Thursday, 6 September 2012

ஒட்டகப்பால் பயன்கள்!!! ஒரு சிறப்பு பார்வை ....


உலகிலேயே கால்நடைகள் தரும் பாலில் அதிக சத்து நிறைந்துக் காணப்படுவது ஒட்டகப் பாலில் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம்.இத்தனை அபரிமிதமான சத்தை வழங்கக்கூடிய ஒட்டகத்தின் பிரதான உணவு என்னத்தெரியுமா ?முட்செடிகளும்,  
காய்ந்த சருகுகளுமாகும் !.

முட்செடிகளையும் காய்ந்த சருகுகளையும் மேயந்து விட்டு இத்தனை அபரிமிதமான சத்துள்ளப பலை ஒட்டகம் தருகிறது என்றால் இறைவன் தனது ஆற்றலை மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதம் இதன் மூலமாகவும் வெளிப்படுத்துவதை கவனிக்க வேண்டும்.ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதன் காரணமாக நீரிழிவு நோயால் அவதிப்படுவோருக்கு ஒட்டகத்தின் பால் சிறந்த மருந்து என்று ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் நீரிழிவு நோய் பிரிவு தலைமை டாக்டர் ஆர்.பி.அகர்வால் தெரிவித்து உள்ளார்.

கண்டுபிடிப்பு
கடந்த 7 வருடங்களாக நீரிழிவு நோய் பற்றியும், அதற்கான மருந்துகள் பற்றியும் இவர் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த வருடம் முதல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து ஒட்டகப்பால் நீரிழிவு நோயை குணப்படுத்துவது பற்றி ஆராய்ச்சி நடத்தி வந்தார். இதில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒட்டகப் பால் பெருமளவில் குறைப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கொல்கத்தாவில் இந்திய நீரிழிவு நோயாளிகளுக்கான ஆராய்ச்சி சங்கம் நடத்திய விழாவில் கலந்து கொண்ட டாக்டர் அகர்வால் இந்த தகவலை வெளியிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகப்பால் அருந்தும் மக்களுக்கு நீரிழிவு நோய் வருவதில்லை என்றும் அவர் அப்போது கூறினார்.

ஜெய்பூர், ஜெய்சால்மர், பிகானீர் ஆகிய பகுதிகளில் வழக்கமாக ஒட்டகப்பால் அருந்தும் 2 ஆயிரம் பேரிடம் ஆராய்ச்சி மேற்கொண்டதில் அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இயல்பான நிலையிலேயே இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் அவர் 2007 ஆண்டில் கூறினார்.


பேதி

ஒட்டகப்பால் குடிச்சா பேதி ஆவறது ஏன்னா அது ரொம்ப concentrated ஆக இருப்பதால்தான், ஒட்டகங்கள் இயற்கையாகவே தண்ணீர் இல்லாத பிரதேசங்களில் இருப்பதால் அதுடைய பால், சிறுநீர் எல்லாமே concentrated ஆகத்தான் இருக்கும் இது இயற்கை அதற்களித்த வர பிரசாதம். அதுடைய பாலில் fat, protein எல்லாமே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். மேலும் சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு பயன் உண்டு, மற்ற விலங்கினங்களின் பாலை விட ஒட்டகப்பாலில் insulin கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், எனவே பச்சையாக குடிக்கும்போது சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி அல்லது மாத்திரை மூலம் செலுத்திய பயன் உண்டாகிறது.


சர்க்கரை வியாதிக்கு ஒட்டகப்பால்: ஆய்வு முடிவு!

சர்க்கரை வியாதியை ஒட்டகப்பால் குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. பிகானரியிலுள்ள டயபட்டிக்ஸ் அன்ட் கேர் ரிசர்ச் சென்டரில் பணியாற்றும் மருத்துவர் ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது தொடர்பான ஆய்வில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.


எகிப்திலுள்ள கெய்ரோ பல்கலை கழகத்தில் 54 சர்க்கரை நோயாளிகளுக்கு நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது. இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக் கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை வியாதி நாளுக்கு நாள் குறைந்து வருவது உறுதியானது. ஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.

ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் C யும் அதிக அளவில் அடங்கியுள்ளதும் கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து வலுவாகியுள்ளது.சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மருந்தளிக்கும் பள்ளிவாசல்!


சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் எனும் இடத்தில், பள்ளிவாசல் ஒன்றில், சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்து வருகின்றனர். அந்த மருந்தை, ஒட்டகப் பாலுடன் கலந்து தருகின்றனர்.

நாள்தோறும், காலை 6.30 மணி முதல், 11 மணி வரை சிகிச்சை அளிக்கின்றனர். சர்க்கரை நோய் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள், ஒரு முறை மருந்து சாப்பிடுவதன் மூலம் நோய் கட்டுப்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர்.

மருந்தை, அங்கேயே தங்கி சாப்பிட்டு திரும்ப வேண்டும்.
இந்த மருத்துக்காக ரூ. 120 ம், பள்ளிவாசல் நன்கொடையாக ரூ. 35 ம், ஆக மொத்தம் ரூ. 155 மட்டுமே நோயாளிகளிடம் இருந்து பெறப்படுகிறது. மருந்து சாப்பிட துர்க் நகருக்கு வரும் நோயாளிகள் மருந்து சாப்பிட்ட பின் 4 மணி நேரம் எதுவும் சாப்பிடக் கூடாதாம். 2 மாதங்களுக்கு புளி, மாங்காய், கத்தரிக்காய் சேர்க்கக் கூடாதாம். சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து மூன்று மாதம் சோதனை செய்து பார்த்து கொள்ளுமாறு நோயாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாட்டின் பல பகுதியிலிருந்தும் அங்கு வருகின்றனர். ஆண்டு முழுவதும், சர்க்கரை நோய்க்கு மருந்து வழங்குகின்றனர். நூற்றுக்கு, 70 சதவீதம் பேர், அங்கு மருந்து சாப்பிட்டதன் மூலம், நோய் கட்டுப்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கின்றனர்."ஆண்டுக் கணக்கில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும், அவர்கள் அளிக்கும் மூலிகை மருந்து மூலம், நோயிலிருந்து எளிதில் விடுபடுவதாகக் கூறப்படுகிறது.


சத்திஸ்கருக்குச் சிகிச்சைக்கு செல்பவர்களில், 50 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதாகவும் தெரிகிறது.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment