Saturday 8 September 2012

அமெரிக்காவின் natives ஆன செவ்விந்தியர்கள்(Red Indians)வாழ்ந்த குகைகள்ஒரு பார்வை ...-

இன்று நாம் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில், லாஸ் அலமோஸ் (Los Alamos)  என்கிற ஊருக்கு பக்கத்தில்  இருக்கிற  Bandelier National Monument ஆக இருக்கிற மலைகுகைப் பற்றி பாப்போம்......


இது முனிவர்கள் இருந்த குகை இல்லைங்க..... அமெரிக்காவின் natives ஆன செவ்விந்தியர்களில் ஒரு பிரிவினர்,  பல வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த  குகைகள்.    அமெரிக்காவில் அவர்களை செவ்விந்தியர்கள்  - Red Indians - என்று தற்பொழுது அழைப்பதில்லை.  native அமெரிக்கர்கள் (Native Americans)  என்றே சொல்றாங்க.....

ஒரு டவுட்டு:  native என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன?  தெரிஞ்சா சொல்லுங்க மக்கா....  native place என்பதை சொந்த ஊருனு சொல்லுவோம்.... native அமெரிக்கர்கள் என்று இருப்பதை, எப்படி தமிழில் சொல்ல?  ம்ம்ம்ம்......

 Ancestral Pueblo Indians, New Mexico: 




  இந்த குகை வீடுகளில்,  பல அறைகள் இருந்தது, சிறப்பம்சம் தானே!  


  இரவில் மிருகங்கள் கிட்ட இருந்து தங்களை பாது காத்துக் கொள்வதற்கும்,    எதிரிகள் மூலமாக தங்களது பெண்கள், குழந்தைகளுக்கு ஆபத்து எதுவும் வந்து விடாமல் இருப்பதற்கும், இந்த வீடுகள் பயன் பட்டு இருக்கின்றன.

குகையில் இருந்து வெளியே உள்ள view :  

 தொலைவில் இருந்து பார்க்கும் போது, இது பெரிய மலைகள் போலவே இருப்பதால், அங்கு இவர்கள் குடி இருந்தார்கள் என்று யாருக்கும் எளிதாக கண்டு பிடிக்க முடியாமல் இருந்து இருக்கிறது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்த நேரங்கள் மட்டுமே, கீழே இறங்கி வந்து  ஒரே கூட்டமாக சேர்ந்து,  ஒன்றாக கூடி கொண்டாடி இருக்கிறார்கள். 


இப்பொழுது,  சுற்றுலா பயணிகள் ஏறி பார்ப்பதற்கு என சில குகை வீடுகளுக்கு மட்டும் ஏணி வைத்து இருக்கிறார்கள்.  அதில் ஏறிப் போய் குகைக்குள்ள  பார்த்த போது ..... பாபாவோ பாஷாவோ தெரியல..... ஆனால்,  குகை மனிதர்கள் வரைந்து வைத்து இருந்த சில drawings  தெரிந்தன.....  கவனிக்க:  paintings என்று நான் சொல்லவில்லை.... அப்புறம், எல்லோரா - அஜந்தா - ரேஞ்சுக்கு நீங்க கற்பனை பண்ணிடாதீங்க....  அந்த காலத்துல,  குகைகளின் உள்பக்க சுவர்கள் தான்,  அவர்களுக்கு  ப்லாக் ஸ்பாட் போல..... ஒரு கூர்மையான ஆயுதம் வைத்து, என்ன என்னவோ வரைந்து வைத்து இருந்தாங்க.... பாதி புரிந்தன. பாதி புரியல....   ஹா,ஹா,ஹா,ஹா..... 

குகை வாழ் மனிதர்கள் இருந்த இடத்தில்,  நான் நிற்கிறேன் என்கிற பீலிங்க்ஸ் வந்துச்சு பாருங்க...... அட....அட..... அது சொன்னா புரியாது..... காதல் வந்த நெஞ்சம் மாதிரி, அப்படியே உணர்ந்து பார்க்கணும்.... ஹி, ஹி, ஹி, ஹி, ஹி....  இதுக்குத்தான் திருமண நாள் கொண்டாட்டத்தை ஒட்டி டூர் அடிக்கக் கூடாது..... இப்படித்தான் எழுத வருது....


 சரி, இப்போ  எங்கே விட்டேன்? ..... ஆங்..... ஏணியை விட்டேன்.... ச்சே.... ஏணி பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன்....  அந்த காலத்துல,   ஆபத்து நேரங்களில், இந்த ஏணிகளை, குகைக்குள் ஏறி விட்டு உள்ளே இழுத்து வைத்து கொள்வார்கள்.  ஏணிகளை பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் மட்டும் தான் பயன் படுத்தி இருக்கின்றனர். கூட்டத்தில் உள்ள இளைஞர்கள்,  ஏணி இல்லாமலே  மலையில் தங்கள் குகைகளுக்கு,  குரங்கு மாதிரி  ஏறி விடும் வகை தெரிந்து இருந்தார்களாம்.  பயமில்லாமல், மளமளனு அவங்க எப்படி ஏறி இருப்பாங்கனு நினைத்து பார்த்த போது அதிசயமா இருந்துச்சு...  அப்படி ஏறி பார்க்க ட்ரை பண்ணினியானு கேப்பீங்க?  இஃகி ..... இஃகி .... பதில் சொல்ல மாட்டேனே.....


இன்னும், சுவாரசியமான விஷயம் என்னவென்றால்,   கீழே இருந்து பார்க்கும் போது குகை மாதிரி பல ஓட்டைகள் மலையில் தெரியும்.  ஆனால், எது குகையின் வாசல், எது குகையின் சன்னல், எது எதிரிகளை ஏமாற்ற குகை போல அமைக்கப்பட்ட ஓட்டைகள் என்று கண்டுப்பிடிக்க முடியாது.  தவறான வழியில் ஏறி விட்டால்,  பாம்புகள் வாழும் பொந்துக்குள்  கை விட்டு விட்டு,  ஒரேயடியாக  போய் விட வேண்டியதுதான்.   இல்லை,  சரியான பிடிமானம் இல்லாமல், கீழே விழுந்து, அப்புறம் - லிப்ட் இல்லாமலே மேலோகம் போக வேண்டியதுதான்.
Rattle snake:  
 சிலந்தி பூச்சியின் சைஸ் பார்த்தீங்களா?  இது கடிச்சுதுனா ..... யம்மாடி!

வீட்டுக்கு வீடு வாசப்படி என்று நாம் சொல்கிற  மாதிரி, அவங்க சொல்லும் போது - மலைக்கு மலை நோ வாசப்படி என்று சொல்லி இருப்பாங்களோ?  


மேற்கொண்டு விவரங்கள் தெரிந்து, உங்கள்  பொது அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள:   

http://en.wikipedia.org/wiki/Bandelier_National_Monument 


இப்படி பல சுவாரசியமான இடங்கள், நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் உண்டு....  எல்லாத்தையும் சொல்லி,  உங்களை "கடிச்சு "  வைக்க விரும்பல.... ஆனால்,  அதில் வெகு முக்கியமாக இன்னும் ஒரே  ஒரு இடத்தை மட்டும் விரைவில் சொல்லிவிட்டு நியூ மெக்ஸிகோ தல சுற்றுலா புராண கதையை முடிச்சிக்கிறேன்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment