பத்தாம் வகுப்பு படித்துமுடித்துவிட்டு எந்த படிப்பை தொடர்வது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டே நாம் இனி எந்த படிப்பை தொடர்வோம் என்று படிக்கும் போதே சிந்திந்துக்கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களுக்கும் இதோ எனது சில ஆலோசனைகள்......
- நீங்கள் மேல்நிலைக் கல்வியை (+2 / HSC) தொடரலாம். இது உங்களுக்கு Diploma Course ல் எந்த பிரிவாக இருந்தாலும் நீங்கள் Lateral Entry Scheme முறையில் நேரடியாக இரண்டாம் ஆண்டு கல்வியை தொடர உதவும்.
- நீங்கள் Polytechnic College ல் Diploma Course ல் எந்த பிரிவிலும் முதலாம் ஆண்டு சேரலாம்.
- நீங்கள் I.T.I ல் Electrician, Wireman, Fitter, Turner, Grinder, Mechanic Motor Vechicle, A/c. Mechanic, Sheet Metal worker, Tractor Mechanic, Electronic Mechanic, Instrumentation, Plumber,
- Data Entry Operator, Diesel Mechanic, Armature Winder, Mason, Draftman, Tailoring போன்ற இன்னும் பல Trade களில் சேர்ந்து பயிலலாம்.
- மருத்துவத் துறையில் DMLT கல்வியை பயிலலாம்.
- தீயணைப்பு சம்மந்தமான Certificate மற்றும் Diploma Course களை படிக்கலாம்.
- நகை மதிப்பீடு சம்மந்தமான Certificate மற்றும் Diploma Course களை படிக்கலாம்.
- மத்திய அரசு கல்வி நிறுவனமான NSIC ல் Multimedia & Animation (based or Maya/ 3D Studio Max with editing & effects), Mltimedia (Graphics, Web Design, 3D Modeling & Animation etc.), Computer Hardware & Networking (chip level) CHN மற்றும் Mobile Phones Repair சம்மந்தமான Certificate Course படிக்கலாம்.
- மத்திய அரசு கல்வி நிறுவனமான Central Tool Room & Training Centre ல் One year Condensed Certificate Course in Tool & Die Making படிப்பை பயிலலாம்.
- மத்திய அரசு கல்வி நிறுவனமான TCIL ல் Diploma in Computer Software Technology (DCST), Diploma in Office Automation (DOA), Advanced Diploma in Computer Harware maintenance and Networking (ADCHMN), Diploma in Computer Hardware maintenance (DCHM), Diploma in Networking Technology(DNT), Diploma in Multimedia (DM), Advanced Diploma in Graphic Designing (ADGD), Diploma in Desk Top Publishing (DDTP), Certificate Course in Desk Top Publishing (DTP), Certification Course in Computer Applications (CCA), Certificate Course in MS Office (CCMS), Certificate Course in Data Entry Operations (CDEO), Certificate Course in Software Testing (CCT), மற்றும் Diploma in Web Designing and Web Development போன்றவைகளை படிக்கலாம்.
- நீங்கள் English மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் Typewriting Junior மற்றும் Senior Grade களை பயிலலாம்.
- நீங்கள் English மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் Shorthand Junior, Intermediate மற்றும் Senior Grade களை பயிலலாம்.
இன்னும் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கென பல படிப்புகள் இருக்கிறது. அவைகளை அடுத்த கல்வியாண்டில் தங்களுக்கு வெளியிடுவேன்.
No comments:
Post a Comment