள்வது நன்மையாயிறுக்கலாம்..அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தவன்..





தொகுப்பு :  மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment