Saturday, 15 September 2012

உங்கள் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?(ஒழுக்கம்) பகுதி -4



ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
அதாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது என்பது உயிரைக் காட்டிலும் உயர்ந்தது என்கிறார் வள்ளுவர். அந்த ஒழுக்கத்தை நம் குழந்தைகளுக்கு எப்படி பொதிப்பது என்பதை பார்ப்போம்.

ழுக்கம் என்பது, குழந்தைக்கு மிகச் சிறிய வயதிலேயே போதிக்கப் பட வேண்டியது. ஆனால் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, குழந்தைப் பருவத்தில் 'குழந்தைதானே...' என அலட்சியப்படுத்தி விட்டு, பிள்ளைகள் வளர்ந்த பிறகு, 'ஒழுக்கமே இல்லை' எனப் புலம்புவது எந்த வகையில் நியாயம் பெற்றோர்களே?

ஆனாலும் ஆங்கில தனிமரபு "பெட்டர் லேட் தேன் நெவர்" என்பது.  ஆகையால் குழந்தைகளாக இருந்த போது நீங்கள் போதிக்கத் தவறிய ஒழுக்கத்தை, அவர்கள் டீன் ஏஜில் அடியெடுத்து வைத்த பிறகும் முயற்சி செய்து பார்க்கலாம். ஐந்தில் வளையாதது, பதினைந்திலாவது வளையட்டுமே!

தண்டிப்பதே ஒழுக்கம் என்பது பல பெற்றோருடைய எண்ணம். உண்மையில் ஒழுக்கம் என்பது ஒருவித பயிற்சி. சமூகம் ஏற்றுக்கொண்ட வழிகளில் நடந்து கொள்ள, வாழப் பழக்கும் ஒருவித பயிற்சி தான் ஒழுக்கம் . இதை பெற்றோர்தான்  பிள்ளைகளுக்கு முதலில் புகட்ட வேண்டும் !

அது சரி ஒழுக்கத்தை நாம் ஏன் இவ்வளவு வலியுறுத்த வேண்டும்? ஏனெனில் ஒழுக்கம்தான் பிள்ளைகளின் முறையான சிந்தனைக்கும், செயலுக்கும் உதவும். தான் செய்கிற ஒவ்வொரு செயலின் விளைவைப் பற்றியும் யோசிக்க வைக்கும். வாழ்க்கையைப் பற்றிய பொதுவான விதிகளைக் கற்றுக் கொள்ளப் பழக்கும். தனது குடும்பம் மற்றும் தான் சார்ந்த சமூகத்தின் மதிப்புகளைக் கற்றுக் கொள்ளத் தூண்டும்.

பிள்ளைகள் வளர, வளர அவர்கள் தன்னிச்சையாக நடந்து கொள்ளத் தொடங்குவார்கள். அந்தக் கட்டத்தில் அவர்கள் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடிக்கும், அவர்களே பொறுப்பு என்பதை உணரச் செய்வதிலிருந்தே ஒழுக்கப் பாடத்தைத் தொடங்கலாம். உதாரணத்துக்கு உங்கள் மகனோ, மகளோ இரவு தூங்கச் செல்கிற வரை வீட்டுப்பாடத்தை முடிக்காமல் இழுத்தடிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவர்களைத் தூங்கவிடாமல் விழித்திருக்கச் செய்தோ, அவர்களது பாடத்தை நீங்கள் எழுதிக் கொடுத்தோ முடிக்க உதவுவதொ தவறு. முடிக்கப்படாத பாடத்துடன் அப்படியே பள்ளிக்குச் செல்லட்டும். அதற்கான தண்டனையை அவர்கள் அங்கே சந்திக்கட்டும். அடுத்த முறை அதே தவறை செய்யக்கூடாது என்பதற்கு அந்த அனுபவமே பாடம் கற்றுத் தந்து விடும். 'ஐயோ... நம்ம புள்ளை ஸ்கூல்ல அடியோ, திட்டோ வாங்கக் கூடாதே...' என்கிற பதைபதைப்பு உங்களுக்கு இருப்பது இயல்புதான். ஆனால் அப்படி நினைத்து, நீங்கள் உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றிப் பழகினால், பிறகு அவர்களால் தவறுகளை உணரவோ, திருத்திக் கொள்ளவோ முடியாமலே போய் விடும்.

எது தவறு, அதற்கான தண்டனை எப்படியிருக்கும் என்பது டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். ஆனாலும் அதை அவர்கள் அடிக்கடி உங்களிடம் பரிசோதனை செய்ய முயற்சிப்பார்கள். பிள்ளைகள் தவறு செய்யட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் காத்திருக்காதீர்கள். நண்பர்களுடன் அரட்டையடித்து விட்டோ, ஊர் சுற்றி விட்டோ பாடங்களைப் படிக்கத் தவறினாலோ, தாமதமாக வீட்டுக்கு வந்தாலோ உங்கள் எதிர்செயல் எப்படியிருக்கும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குப் பதிய வையுங்கள். 'ஆனால் ஒரேயடியாக நிபந்தனைகளை போட்டால் உங்கள் பதின்மை வயது சிருவர் சீறுவர். ஆகையால் அதை பக்குவமாக அவர்களுக்கு எடுதுச்சொல்ல வேண்டும். இந்த வீட்டில், இதுதான் விதி, இப்படித்தான் நடந்து கொண்டாக வேண்டும்' என்பதை அவர்களுடன் உட்கார்ந்து பேசி, அழுத்தமாக நினைவில் நிறுத்த வேண்டும்.

அம்மாவோ, அப்பாவோ ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்கிற நினைப்பில் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து தாமதமாக வீடு திரும்புகிற உங்கள் பிள்ளையிடம் என்ன சொல்வீர்கள்? "ஏன் இவ்வளவு லடெ? அறிவு இல்லை? முண்டமே........." என்றெல்லாம் திட்டினால் "சரிதான் போ! நான் இப்படிதான் செய்வேன்!" என்ற சுருக்கென்ற எதிருரைதான் வரும். பதிலாக நீங்கள் பதற்றமில்லாமல், அவர்களது தாமதம் உங்களை ஒவ்வொரு நிமிடமும் எப்படி படபடப்பில் தள்ளியது, கவலையைத் தந்தது எனச் சொல்லி, உங்கள் சந்தோஷம் அவர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று புரிய வைத்தால் அது அவர்களை சிந்திக்க வைக்கும். இவ்வாரு அவர்களை அன்பால் தாக்கினால் அவர்களும் பதிலுக்கு "சரி, நம்மால் நம் பெற்றோர் பாதிக்க படுகிரார்கள். ஆகையால் நாம் சற்று முன்பே வந்து விடுவோம்" எண்று எண்ணி தம்மை திருத்திக்கொள்ள வழி வகுந்து விடும்.

நீங்கள்தான் உங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டி என்பதை மறந்து விடாதீர்கள்: அடியோ, உதையோ, வன்முறையோ எந்தப் பிரச்னைக்கும் தீர்வாகாது என்பதைப் பிள்ளைகளுக்குப் போதிக்க நினைத்தால், முதலில் நீங்கள் அதை ஆயுதமாகக் கையில் எடுப்பதைத் தவிருங்கள்.

விதிமுறைகளைப் போடுங்கள். ஆனால் அவைகளை விதிப்பதற்கு முன் அவை அவசியமானவை தானா என யோசியுங்கள். அந்த விதிமுறை உங்கள் குழந்தையின் பாதுகாப்பையும், ஆரோக்யத்தையும் பாதுகாக்குமா என யோசியுங்கள். கண்டிப்பான பெற்றோர் எனப் பெயரெடுக்க நினைக்கிற பேராசையில், பின்பற்ற கஷ்ட்டமான விதிமுறைகளைத் திணிக்காதீர்கள்.

உங்கள் சவுகரியத்துக் கேற்றபடி  விதிமுறைகளை மற்றுவதும், தண்டனையை ஆட்கொள்ளுவதும் மிகப்பெரிய தவறு. குடும்ப விதிமுறைகளை முடிவு செய்யும் போது, உங்கள் பிள்ளைகளையும் அதில் ஈடுபடுத்துங்கள். பிறகு அவற்றை மாற்றாமல் கடைபிடியுங்கள். விதிமுறைகளை மீறினால் என்ன விளைவு என்பதை முன் கூட்டியே பிள்ளைகளிடம் சொல்லி வையுங்கள். விளைவுகள் செய்யும் தவறுக்கு ஒத்த வகையில் அமைய வேண்டும். தாமும் அவ்விதிமுறைகளை உருவாக்குவதில் சம்பந்தப் பட்டிருக்கிரோம் என்கிற நினைப்பே, அவர்கள், அந்த விதிமுறைகளை மீறாமல் தடுக்கும். பிறகு பிள்ளைகள்  விதிமுறைகளை மீறினால் அவ்விளைவுகளை மாறாமல் கடைபிடியுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் நிலையானவர்கள் என்பதை உணர்ந்து பிள்ளைகளும் நிலையாக ஒழுக்கதை கடைபிடிப்பார்கள் 

பிள்ளைகள் தவறு செய்யும் போது, உடனடியாக அதைப் பற்றி எச்சரியுங்கள். அது பூதாகாரம் எடுக்கும் வரை காத்திருக்காதீர்கள். அதை பிஞ்சிலேயே கிள்ளி விடுவதுதான் புதிசாலிதனம். எந்த ஒரு ஒழுக்கமற்ற செயலையும் வளர விட்டால் அதைப்பின்னர் திருத்த முடியாது.

விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும், அவை மீறப்படும் போது எதிர்செயல்  கொள்வதிலும் அப்பா, அம்மா இருவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்  என முன்கூட்டியே பேசி வைத்துக் கொண்டு, இருவரும் ஒரே மாதிரி நடந்து கொள்வது அவசியம். பிள்ளைகளின் முன்னால் உங்கள் வாழ்க்கைத் துணையை எதிர்த்து, அவமதித்து, மட்டம் தட்டிப் பேசாதீர்கள். அப்படிச்செய்தால் உங்கள் மீது பிள்ளைகளுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்.

உங்கள் எதிர்செயல் உங்கள் பிள்ளை செய்யும் தவற்றிர்க்கு ஒத்த வகையில் அமைய வேண்டும். சிறு தவற்றிர்க்கு மிகப்பெரிய எதிர்செயலோ, பெரும் தவற்றிர்க்கு மிகப்சிறிய எதிர்செயலோ மேற்கொண்டால் அதற்ககு மதிப்பில்லாமல் போய்விடும்.

உங்கள் பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்தால், அதை மிக நாசுக்காக, தனிமையில் வைத்துக் கண்டியுங்கள். தேவையில்லாமல் கடுமையாக கண்டிக்கப் படுவதையோ, மூன்றாம் நபரின் முன்னிலையில் தான் விமர்சிக்கப் படுவதையோ எந்தப் பிள்ளையும் விரும்புவதில்லை.

நீங்கள் உங்கள் பிள்ளைகளை எந்தளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது எடுதுச்சுச்சொல்லுங்கள். அவர்கள் தவறு செய்கிற போது, உங்களை புண்படுத்துவது அவர்களது அந்தக் குறிப்பிட்ட செயல்தானே தவிர, அவர்கள் அல்ல என்பதைத் தெளிவாகப் புரிய வையுங்கள்.


நன்றி :டாக்டர் கவ்தம் 
தொகுப்பு : மு.அஜ்மல் கான் 


No comments:

Post a Comment