நம் அன்றாட வாழ்வில் கண்டிப்பாக ஓர் இன்ஜீனியரை சந்திக்காமல் இருக்க முடியாது. வீடு, அலுவலகம், பாலம் போன்ற கட்டங்கள் கட்டுவதற்கு சிவில் இன்ஜீனியர், மின்சாரம் சார்ந்த பிரச்னைகளுக்கு எலக்ட்ரிக்கல் இன்ஜீனியர், வாகனங்கள் சார்ந்த விஷயங்களுக்கு மெக்கானிக்கல் இன்ஜீனியர்.
இப்படி பொறியாளர்களின் உதவி இல்லாமல் இன்றைய உலகில் வாழ முடியாது.
பொறியாளர்கள் அனைவருக்கும் முதன்மைப் பொறியாளராக இருந்த பாரதரத்னா ஸர்.எம் விஸ்வேஸ்வரையா ஸீ.ஐ.இ என்ற சான்றோனின் பிறந்தநாளே இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பிறந்த மோக்சகுந்தம் விஸ்வேஸ்வரையா தான் அந்தப் போற்றுதலுக்குரிய பொறியாளர். 'சர் எம்.வி.' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
புனே பல்கலைக்கழகத்தின் 'காலேஜ் ஆஃப் இன்ஜீனியரிங்' கல்லூரியில் படித்த இவர், மும்பை பொதுப் பணித்துறையில் பணியாற்றி, பிறகு இந்திய நீர்பாசனத்துறை கமிஷனில் இன்ஜீனியராக அரசால் நியமிக்கப்பட்டார்.
இந்திய அரசு இவரை ஆப்பிரிக்காவின் ஈடன் (எடென்) நாட்டுக்கு நீர் மற்றும் கழிவு நீர் குறித்து படிப்பதற்கு அனுப்பியது. இந்தியாவின் முதல் மற்றும் முதன்மை பொறியாளர் இவர் தான்.
மைசூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாஹர் அணை கட்டும்போது தலைமைப் பொறியாளராக பணிபுரிந்தவர். இந்த அணை கட்டும்போது, ஆசியாவின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாக கருதப்பட்டது மட்டுமல்லாமல், பல தொழில்நுட்ப வல்லுனர்களால் பாரட்டப்பட்டது.
ஆயுள் காப்பீடு (இன்ஷூரன்ஸ்) கழகம், விதிகளை தளர்த்தி, ஒருவர் காலம் ஆனப்பிறகு தரவேண்டிய தொகையை, வீடு தேடி வந்து, இவருக்கு தந்து பெருமை தேடிக்கொண்டது. ஏனெனின், இவர் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, இறுதி (102) வரை மும்முரமாகப் பணி புரிந்தவர். சொந்த வங்கிக்கணக்கைத் தவிர. எளிய வாழ்க்கை. உன்னத நெறி. இவரின் வயது, சில இடங்களில் தவறாக பதிவாகி இருக்கிறது!
மைசூர் திவானாக ஏழு ஆண்டுகள் பதவி வகித்த இவர், 'நவீன மைசூரின் தந்தை' எனவும் அழைக்கப்படுகிறார்.
சிறந்த பொறியாளராக திகழ்ந்த சர்.எம்.வி.-க்கு 1955 ஆம் ஆண்டில் நாட்டின் உயரிய விருதான 'பாரத் ரத்னா' வழங்கி கெளரவித்தது, அரசு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தியாவின் முதன்மைப் பொறியாளரை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ள இந்தத் தினம், பொறியியல் துறையின் மகத்துவத்தையும் பறைசாற்றுகிறது.
இயற்கை பேரழிவுகளால் கடந்த பத்து ஆண்டுகளாக சுமார் 50 லட்சம் மக்கள் உலகெங்கும் பலியாகியுள்ளனர்..
அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணாமாக பல பேர் வீடுகள், தங்களது வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர்..
இப்படி வாழ்க்கையைப் புறட்டிப்போடும் இயற்கை சீற்றங்களைத் தடுக்க புதுப் புது தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது பொறியாளர்கள் கையில் தான் இருக்கிறது.
இன்றும் பல கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்றி, உள்கட்டமைப்பு துறையில் இந்தியா மேலும் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறந்து விளங்கினால் மட்டுமே சர்.எம்.வி.-க்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.
பொறியாளர்கள் மட்டுமின்றி, பொறியியல் படித்துக்கொண்டிருப்போர், பொறியியல் படிக்க விரும்புவோர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

No comments:
Post a Comment