Wednesday, 1 August 2012

தஞ்சை ராஜராஜசோழனின் சகோதரி "குந்தவை நாச்சியார்" இஸ்லாம் மதமாற்றம் -ஒரு வரலாற்று பார்வை....

  

உலகமே போற்றவேண்டிய, " தமிழச்சி" குந்தவை நாச்சியார்!...

     இன்றைக்கு நாம் உதாரணமாக  காட்டும் எந்தவொரு  பெண்ணையும் விட  சிறப்பும்,செயலாற்றலும், அன்பும், கருணையும், சமயபொறையும்,  அறிவும், ஆட்சித் திறனும்  கொண்டிருந்தவர்,  ராஜராஜனின்  சகோதரி  "குந்தவை நாச்சியார்"  என்று  உறுதியாக    சொல்லமுடியும்! 


குந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில்  பிறந்தவர் என்று,திருச்சி  மாவட்டம், லால்குடி வட்டம், "பாச்சில்" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது!


ராஜராஜன்  ஆட்சிக்கு வரும்வரை  அவனைப் பேணிப்பாதுகாத்து  மட்டுமின்றி  அவன் அறிவில் சிறந்த  அரசனாக  திகழ்வதற்கும்,சோழர்களின் பொற்காலம் அவனது ஆட்சிகாலம்  என்று  வரலாறு  குறிப்பதற்கும்,வீரத்தின் விலை நிலமாய் அவனை  போற்றுவதற்கும் காரணமானவர்,  அவனது சகோதரி  குந்தவை நாச்சியார் தான்! 

    தனது தம்பி  ராஜராஜன் மீது அளவற்ற அன்பும்,நமிக்கையும் கொண்டிருந்த குந்தவை நாச்சியார், ராஜராஜனது  ஆட்சியில் அவனுடன்  சேர்ந்து பங்கேற்றும் வந்துள்ளார்.! முடியாட்சியில் ஒரு குடியாட்சியை  நிறுவும் உயரிய நோக்கத்தில்,  குடவோலைத் தேர்தலை  கண்காணிக்கும் பொறுப்பில்  ஈடுபட்டு வந்துள்ளார் என்பதை திருமழபாடி கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.





குந்தவையின் மதமாற்றமும் சமயபுரமும்!


      குந்தவை நாச்சியார்,  இஸ்லாம் மதத்துக்கு மாறிய இடம்," சமயபுரம்"  எனத் தெரிகிறது, ஸ்ரீ ரங்கத்து கோயில்ஒழுகு நூலிலும் அதுபற்றிய குறிப்புகள் காணப் படுகிறது!  சமயபுரம் "கோயில் தல வரலாறும்"  அதனை உறுதிபடுத்துவதாகவே உள்ளது!


        சமய பு(ர)றம் என்ற பெயர்,  காரணப் பெயராக இருப்பதையும் காணலாம்!  குந்தவை இதுநாள் வரை தான் சார்ந்து இருந்த..  மதத்தை புறம் தள்ளி, புதிய மதத்தை தழுவிக் கொண்டதால் சமயபுற(ர)ம் என்று பின்னாளில் வழங்கப்பட்டு வருகிறது எனத் தோன்றுகிறது! 


    இந்த ஊருக்கு கண்ணபுரம், கண்ணனூர் ,விக்கிரமபுரம்,மாகாளிபுரம் என்று பலபெயர்களில் குறிக்கப் பட்டு வந்துள்ளது!           இந்த இடம் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், 15 -வது கி,மீ.யில் உள்ளது. மேலும் இந்த இடம் ஸ்ரீரங்கம், அருகிலும் அமைந்துள்ளது.! 


குந்தவை நாச்சியாருக்கு  கி.பி.1006 -ஆம் முதல் குந்தவையின் பிறந்த நாளான, அவிட்ட நட்சத்திரத்தில் அவனது தம்பி,ராஜராஜன் விழா எடுத்து கொண்டாட உத்தரவிட்டு இருந்ததை  கல்வெட்டு தெரிவிப்பதால், குந்தவை  கி.பி.1006 -ஆம் ஆண்டிலேயே  இந்துமதத்தை விட்டு  நீங்கி,இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது  அறியவருகிறது!






ராஜராஜன்  தனது ஆட்சிக்காலத்தில்  போற்றிய இரண்டு  பெண்மணிகள்  செம்பியன் மாதேவியாரும்  அவனது சகோதிரி குந்தவை நாச்சியாரும் என்று வரலாற்று ஆசிரியர்கள் பலரும்  உறுதிபடுத்தி உள்ளனர்!


சிலர் குந்தவை, ராஜராஜனால்  தஞ்சையில் கட்டப்பட்ட   பெரிய கோவிலுக்கு  பொன் முதலிய அறக்கொடைகளை கொடுத்து இருகிறாரே ? என்று  நினைக்கலாம்.!

  தஞ்சை கோயில் பணிகள் கி.பி.1003 -ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது அறியவருகிறது. தஞ்சைகோயில்  பணி முழுமையடைந்து, குடமுழுக்கு நடை பெற்றது ராஜராஜனின்  இருபத்து ஐந்தாவது ஆட்சி ஆண்டில் 275 -ஆவது நாளில் என்று  தஞ்சைகோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது! இந்தநாளில்,ராஜராஜன் ஸ்ரீவிமானத்து  ஷ்தூபித் தறியில் வைப்பதற்கு செப்புக்குடம் கொடுத்துள்ளான் ஆகவே,அன்றைய நாளில்  கோயில்பணி நிறைவுற்று,குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்றும்  அந்த நாள்,  ஏப்ரல் 22 -ஆம்நாள்,கி.பி.1010 -வருடம் என்பதும் வரலாற்று அறிஞர்களின் கருத்து ஆகும்!ஆகவே,குந்தவை  தஞ்சை கோயில் பணிகள் ஆரம்பித்தபிறகு, கி.பி.1003 யில் தொடக்கி,அவர் மதம் மாறுவதற்கு முன்பு,அதாவது கி.பி.1006 -குள்  தஞ்சை கோயிலுக்கு கோடை அளித்து உள்ளார் என அறியலாம்! 




 தனது சகோதரியின் மீது  பெருமதிப்பும், அன்பும் கொண்ட  ராஜராஜன் பெரிய கோவிலுக்கு  தான் கொடுத்த  அறகொடையுடன், தனது சகோதரி   குந்தவை கொடுத்த அறக் கொடையையும் சேர்த்து,  "கல்லிலே வெட்டுக" என்று உத்தரவிட்டு, கோயில் கல்வெட்டில் இடம்பெறச் செய்துள்ளான். மேலும் தனது சகோதரி  குந்தவையின் பிரதி பிம்பத்தை,திருமேனியாக செய்து, அதனைக் கோவிலில் வைத்து வணங்கி வரவும் செய்துள்ளான்.என்பதையே  குந்தவை, "தம்மையாக எழுந்தருளுவித்த திருமேனி"   என்று கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது எனபது விளங்குகிறது.!


குந்தவை செய்த பணிகளில் சிலவற்றை  இப்போது போர்ப்போம்: 


குந்தவை நாச்சியார், தனது தந்தை, சகோதரர்கள் போலவே  சமயப் பொறையுடன் நடந்துகொண்டு வந்ததுடன்  எண்ணற்ற ஜீனாலயங்கள்,(சமணர்கோயில்) விண்ணகர்கள், அறச்சாலைகள், ஆதூலசாலைகள் (மருத்துவமனைகள்) ,கல்விபணிகள்,போன்றவற்றிக்காக  மடங்களை  நிறுவி உள்ளார்!


உத்திர மேரூரில் குந்தவையின் பெயரில் மேடம் ஒன்று வெகு சிறப்பொடு இயங்கிவந்ததை  (தென்னிந்திய கல்வெட்டுகள் 184 / 1923 ) விளக்குகிறது. 

                திருவாஞ்சியம்,வாஞ்சிநாதர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு,   " திருகாமமுடைய நாச்சியாருக்கு கோயில் ஏற்படுத்தப் பட்டதையும்,இக்கோயிலில் நாச்சியார்  திருமேனி "  செய்து அளிக்கப்பட்டதையும்  தெரிவிப்பதுடன், வடக்கு வீதியில், நாச்சியார் பெயரில் மேடம் ஒன்று ஏற்படுத்தப் பட்டதையும்   அறிவிக்கிறது! 

        தஞ்சை மாவட்டம்,கீழையூரில்  கோயிலிலும் மடத்திலும் பணி மேற்கொண்டவர்களின்  பட்டியலை  கல்வெட்டு  (தென்னிந்திய கல்வெட்டுகள்,74 ,76 /1925  ) தருவதால், கீளைய்ரில் மேடம் ஒன்று இயங்கிவந்ததை அறியமுடிகிறது!  இந்த மடத்தில் இருந்த சிலரை   திருவலான்காட்டில் உய்ள்ள மடத்துப் பணிக்கு அனுப்பியுள்ளதை (தென்னிந்திய கல்வெட்டுகள் 91 ,90 / 1926 ) தெரிவிக்கிறது! 


இதில் இருந்து  சோழன் ஆட்சியில் மடங்களின் நிர்வாகம் ஒருங்கிணைக்கப்பட்டு, அலுவலர்களால்  நடத்தப்பட்டு வந்தது விளங்குகிறது! ராஜராஜன்  தான் வென்ற பெரும் நிலப்பரப்பை  நேரடியாக  ஆட்சி செய்தான், நிலங்களை அளந்து முறைபடுதினான், அரசின் வருவாய்க்கு  அத்தகைய சீர்திருத்தம் தேவையாக இருந்துள்ளது. மேலும் தனது ஆட்சியில் பல்வேறு மடங்களைக் கட்டி, அவற்றையும் நிர்வாக வசதிக்குப் பயன்படுத்திவந்தான் என்பதெல்லாம்  விளங்குகிறதல்லவா?  

" சுத்தமல்லி வளநாட்டு ராஜாதிராஜ சதுர்வேதி மங்கலத்து  ஸ்ரீ மற்றுவரார்பதி மண்டலத்தார் மடத்து விருத்திக்கும் ,வண்டுவராபதி மகாமுனிகளும், இவர் சிஷ்யை பெரியபிராட்டியும்  தங்கள் அர்த்தமிட்டுக் கொண்டு இவர்க்கு மடப்புற இறையிலியை அனுபவித்துப் போதுகிற இவ்வூர்ப் பிடாகை சோழ நல்லூர் " (தென்னிந்திய கல்வெட்டுகள்  தொகுதி,6 ,கல்.56 ) 

  ஸ்ரீ மற்றுவராபதி  பொறுப்பில் இயங்கிவந்த மடத்துக்கு குந்தவை நாச்சியாரும்  அவரது குருவும் சோழ நல்லூர் கிராமத்தின் நிலங்களை வரியில்லாமல் செய்து கொடுத்துள்ளதும், அரசுக்கு செலுத்தும் வரி வருமானத்தை  மேற்கண்ட மடத்தின் நிர்வாக செலவுகளுக்கு  பயன்படுத்திக் கொள்ள செய்துள்ளதும் விளங்கும்!  

 மேடம்,பள்ளி, விகாரம் , விண்ணகர்  கோயில்கள்  ஆகியவைகள் முக்கிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவைகள் இயங்கிவந்தன. மேற்கண்ட மடங்களில் மட்டும் இன்றி  கோயில் தாழ்வாரப் பகுதிகளில் கிராமப் பள்ளிக்கூடங்கள் இயங்கிவந்ததை  கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. படம் சொல்லித் தரும் வாத்திகளுக்கு,கிராம போதுநிலத்தில் கிடைக்கும் வருவாயில் இருந்து ஊதியம் கொடுக்கப்பட்டு வந்தது!


     இதனை தென்னாற்காடு  மாவட்டம் பனையவரம்  என்ற கிராமத்தில் இலவச பள்ளிக்கூடம் இயங்கிவந்த ஆதாரத்தில் இருந்து அறியவருகிறது!  



        குந்தவை நாச்சியார், போளூர் வட்டம்  திருமலையில் உள்ள சமண சமயக்கொயிளையும், திருச்சி, மேற்பாடியில் உள்ள சமணக் கோயிலையும் எடுப்பித்தார் எனக் கல்வெட்டுச் செய்திகள் எடுத்துரைகின்றன . 


     வேலூர் மாவட்டம் வேடலில் சமணமடம்  இருந்ததை தென்னிந்திய கல்வெட்டுகள் (85 /1980 ) அறிவிக்கிறது! இந்த மடத்தில் 500 -மாணவர்கள்  ஒருபுறமும், 400 - மாணவர்கள் மறுபுறமும் இரண்டு பெண் துறவிகள் மேற்பார்வையில் கல்வி கற்றனர்! என்பதை அறிவிக்கிறது! 

  காஞ்சீபுரம் அருகில் உள்ள திருபருத்திக் குன்றம்  சிற்றூரில் இன்றளவும் புகழ்பெற்ற சமணக் கோயில் இருந்து வருகிறது.இங்கும் மேடம் ஒன்று அந்நாளில் இயங்கிவந்தது. இவைகள் எல்லாம் சில உதாரணங்களே!   


குந்தவையின்  அரசியல் சமுதாய நலப்பணிகளுக்கு  சில எடுதுக்காட்டுகளாகவே இவை தரப்பட்டு உள்ளது!

    இவையன்றி, இன்றைக்கு  தாதாபுரம் என்று அழைக்கப்பட்டு வரும்  ஊரில்  தஞ்சையில் ராஜராஜன் கோயில் கட்டுவதற்கு முன்பே, ரவிகுல மாணிக்க ஈஸ்வரம், கரிவரதராஜா பெருமாள் கோயில் என்று  அழைக்கப்படும் விண்ணகரம், ஜீனாலயம் என்னும் சமணர்களின் மடம் ஆகியவைகளை குந்தவை கட்டினார்! 

    ராஜராஜபுரம் என்ற பெயருடன் நகரமாக அன்றைய நாளில் இருந்த தாதபுரம்  அருகில் பிரமபுரம்,எசாலம், எண்ணாயிரம்  ஆகிய வரலாற்று சிறப்புமிக்க  ஊர்கள் உள்ளன. தொண்டை மண்டலமாகவும்,  ஆதிய கரிகாலன், வல்லவரையன் வந்தியத் தேவன் ஆகியோர்களின் ஆளுமைப் பிரதேசமாகவும்  விளங்கிய இந்த பகுதியில்  குந்தவைக் கட்டிய  கோயில்களில்  ஜீனாலயம் தவிர இரண்டும் இன்றும் உள்ளன. 


    அவரது  அரசியல், சமூகப் பணிகள்  யாவும் பிராமணீயத்தின் பெண்கள் குறித்த   பாசிச,கொடூர குண இயல்பினால் ,வரலாற்றில்  இருந்து மறைக்கப்பட்டும்  திரிக்கப்பட்டும் உள்ளதை அறிய முடிகிறது!




அரிஞ்சய சோழன்  படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில்  இறந்தார்.  வேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,"மேல்பாடி"என்ற ஊர் உள்ளது!



இந்துமதத்தில்  இறந்தவர்களை தெய்வமாக நினைத்து  வழிபடும் வழக்கமும்  திதி முதலியவற்றை  ஆண்டுதோறும் செய்யும் வழக்கமும் இருந்துவருவதை  நாம் அறிவோம்!


மேல்பாடி அவனீஷ்வரம் கோயிலில்,  ராஜராஜன் தனது 21 -ஆவது ஆட்சியாண்டு( கி.பி.1006 -முதல்)குந்தவையின் பிறந்த நாளான,  அவிட்ட நட்சத்திர நாளில்வெகுவிமர்சையாக  விழாஎடுத்து,கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான்  என்பதை  அவனீஷ்வரம் கோயிலில்  உள்ள  கல்வெட்டு    தெரிவிக்கிறது!


 குந்தவை  இஸ்லாம் மார்க்கத்தை, தழுவி, இஸ்லாமிய பெண்ணாகவே  இறந்து, இஸ்லாமிய முறைப்படியே  அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்! அவர்  அடக்கம் செய்யப்பட்ட  தர்காவில், "இந்துமத வழிபாட்டு  முறைகளில்  முக்கிய  இடத்தைப் பிடித்துள்ள  விளக்கில்  நெய்யூற்றி, தீபம் ஏற்றி, வழிபடுவது போன்ற "    வழக்கம் இன்றும் தொடர்ந்து  நடந்துவருகிறது!

குந்தவை அடக்கம் செய்யப்பட்டுள்ள தர்காவில் உள்ள திருவிளக்கு  


     இஸ்லாமியர்களின்  வழிபாடுகளில்,  'விளக்குபூஜைகள்  முக்கியத்துவம் பெறுவதில்லை'  என்பதிலிருந்தும்,  குந்தவையின் அடக்க சமாதி உள்ள தர்காவில்,  விளக்கு  ஏற்றி வழிபாடு நடப்பதில்  இருந்தும்,   குந்தவை இஸ்லாம் மதத்தைத்  தழுவிக் கொண்டாலும் கூட, அவர் மேல் மதிப்பும் மரியாதையும்  வைத்திருந்த, இஸ்லாம் மதத்தைத் தழுவாமல், தொடர்ந்து இந்து மதத்திலேயே  நீடித்துவந்த மக்களும்  தங்களது வழிபாட்டு முறையிலேயே,  அவரை  போற்றி,வந்துள்ளனர்  எனபது விளங்கும்!

       இவ்வாறு,  இந்துமதத்திலேயே  நீடித்து வந்த மக்களின்  வம்சாவளியினர், அதாவது இந்துமத  சமுகத்தில்  உள்ளவர்கள், குந்தவையின் சமாதி உள்ள தர்காவில்,  ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும்  கந்தூரி என்ற  உரூஸ்  நிகழ்ச்சியில்,  இந்துமதத்தில் திருவிழா நடத்தப்படும்போது, தேர்  செய்து, வீதிவலம் வருவது போலவே, கந்தூரி நிகழ்ச்சியிலும் தேர் அமைத்து  வீதி வலம் நடத்திவரும் நிகழ்ச்சியும்  ஆண்டுதோறும் நடந்துவருகிறது! 

குந்தவை அடக்கம் செய்யப்பட்டு உள்ள தர்காவின்  உருசில் இந்து சமயத்தவர் பங்கேற்று  செய்யும் தேர் ஊர்வலமும்,தேரும்.  


        இவைகள் எல்லாம்  தமிழகத்தில், இஸ்லாம், இந்துமதம்  என்ற  சமயங்களின்  நல்லிணக்கத்துக்கு, ஒற்றுமை உணர்வுக்கு  உதாரணமாக திகழ்ந்து வருவதைக்  காட்டுகிறது!

    இஸ்லாம் மதம்,   உழைக்கும்  மக்களிடம், சமூகத்தில் தாழ்ந்த நிலையில்  இருக்கும் மக்களின்  பார்வையில் ஏற்றுக்கொள்ளபடும்  நிலையைக் காட்டுவதையும் உணரலாம்!



ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.


3 comments: