Thursday 6 September 2012

இணைய உலகில் வசிக்கும் தமிழ் இணைஞர்களுக்கு.....


101 Freeware Applications for youகடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு உபயயோகப்படுத்துபவர்களின் என்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயம் ஆண்ட்ராய்டு மென்பொருட்களின் வரவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கடந்த ஆறு மாதமாக நான் ஆண்ட்ராய்டு 2.2.2 நிறுவியுள்ள (Dell Streak 7)  டெப்பளட்டை பயன்படுத்தி வருகிறேன்.
இதில் சிறு குறைபாடு உள்ளது யுனிகோட் வகை  எழுத்துருக்கள் (தமிழ் எழுத்துக்கள்) ஆண்ட்ராய்டு 2.2.2 வேலை செய்வதில்லை. இதனால் தமிழ் வலைதளங்களை படிக்க மற்றும் தமிழில் தட்டச்சு செய்ய மிகவும் கடினமாக இருந்த்தது .


இப்பிரச்சனையை போக்க சில இலவச ஆண்ட்ராய்டு மென்பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நீங்கள் இன்னமும் பழைய ஆண்ட்ராய்டு 2.2.2 பதிப்பை பயன்படுத்தினால் இதோ உஙக்ளுக்கு தேவையான சில மென்பொருட்கள்.
Tamil Android Software








தமிழ் விசை ஒர் இலவச தமிழ் தட்டச்சு இதில் phonetic (Tamil and English) keys, Tamil 99 ஆகிய தமிழ் தட்டச்சு விசைப்பலகைகளை கொண்டது இதனால் நீங்கள் தமிழில் தகவல்களை தட்டச்சு செய்ய முடியும் ஆனால் ஆண்ட்ராய்டு 2.2.2 உபயோகிப்பவர்கள் தமிழ் எழுத்த்க்களை பார்க்க முடியாது. ஆனால் நீங்கள் அனுப்பும் தகவல் யுனிகோட் முறையில் அனுப்பப்படும்.
ஓபெரா மினி உலாவி தமிழ் வலைதளங்களை (bitmap) முறையில் பக்கங்களை தமிழில் காண்பிக்கும். ஓபெரா மினி உலாவியில் (opera:config) என்று டைப் செய்து அதில் (Use BitMap fonts for complex scripts) என்ற அமைப்புக்கு Yes என்று கொடுத்து அமைப்பை சேமிக்க வேண்டும்.
SETT உலாவியில் தமிழ் வலைதளங்களை எளிதாக படிக்க முடியும். SETT உலாவியில் தமிழ் மற்றும் சிங்கள மொழியை ஒருங்கமைத்து காண்பிக்கும்.
(குறிப்பு : ப்ளஷ் ஆதரவு SETT உலாவியில் இப்போது இல்லை.)
பின் குறிப்பு : root செய்த ஆண்ட்ராய்டு போன் மற்றும் டெப்பளட்டில் தமிழ் யுனிகோட் எழுத்துருக்களை பார்க்க மார்கெட்டில் மென்பொருட்கள் உள்ளன.


இணைய உலகில் வசிக்கும் இணைஞர்களுக்கு ஒரு நற்செய்தி. 
எத்தனை மென்பொருட்கள் வணிகரீதியிலாக (commercial) வெளிவந்தாலும், ஒவ்வொன்றையும் விஞ்சும் வகையில் நல்ல மென்பொருட்களாகவும் மிகத் தரமானதாகவும், மேலும் இலவசமாகவும் கிடைக்கும் அருமையான 101 பயன்பாடுகளை (freeware applications) வரிசைப்படுத்தியுள்ளனர்.


அலைபேசி, கணினி, சமூகக் குழுமங்கள் (social groups) இப்படிப் பலதரப்பட்ட பிரிவுகளில் அமைந்த 101 மென்பொருட்களும், இணையத்தளங்களும் – நெடிய ஆராய்ச்சிக்குப் பிறகு சான்றழிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
கணினித் திறனை மேம்படுத்துபவை (enhance), பாதுகாப்புத் தன்மையை அதிகரிப்பவை, இசை, புகைப்படம், காணொளி (video) ஆகியவற்றைக் கையாளும் வகையில் அமைந்துள்ள மென்பொருட்கள் போன்றவையும் இதில் அடக்கம்.
11 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் ஒவ்வொரு பிரிவிலும் மிகமிகச் சிறந்ததையும் குறிப்பிட்டுள்ளனர்.
அகர வரிசைப்படி மிகமிகச் சிறந்தவை கீழே:
>> Advanced SystemCare Free
>> Avast Home Edition
>> Digsby
>> DVD Flick
>> Gmail Labs
>> Google Calendar Sync
>> List.it
>> OpenOffice.org
>> PhotoPerfect Express
>> Qitera
>> Shazam
>> Songbird
>> Windows Live Sync
>> Wubi Ubuntu Installer

http://www.pcworld.com/article/161674/101_undiscovered_freebies_the_list.html

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment