Sunday, 2 September 2012

உடல் எடையை குறைக்க தினமும் ஒரு முட்டை!-ஒரு தவகல்...



அழுத்தி பிடித்தால் உடைந்துவிடும் மெல்லிய 
ஓடுஆடையின் உள்ளே மொழு மொழு மஞ்சள்,
வளவளப்பான வெள்ளை என கவர்ச்சிகரமாக 
கூட்டணியில் ஏகத்து சத்துக்களை பொக்கிஷமாக 
குவித்து வைத்திருக்கும் பெட்டகம் தான் முட்டை!

மூளை வளர்ச்சிக்கு முட்டை:-
கொழுப்பு போன்ற இரண்டுவகையான சமாச்சாரங்கள் தான் (Phosphatidylcholine and sphingomyelin) 
மூளையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து மூளையின் செயல்பாட்டையும்நலனையும் பாதுகாக்கும் 
ஆட்சி பொறுப்பை  செய்கிறதுஅந்த பணிக்கு சுறுசுறுப்பாக ஓடி ஆடி வேலை செய்யும் (methylation) 
 பணிக்கு முட்டையில்  உள்ள கொளின் (Choline)  “மூளையாக செயல்படுகிறது. மேலும் நரம்பு 
மண்டலத்திலிருந்து தசைகளுக்கு தரப்படும் சமிக்கை உத்திரவுகளை கொண்டு சேர்க்கும் காதல் தூதுவன் அசிட்டைல்கோளின் அவர்களின் மூலப் பொருளாகவும் இருக்கிறது சத்துணவில் முட்
டை நமது ருங்காலத்தின்  விதை! அதொடி ஒமேக்கா 3கொழுப்பு, அத்தியவசிய அமைனோ அமிலங்கள்,
 விட்டமின்கள் ஏ, டி, , பி2 ,பி1,பி12 , புரதம், மாவு  சத்துபல தாதுஉப்புக்கள் என பல குவியல்களை 
உள்ளடக்கியது முட்டை!


ஆஃப் பாயில் முட்டை:-
                               மெல்லிய வெண்மை நிற விரிப்பில் மெத்தென புடைப்பாகவும் 
பளபளப்பாகவும் மஞ்சள் நிறத்தில் கவர்ச்சியாகவும் ஆங்காங்கே கருப்பு கீற்றுகளும் ஒருங்கிணைந்த 
அதை லாவகமாக கையாண்டு ஒரே சுருட்டில் வாயினுள் நுழைத்து சுவைக்கும் போது பெப்பரின்
 வாசனையும்முட்டையின் மென்மையான  சுவையும் அருமை அருமைஉடல் எடையை அதிகரிக்க
கட்டுமஸ்தான உடலாக கொண்டுவர பலராலும் சாப்பிடப்படுகிறதுசாலமனோலா என்ற  கிரிமிகள் 
பாதிக்கபட்ட கோழியிடமிருந்து பெறப்பட்ட முட்டையில் இந்த கிரிமிகள் இருக்க வாய்ப்புள்ளது. 
இது மனிதர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளதுமேலும் தோல் சம்மந்தப்ட்ட வியாதிகளும் 
வரவாய்ப்புள்ளது. புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்கள் பச்சை முட்டையையோ அல்லது 
ஆஃப் பாயில் முட்டையை சாப்பிடுவதை தவிர்க்கவும்.மூச்சு திணறல் அறிகுறி தோன்றலாம்!

நன்றாக வேக வைத்த முட்டை:-
முட்டையில் 211 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது என்றாலும் முட்டையில் உள்ள லெசித்தின் என்ற 
பொருள் உடல் கொலஸ்ட்ராலை கிரகிப்பதை தடைசெய்து விடுகிறது எனவும் கொலஸ்ட்ரால் நன்றாக  வேகவைக்கப்படும்போது ஆக்ஸிடேசன் ஆகி கொலஸ்ட்ரால் என்ற பூச்சாண்டியை துரத்திவிடுகிறது எனவும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகின்றது.

முட்டையை வேக வைப்பது எப்படி?
எத்தனை முட்டைகளை வேக வைக்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் ஒரு பாத்திரத்தை தெரிவ 
செய்து அதில்  முட்டைகளை  போட்டு முழுகும் வரை தண்ணீரை ஊற்றவேண்டும். முட்டைகளை 
நெருக்கமாக அடுக்க கூடாதுகொதிக்கும் போது ஒன்றோடு ஒன்று மோதி  உடைந்துவிடும். முதலில் 
அடுப்பை பற்றவைத்து அதில் முட்டை அடங்கிய பாத்திரத்தை வைத்து அதில் உள்ள தண்ணீர் கொதிக்கும் 
நிலை வரும் வரை காத்திருந்து பாத்திரத்தை ஒரு மூடி கொண்டு மூடிவிட்டு ஸ்வாலையை குறைத்து 
வைத்து 12 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பெரிய முட்டைகளாக இருந்தால் 15 நிமிடங்கள் வேக 
வைக்க வேண்டும்.பின் குளிர்ந்த நீருக்கு முட்டைகளை மாற்றி குளிரவைத்து ஓட்டினை உரித்து உஜாலா 
போடாமலேயே பளிச்சிடும் வெண்மையில் உள்ள முட்டையை சாப்பிடலாம்.பாத்திரத்தில் போடும் முன் 
முட்டையில் கெட்ட வாசனை உணர்ந்தால் அதை பயன்படுத்தக்கூடாது.முட்டையில் வெடிப்பு
கீரல் இருந்தால் அதையும் விலக்கவேண்டும்.ஒரு சமமான தரையில் முட்டையை சுழலவிட்டால் 
ஒரே சீராகா சுற்றாமல்  தடுமாறினாலும் அது கெட்டுபோனதாக இருக்கலாம்.
தண்ணீருக்குள்  மூழ்காமல் மிதக்கும் முட்டைகளை விலக்கவேண்டும்.
தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் முட்டையிலிருந்து குமிழ்கள் வெளிப்பட்டாலும் அந்த 
முட்டைகள் பயன்படுத்தக்கூடாதுமுட்டையில் கீரல் உள்ளது என்ற அடையாளம்!
முட்டையின் ஓடு கெட்டியாக  இல்லாமல் ரப்பர் போல் இருந்தாலும் பயன்படுத்தக்கூடாது.

நன்றாக வேக வைத்த முட்டையும் கலோரியும்:-
வேக வைத்த முட்டையில் அனைத்து சத்துகளும் குறைவில்லாமல் உள்ளது. 77.5 கலோரிகள்,,
 5 கிராம் கொழுப்பு, 1.5 கிராம் செச்சுரேட்டடு கொழுப்பு, 190 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 55 மில்லி 
கிராம் சோடியம், 1கிராம் மாவுசத்து, 1கிராம் இனிப்பு சத்து, 6 கிராம் புரதச்சத்து, 20 மில்லிகிராம் 
சுண்ணாம்பு சத்து என அடுக்கி கொண்டே போகலாம்.
நன்றாக  வேகவைத்த முட்டையில் 77.5 கலோரிகள் எரிப்பொருள் உள்ளதுஇந்த முட்டையில் 
அனைத்து சத்துக்களையும் கிரகிக்க  நமது உடல் 100 கலோரிகள் மேல் எரிப்பொருள் செலவழிக்கிறது
எனவே நன்றாக வேகவைத்த முட்டை சாப்பிடும் போது நமது உடல் எடை குறைகிறது என்கிறது ஆராய்ச்சி!

நன்றி :Dr.எஸ். ராஜேந்திரன்.  DD CBFD
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment