Saturday, 8 September 2012

சூரிய ஆற்றலை நாம் மின்சக்தியாக பயன்ப்படுத்துகிறோம்- ஒரு தவகல்...


பெரும்பாலும் கீழ் காணும் மூன்று முறைகளில் சூரிய ஆற்றலை நாம் மின்சக்தியாகவோ எரிசக்தியாகவோ பயன்ப்படுத்துகிறோம்,

1 போட்டோ ஓல்டிக் பேனல்

2சூரிய வெப்ப சக்தி

3சூரிய அடர் சக்தி


1,போட்டொ ஓல்டி பேனல்:

சூரிய சக்தி தயாரிப்பில் விலை அதிகம் ஆன தொழில் நுட்பம் இது, காரணம் இதற்கான பேனல்கள் பெரும்பாலும் இறக்குமதி ஆவதே. இதுவே அமெரிக்காவில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 10 சென்ட்கள் போதும். இந்தியாவில் 15 ரூபாய்ஆகிறது(இங்கே அதிக பட்ச மதிப்பீடையே அளிக்ககிறேன் குறைந்த பட்சமாக 3 ரூபாய்க்கும் தயாரிக்க முடியும்)

ஏன் எனில் 15 ரூபாய்க்கு தயாரிக்கும் பிளாண்ட் என்பது முழுக்க தானியங்கியாக, இரவு பகல் எப்போதும் மின் உற்பத்திக்கு பயன்படும், அதி நவீனமானது.தோராயமாக 1 மெகா வாட் திறனில் பிளாண்ட் அமைக்க 25 கோடி அதிகபட்சம் ஆகும்,சுமார் 10 ஏக்கர் இடம் தேவைப்படும். அப்படி எனில் அணு சக்தி மின்சாரமான 2.7 சதவீதம் ஆன சுமார் 7000 மெகா வாட் தயாரிக்க இந்தியாவுக்கு சுமார் 175000 கோடி ரூபாயும், சுமார் 70000 ஏக்கர் இடமும் தேவைப்படும். 176000 கோடி 2ஜி ஸ்ப்பெக்ட்ரம் ஊழல் பணமே போதும். அவ்வளவு ஊழல் செய்யும் ஒரு நாட்டில் பாதகமற்ற மின்சாரத்துக்கு செலவு பண்ண முடியாதா? தார்ப்பாலைவனத்தின் பரப்பளவு 200,000 km2 ஆகும்.

மேலும் இங்கு குறிப்பிடப்பட்ட விலை எல்லாமே மிக அதிகப்பட்ச விலை ஆகும், உண்மையில் இதில் பாதி போதுமானது. குறைவான தொகை கணக்கில் வைத்து சொன்னால் கூடுதலான விலையை மட்டுமே கணக்கில் வைத்து விதாண்டா வாதம் பேசினால் கூட செல்லுபடியாக கூடாது என்பதற்கே.

போட்டொ ஓல்டிக் பேனல் வீடியோ:



இந்த 15 ரூபாய் என்பதே ஒரு தர்க்க ரீதியான விலை, பயன்ப்படும் காலத்தில் எரிபொருள் செலவு இல்லை, சுற்று சூழல் மாசு இல்லை என்பதற்கான விலையை கழித்தால் குறைவான தொகையே நாம் செலவிட்டதாக ஆகும்.

போட்டோ ஓல்டிக் பேனல்கள் என்பது சிலிகான் கொண்டு தயாரிக்கபடுவது, அவற்றின் மீது கண்ணாடிப்பூச்சு இருக்கும்.மேல் படும் சூரிய ஒளியை நேரடியாக மின்சாரம் ஆக மாற்றீ மின்சார சுற்றுக்கு அனுப்பும். போட்டொ ஓல்டிக் விளைவுக்காகவே ஆல்பிரட் ஐன்ஸ்டின் நோபெல் பரிசு பெற்றார்,இதனை 1905 இல் கண்டுப்பிடித்தார்.

சூரிய வெப்ப சக்தி:

இது கொஞ்சம் சாதாரணமான தொழில் நுட்பம்,இதுவும் சூரிய அடர்வு சக்தி முறை தான் எப்படி செயல்ப்படுத்துகிறோம் என்பதனை பொறுத்து மாறுபடும். நேரடியாக சூரிய வெப்பத்தைக்கொண்டு நீரை சூடாக்கி , நீராவி உற்பத்தி செய்து டர்பைன்களை இயக்க செய்து , அனல் மின் நிலையம் போல மின் உற்பத்தி செய்வது.

பேராபோலிக் வடிவ நீள் தகடுகளை அமைத்து அதன் மயத்தில் வெப்பம் கடத்தும் திரவம், எளிதான முறை எனில் நீரையும், அல்லது மினரல் ஆ 91;ில் போன்றவற்றையும் பயன்ப்படுத்துவது. விலைக்கூடிய முறை எனில் உருகிய உப்பினை கொண்டு வெப்பத்தினை கடத்தி நீராவி உற்பத்தி செய்து மினுற்பத்தி செய்வார்கள். இந்த முறையில் சில இடங்களில் அடர்வு/ வெப்ப சக்தி என மாற்றிப்பயன்படுத்துவார்கள்.

இதிலும் தானியங்கி முறை உண்டு.இரவிலும் பயன்ப்படும், ஏன் எனில் வெப்பம் சேமிக்கும் சாதனமாக உருகிய சோடியத்தை பயன்ப்படுத்தலாம்.

கீழே யூட்யுப் விடியோ கானவும்.




அடர்வு சூரிய சக்தி:

இதில் ஒரு சூரிய சக்தியினை குவிக்கும் கோபுரம் அமைப்பார்களில் (ஹீலியோஸ்டாட்)அதில் பல குவி ஆடிகள் இருக்கும் இதன் மூலம் சூரிய ஒளியை குவித்து வெப்பத்தை உருவாக்கி உருகிய உப்பு/ வெப்பம் கடத்தும் மினரல் ஆயிலை சூடாக்கி , நீராவி உற்பத்தி செய்வார்கள். இதுவும் தானியங்கி அமைப்பு, 24 மணி நேரமும் பயன்ப்படக்கூடியது.

கீழே யூட்யூப் வீடியோ:1



வீடியோ 2:




இந்தியாவில் இப்போது வணிக ரீதியாக தனியார் முதலீடு கொண்டு சூரிய பண்ணைகள், நகரங்கள் அமைக்கப்படுகிறது, அதானி குருப், மோசர் பேயர் போன்றவை 50 மெகா வாட் அளவுக்கு ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த சுட்டியில் இந்தியாவில் எப்படி வணிக சூரிய மின் உற்பத்தியாளர்கள் செயல்ப்படுகிறார்கள் என அறியலாம்;


கீழ்க்காணும் சுட்டியில் மேல் விவரங்கள் காணலாம்;






சூரிய ஆற்றலும் தீங்கானது என சிலர் சொல்கிறார்கள்,அவர்கள் கூறும் வாதம் இது தான்.

# சிலிக்கான் பேனல்களில் இருந்து சிலிக்கான் தூசு வரும் என்று, அது சிலிக்கோசிஸ் என்ற நுரையீரல் நோய் உண்டாக்கும் என்பதாகும்.

இது முற்றிலும் கற்பனா வாதம், ஏன் எனில் பேனல்கள் மீது கண்ணாடி பூச்சு உள்ளது.சிலிக்கான் தூசு எப்படி வெளியில் வரும். அப்படிப்பார்த்தால் சில்லிக்கான் கொண்டு தான் கணினி, கைப்பேசி, என பல மின் அணு சாதணங்கள் செய்யப்படுகிறது, எல்லாருக்கும் சிலிக்கோசிஸ் நோய் வந்து விட்டதா?

அடுத்தது , சூரிய வெப்பம் கடத்தப்பயன்படும் வெப்பக்கடத்தி திரவம் , மினரல் ஆயில் மூலம் நோய் வரும் என்பது இதுவும் தவறான பிரச்சாரம் ஆகும்.

காரணம் , இந்த எண்ணை மூடப்பட்டக்குழாய்களில்  தனிச்சுற்றாக  சுற்றி வரும் வெளியில் வராது. ஹீட் எக்ஸ்சேஞ்சர்கள் மூலமே நீரை சூடாக்கி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் ஆரம்பத்தில் தெர்மினால் (பாலி குளோரோ பைபினைல் கலவை)என்ற எண்ணை பயன்ப்படுத்தப்பட்டது அது தான் ஆபத்தானது அதனை 1976 லேயே தடை செய்து தற்போது தீங்கற்ற எண்ணை, அல்லது விலை அதிகம் ஆனாலும் பரவாயில்லை என உருகிய உப்பினை பயண்ப்படுத்துகிறார்கள். உருகிய உப்பு என்பது நாம் பயன்ப்படுத்தும் சாதாரண உப்பே.

# மேலும் பூச்சிகள் சூரிய சக்தியினை குவிக்கும் ஆடிகளால் பாதிக்கப்படும் என்கிறார்கள், இதுவும் தவறானது, சூரிய ஒளியை குவிக்கும் போது அதன் வழியாக சென்றால் எல்லாம் பூச்சிகள் சாகாது நீண்ட நேரம் அதில் இருக்கும் போது தான் வெப்பம் தாக்கும், எந்த பூச்சியும் அங்கேயே கூடுகட்டி குடி இருக்காது. வேண்டுமானால் ஒரு குவி ஆடி வைத்து சூரிய ஒளியை குவித்து அதில் உங்கள் கையை வைத்து சூடு செய்துப்பாருங்கள், சற்று நேரம் ஆனால் தான் வெப்பம் நாமே உணர்வோம். ஆடியில் பட்டதுமே பற்றிக்கொள்ளும் வெப்பத்தினை சூரிய ஒளி உருவாக்காது.

சூரிய ஒளி என்பது 100 சதவீதம் தீங்கற்ற மாற்று எரிசக்தி ஆகும்.

 அதிக இடம் தேவைப்படும் என்கிறார்கள், ஆனால் நம் நாட்டில் உள்ளதார்ப்பாலைவனம் ஒன்றே போதும் தேவையான மீன்சாரம் உற்பத்தி செய்ய. ஆனால் தற்ப்போது நம்மிடம் நிதி ஆதாரம் இல்லை ,முழுக்க பயன்ப்படுத்த , எனவே அணு மின்சாரம் 2.7% உற்பத்தி செய்கிறோம் அதற்கு மட்டும் தற்போது மாற்றூ செய்துக்கொள்ளலாம், போக போக போட்டோ ஓல்டிக் பேனல்கள் விலை குறையும் அப்போது அதிகமாக உற்பத்தி செய்துக்கொள்ளலாம். ஏன் எனில் கணினி அறிமுகம் ஆனப்போது என்ன விலை, இப்போது மலிவாக கிடைக்கவில்லையா,அப்படித்தான் போட்டொ ஓல்டிக் பேனல்களூம் வருங்காலத்தில் விலைக்குறையும்.

செலவு அதிகம் ஆகும் என்பவர்கள் இந்த சுட்டியைப்பார்க்கவும்:


பெரிய அளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய முடியாது என்கிறார்கள், ஆனால் அமெரிக்க கலிபோர்னிய மாகாணத்தில் மஜோவா பாலையில  ஒரே இடத்தில் 500 மெகாவாட் சூரிய மினுற்பத்தி மையம் அமைத்துள்ளார்கள். இப்படி பத்து மையம் அமைத்தால் 5000 மெகாவாட் உற்பத்தி செய்யலாம்.

சுட்டி:


தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பற்றாக் குறையை ஈடு செய்ய 60,000 வீடுகளுக்கு சூரிய ஒளியில் இயங்கும் வீடுகள். திட்டத்திற்கு ரூ.1,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  தெரிவித்துள்ளார்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் 

No comments:

Post a Comment