Thursday, 13 September 2012

சூரியஒளி மின்சாரத்திற்கு முன்னோடி ஜெர்மனி!-ஒரு தவகல்...




சூரிய ஒளி மூலம் மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்து, சூரிய ஒளி மின் திட்டத்திற்கு வழிவகுக்கிறது ஜெர்மனி நாடு. அணு உலைகளுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க ஜெர்மனி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக காற்றாலை, சூரிய ஒளி போன்றவற்றின் மூலம் மின்சாரம் தயாரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சூரிய ஒளி மூலம் அதிகளவு மின்சாரம் தயாரிக்க அந்நாட்டு அரசு அதிதீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கனவே 14 ஜிகா வாட்ஸ் மின்உற்பத்தி திறன் கொண்டு இருந்த சூரிய ஒளி ஆலையில், இந்தாண்டு துவக்கத்தில் கூடுதலாக 7.5 ஜிகா வாட்ஸ் மின்உற்பத்தி செய்யும் சூரிய ஒளியை அமைத்தது ஜெர்மனி. இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதுநாள் வரை 20 ஜிகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மணிக்கு 22 ஜிகாவாட்ஸ் அதாவது 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்து இருக்கிறது. இது 20 அணு உலைகள் இருந்தால், அதில் எவ்வளவு மின்சாரம் கிடைக்கு‌மோ அந்தளவு மின்சாரம் இந்த சூரிய ஒளி மூலம் கிடைத்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் மூலம் நாட்டின் 50 சதவீத மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கணக்கிடப்பட்டு இருக்கிறது.

குற்றச்சாட்டு..
தமிழகத்தில் தான். இதனால்தான், மின்சாரம் அதிகளவில் வீணடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.நாளுக்குநாள் தொழில் பிரிவுகளின் எண்ணிக்கை, குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மின் தேவை அதிகரிக்கும்.இதை சமாளிக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு கொண்டுவந்தாலும், உற்பத்திக்கு தேவைப்படும் காலம் அதிகமாக இருப்பதால், தேவைகளை உடனடியாக சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து, மக்கள் மத்தியில் மின் சேமிப்பு, மின் திருட்டு தொடர்பான விழிப்புணர்வை மின்துறை ஏற்படுத்தி வருகிறது. விழிப்புணர்வு வார விழாவை துவக்கிய மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் முதல்கட்டமாக பள்ளி மாணவர்களிடையே மின் சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் திருட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மின் தடையை சமாளிக்க இனி விழிப்புணர்வு தான் வழி...

மின் உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, மின் நுகர்வை குறைக்கும் முயற்சியில் மின் வாரியம் இறங்கியுள்ளது.

பல்வேறு முக்கிய வாழ்வாதாரங்கள் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தமிழக மக்கள் இருக்கின்றனர். மழை இல்லாததால் விவசாயத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு, மின் உற்பத்தி குறைந்ததால் மின் தட்டுப்பாடு என தட்டுப்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில், தமிழகத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும் ஒரே விஷயம் மின்சாரம்.மின்சாரம் சரியாக கிடைக்காமல், தொழில்துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த, 2001ம் ஆண்டு இதே அ.தி.மு.க., ஆட்சியின் போது மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக இருந்த தமிழகம், தற்போது பற்றாக்குறையில் தவித்து வருகிறது.இதற்கு, மின் உபயோகத்தின் அளவு அதிகரித்துள்ளதே காரணம் என்று கூறினாலும், ஆட்சியாளர்களால், மின் உற்பத்தியில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்தாக உள்ளது. தமிழகத்திற்கு தற்போது, 11 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் அன்றாட உபயோகத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பது, 7,500லிருந்து 8,000 மெகாவாட் மின்சாரம் தான்.
தொலை நோக்குத் திட்டம்..
தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் 2023ல் மின் உற்பத்திக்கு 4.5 லட்சம் கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை கொண்டு வருதல் மற்றும் வினியோகித்தலுக்காக இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மின்உற்பத்தி திட்டத்தை நெறிமுறைப்படுத்துவதுடன், அதிகளவு முதலீட்டை பெறும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment