Wednesday, 29 August 2012

அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ மாநிலம்- ஒரு பார்வை...


 அமெரிக்காவில் உள்ள  நியூ மெக்ஸிகோ மாநிலம் பற்றி நாம் தெரிந்து  கொள்வோமே !  இந்த மாநிலம், அமெரிக்காவின் மற்ற மாநிலங்களை  விட ரொம்ப வித்தியாசமாக இருக்கும். Santa Fe யில் உள்ள Adobe ஸ்டைல் வீடுகள் பற்றி சொல்லி இருந்தேன்.

 இன்று,  அந்த மாநிலத்தில் உள்ள "White Sands National Monument Park" பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன்.  பதிவு நீளமாக தெரிவதற்கு படங்கள் தான் காரணம்.  நான் எடுத்த படங்களை போடாமல், கூகிள் தலையில பாரத்தை போடுறேன். ஏன்னு நீங்களே அப்புறம் தெரிஞ்சுக்குவீங்க..... ;-)


275 சதுர மைல்களுக்கு,  வெள்ளை பாலைவனமாக அழகு மிளிர காட்சி அளிக்கும் இடம் இது.  பனி மாதிரி எங்கு பார்த்தாலும்  வெள்ளை மணல். .......  உலகத்திலேயே பெரிய ஜிப்சம்  மணல் மேடுகள் இதுதான் என்று சொல்லிக்கிறாங்க... (World's largest Gypsum Dune Field)


அங்கு அதிகமாக கிடைக்கும் சுத்தமான ஜிப்சம் (Hydrous Calcium Sulfate)  , காற்றினால்  கொண்டு வரப்பட்டு இப்படி மணல் மேடுகளாக டெபாசிட் ஆகி விடுகிறதாம்.  அதீத குளிரும் வெயிலும் உள்ள இந்த இடத்தில் கூட சில தாவரங்களும் மிருகங்களும் தங்களுக்கு ஏற்ற இடமாக adopt செய்து கொண்டு நிம்மதியாக இருக்குதுங்க...


 இப்படிப்பட்ட இடத்தை பற்றி மேலும் தகவல் வேணும்னு நினைக்கிறவங்க - அது எப்படி உருவாகியது?  என்ன என்ன இருக்குது? எதனால் இருக்கிறது?  லொட்டு லொசுக்குனு  - கேள்வி கணைகளை தொடுக்கிறவங்க :
http://www.nature.nps.gov/geology/parks/whsa/index.cfm  
அமெரிக்க govt .  கொடுத்து இருக்கிற மேல  உள்ள லிங்க் கிளிக் பண்ணி முழு விவரங்களும்  தெரிஞ்சிக்கோங்க.  
மற்றவங்க, மேற்கொண்டு வாசிங்க.....


மற்ற சமயங்களில் குடும்ப படத்தை பார்க்க வர்ற மாதிரி கூட்டம் வந்தாலும்,  இங்கே வெள்ளை மணல் மேடுகள் பின்னே,  பௌர்ணமி அன்று நிலா  உதிக்கும் நேரம் - அந்த கவித்துவமான அழகை காண romantic ஜோடிகள்  வருகை தருகிறார்கள்.  நம்ம தமிழ் படங்கள்ல வர மாதிரி,  chorus ஹம்மிங் உள்ள  background music தான் மிஸ்ஸிங் ஆக இருந்துச்சு....


சூரிய அஸ்தமனம் நேரத்தில்,  அங்கே வாக்கிங் போக வசதி பண்ணி வச்சுருக்காங்க.  அந்த நேரம்,   மாலை நேர சூரிய ஒளி பட்டு, வெள்ளை மணல் மேடுகள் எல்லாம் மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு என்று பல நிறங்களில் நிறம் மாறி மாறி ,  இருளை தழுவி கொண்டது. சிறிது நேரத்தில்,  வெள்ளி மின்னல் வெளிச்சம் போல,  முழு நிலா எழும்பி பிரகாசிக்க வைத்தது ........ அதை பழமொழி மாதிரி ஆராயக் கூடாது.... அனுபவிக்கணும்.  சூப்பரோ சூப்பர்!


அப்படியே டூயட் பாடலாமானு நினைச்சா.... அடுத்து கேள்விப்பட்ட நியூஸ்  ஏதோ மணிரத்தினம் சார் படங்கள் "ரோஜா"  - "Dil Se" -   மாதிரி   சீனை மாத்திடுச்சு.   மென்மையான  காதல் கதை சொல்லிக்கிட்டு இருக்கிற போது, மிலிட்டரி என்ட்ரி ஆகிற  மாதிரி,   கதை  தீம் போய்டுச்சு ....  காதல் ரசம் போய் கார்கில் ரசம் ஊத்துச்சு...... வெள்ளை மணல் உருகி,    சிவப்பு தடம் பதிக்கிற  மாதிரி மாறிச்சு.   ..... (அப்பாடி, அர்த்தம் இருக்குதோ இல்லையோ,  ஒரு flow ல  பதிவுக்கு வச்ச டைட்டில் வந்துடுச்சு..... மேல சொல்றேன், கேளுங்க......)
 


 அங்கே பார்க் நடவடிக்கைகளை மேற்பார்வை பார்க்க வந்த ஒரு   Ranger இடம், பேசும் வாய்ப்பு கிடைத்தது.  அவர் சொன்ன தகவல் -  இங்கே எல்லா நேரமும் இப்படி அழகை ரசிக்க  முடியாது  என்று  ஒரு குண்டை தூக்கி போட்டார். இந்த பார்க், 40 % தான் பொது மக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டு இருக்கிறது.  60 % இடம்,  அமெரிக்க மிலிட்டரிக்கு  சொந்தமானது.  பொது மக்கள், அங்கே போக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.


அது மட்டும் இல்லைப்பா, இந்த ஏரியாவில்  மக்கள் விசிட் அடிக்கிறாங்களே தவிர,  வீடு கட்டி வாழ்றது இல்லை.  ஏன் தெரியுமா?  .... ஷ்ஷ்ஷ்....... யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க..... குறிப்பாக தீவிரவாதிகள் யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க.... காதை கொடுங்க... உங்களை நம்பி ராணுவ ரகசியம் மாதிரி இருக்கிற மேட்டர் சொல்றேன். "இங்கேதான் மிலிடரி அப்போ அப்போ Missile Testing எல்லாம் பண்றாங்க..... புதுசா செய்ற பாம் எல்லாம் வெடிச்சு சோதிச்சு பார்க்கிறாங்க..... "  அந்த மாதிரி குண்டு வெடிப்பு சோதனை நேரங்களில், பார்க் ஏரியா மட்டும் இல்லை,  அந்த  ஊரு பக்கம்  முழுவதும் யாரும் போக விட மாட்டாங்க....  எல்லாம் ரோடுகளும் க்ளோஸ் பண்ணி - மிலிட்டரி  காவல் போட்டு விடுறாங்க.... சோதனைகள் முடிந்த பின் தான் திறந்து விடுவாங்க...

 ....  சமாதான வெள்ளை நிற  மணல் பக்கம்,   ஒரு  யுத்தத்துக்கு தேவையான ஆயுத ஆராய்ச்சி......என்னே ஒரு முரண்பாடு! 



டெஸ்டிங் இல்லாத நேரங்களில் கூட,  இந்த பார்க் பக்கம் போகும் போது,   திடீர்னு செக் போஸ்ட்  வச்சு நம்மை பற்றிய விவரங்கள் மற்றும் ஆவணங்கள் கேட்டு செக் பண்றாங்க.... முதல் வாட்டி, இப்படியெல்லாம் க்ளோஸ் அப்புல, ஆர்மி ஆட்கள் -  மெஷின்  கன்ஸ் பார்த்தேனா ...... கொஞ்சம் டென்ஷன் ஆகி போச்சு.... நல்ல வேளை,  கையில பாஸ்போர்ட்ல இருந்து  எல்லாம் ரெடி ஆக இருந்ததுனால திரும்பி வந்து இங்கே ப்லாக் எழுதி கிட்டு இருக்கேன்..... இல்லைனா, பிடிச்சுட்டு  போய் அடுத்த missile டார்கெட் ஆக வச்சு இருப்பாங்களோ என்னவோ?  எம்மாடி!  (பில்ட் அப் கொடுக்க வேண்டியதுதான் ...... அதுக்காக இப்படியா என்று யாரும் கேலி பண்ணாதீங்க. அப்புறம் உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் connection உண்டுன்னு ஒபமாகிட்ட சொல்லி கொடுத்துடுவேன். ஆமா.....!)



என்ன சொல்ல வரேன்னா - இந்த இடத்தை எத்தனை அமெரிக்க வாழ் இந்திய மக்கள் போய் பார்த்து இருப்பாங்க என்று தெரியல..... பார்க்காதவங்க, மிலிடரி குண்டு போட்டு டெஸ்ட் பண்ணி பார்க்காத நேரத்துல போய் பார்த்துட்டு பத்திரமாக வாங்க....  அப்புறம், நான் வார்னிங் கொடுக்கலைன்னு சொல்லாதீங்க.....



விரைவில்,  நியூ மெக்ஸிகோவில் உள்ள இன்னொரு சுவாரசியமான இடத்தை பற்றி சொல்றேன். சரியா?   

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment