Thursday 27 September 2012

உலகச் சுற்றுலா தினம்-ஒரு பார்வை !




இன்று உலகம் முழுவதும் (ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி) சர்வதேச சுற்றுலா தினம் (World Tourism Day Tour Tourist) ஆக கொண்டாடப்படுகிறது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய தொழில் சுற்றுலா. (முதலிடத்தில் இருப்பது கச்சா எண்ணெய்த் துறை)

‘டூர்னூஸ்’ என்ற லத்தின் சொல்லின் அடிப்படையில் உருவானதுதான் டூர் என்னும் சொல் இருந்ததில் இருந்துதான் ‘டூரிஸ்ட்’  என்னும் சொல் உருவானது. 1292ஆம் ஆண்டு இச்சொல் ஆங்கில மொழியில் இணைந்தது.


சுற்றுலா மூலமாக வேலை வாய்ப்பு, அந்நியச் செலவாணி வருமானம், மக்களின் வாழ்க்கை தரம் உயர்தல் என கிடைகும் பலன்கள் ஏராளம்..! வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய மூலஆதாரமாக சுற்றுலா விளங்குகிறது.

உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் 1980 ஆம் ஆண்டு முதல்- செப்டம்பர் 27ஆம் திகதி உலகெங்கும் இந்த நாள் நினைவு கூறப்பட்டு வருகிறது.
1979 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக கலாச்சார அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர் 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோரு ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்த நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்திய அரசு சிறந்த சுற்றுலாப் பகுதிகளுக்கு என சுமார் 60 இடங்களைத் தேர்வு செய்துள்ளது. அவற்றுள் சுமார் ஒரு டஜன் தமிழகத்தில் உள்ளன. கோவில் நகரங்கள். கலாச்சார மையங்கள், மலை வாஸ்தலங்கள், வர்த்தக மையங்கள் போன்றவை முக்கிய சுற்றுலா இடங்களாக திகழ்ந்து வருகின்றன.

 குறிப்பாக, தஞ்சாவூர், கும்பகோணம், காஞ்சீபுரம், ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, தரங்கம்பாடி திருவரங்கம், திருத்தணி, பழனி, சிதம்பரம், மதுரை போன்ற சரித்திரப் புகழ்பெற்ற சுமார் 15 நகரங்களைத் தொன்மை குறையாமல் தமிழக அரசு பாதுகாத்து வருகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை புரிவதில் தென்னக மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதலிடம் பெறுகிறது.

சுற்றுலாவுக்கு அடிப்படை தேவையான போக்குவரத்து தமிகத்தில் சிறப்பாக இருக்கிறது. தமிழகத்தில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து நன்றாக இருக்கிறது. சென்னை, கோயமுத்தூர், மதுரை, திருச்சி போன்ற இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன.

தமிழ் நாட்டில் உள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டலகள் சுமார் 150. அவை தவிர சிறப்பான வசதிகளை கொண்ட சுமார் 300 ஓட்டல்கள் இருக்கின்றன.

இன்பமாக பொழுது போக்கவும், வழக்கமான பணி சுமையிலிருந்து ஒரு மாற்றத்துக்காகவும் கல்வியறிவு பெறவும். தொழில் தொடர்பு கொள்ளவும் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு 1968 ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இது பல சிறப்பு திட்டங்களுடன் இயங்கி வருகிறது. சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பும் இடங்களுக்குச் சென்றுவர சுற்றுலா துறையே தங்கும் விடுதிகள் மற்றும் வாகன வசதிகளை செய்து தருகிறது. தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதிக்காக மோட்டல்கள் (சாலையோர விடுதிகள்) பல் இடங்களில் மிகச் சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த மோட்டல்கள் அனைத்தும் சுற்றுலா மையங்களிலும் இருக்கின்றன. படுக்கை வசதியுடன் கூடிய அறைகளும் உள்ளன. இந்த விடுதிகள் குழுவாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் லாபகரமானதாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் எல்லா வசதிகளையும், பாதுகாப்பு அம்சத்தை கொண்டதாக இருக்கும்.

ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சுற்றுலா ஒரு முக்கிய தொழிலாக நடந்து வருகிறது.

அகில இந்திய அனுமதி பெற்ற வாகனங்களை இனம் பிரித்துக் காண சிறப்பு சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் வாகனங்களை ஒவ்வோரு சோதனைச் சாவடியிலும் சோதனை செய்யும் சிரமம் தவிர்க்கப்படுகிறது.

தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எவ்வித இடையூறும் இன்றி இனிமையாக தமிழக சுற்றுலாப் பகுதிகளை கண்டுகளிக்கும் வண்ணம், அவர்களின் பாதுகாப்பினை அதிகரித்திடும் ஒரு முயற்சியாக, Òசுற்றுலா பாதுகாப்புப் படை என்னும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, மாமல்லபுரம், உதகமண்டலம், கொடைக்கானல், ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய ஐந்து இடங்களில் சுற்றுலா பாதுபாப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment