Friday, 21 September 2012

ஒலிம்பிக் வரலாறு பற்றிய சிறப்பு பார்வை!!


பண்டைய கிரேக்க நாட்டின் ஒலிம்பியா நகரில் கி.மு. 776 ல் நடந்த விளையாட்டுப் போட்டியே முதலா வது ஒலிம்பிக் போட்டி என வரலா று பதிவு செய்துள்ளது. மன்னர் எஜி யஸூடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற ஹெர்குலிஸ், தம து வெற்றியின் அடையாளமாக ஒலிம்பியா என்னும் மைதானத் தை உருவாக்கியதோடு அங்கு விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தினார். கிரேக்க கடவுள் ஜீயஸூக்கு (Zeus) எடுக்கப்படும் திரு விழாக்காலங்களில் தான் ஒலி ம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் 12க்கும் மேற்பட்ட கிரேக்க நகரங்களிலிருந்து போட்டி யாளர்கள் கலந்துகொண்டார்கள். அப்போதும் இந்தப் போட்டிகள், நான்கு வருடங்களுக்கு ஒருமுறைதான் நடத்தப்பட்டன. தடகள ஓட்டப்பந்தயம், மல்யுத்தம், குத்துச் சண் டை, குதிரையோட்டம், மற்றும் ரா ணுவ வீர விளையாட்டுகள் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. அங்கு வசித்த அப்போலனியஸ் என்ற வர லாற்றாசிரியர் எழுதி வைத்த குறிப்பு கள்தான் பண்டைய கால ஒலிம்பிக் போட்டி கள் பற்றி அறிய உதவுகிறது.
ஒலிம்பிக் போட்டிகள், எத்யேஸ் மன் னர் காலம்வரை நீடித்து வந்தது. ரோ மாபுரி ஆட்சியாளர் தியோடோஷய ஸின் விளையாட்டுகள் மீதான வெறுப்பினால், கி.மு 393ல், 203 வது ஒலிம்பிக்ஸோடு பண் டைய ஒலிம்பிக்ஸுக்கு ஒரு முடிவு கட்ட ப்பட்டது.



நவீன ஒலிம்பிக் போட்டிகள்:

பழங்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் கி.மு.776-ம் ஆண்டிலிருந்து கி.பி.392-ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டிருக்கின்றன. தற்போது நடைபெறும் நவீன ஒலிம்பிக் போட்டிகள் ஏதென்ஸ் நகரத்தில் 1896-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்த நவீன ஒலிம்பிக் போட்டிகளின் முன்னோடி பியர் டி.குபெர்டின் என்பவர் தான். 1936-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தான், ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை உணர்த்தும் ஒலிம்பிக் ஜோதியானது ஏற்றப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை ஜோதி ஏற்றப்பட்ட பின்னரே விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கின்றன. மஞ்சள், கருப்பு, நீலம், சிவப்பு, பச்சை என்று ஐந்து வண்ண வளையங்களைக் கொண்டு வெள்ளைத்துணியில் ஒலிம்பிக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

நவீன ஒலிம்பிக்கில் ஜேம்ஸ் கானோலி என்பவரே முதன் முறையாக தங்க பதக்கத்தை வென்றார். குளிர்கால ஒலிம்பிக், கோடைகால ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் (ஊனமுற்றவர்களுக்கு) என ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மொத்தம் 28 விளையாட்டுக்கள் ஒலிம்பிக்கில் இடம்பெறுகின்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பதக்கத்தில் கிரேக்க கடவுள் நைக்கியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். ஸ்விட்சர்லாந்தின் லாசானோ என்கிற இடத்தில் ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையிடம் அமைந்துள்ளது. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் உலகப்போர்களினால் ஒலிம்பிக் போட்டிகள் தடைபட்டது. பாரீஸில் 1900-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தான் பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.



ஐந்து வளையங்கள்:
அனைத்து மக்களிடையே விளை யாட்டு நட்புறவை க் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டவை – ஒன் றுடன் ஒன்று பின்னப்பட்ட ஐந்து வளையங்கள். இந்த 5 வளையங்களும் ஆசி யா, ஐரோப்பா, ஆப்பிரிக் கா, ஆஸ்திரேலியா மற்று ம் (வட மற்றும் தென்) அமெரிக்கா எனும் ஐந்து கண்டங்களைக் குறிப்பிடுவதாகும்.


ஒலிம்பிக் தீபம்:
பழங்கால மற்றும் நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடர்பைஉணர்த்தும் ஜோதியாக ஒலிம்பிக் தீபம் இருக்கிறது. ஒலிம்பிக்ஸ் தீப்பந்தம் கிரேக்கத்தில் உள்ள ஒலிம்பியா நகரில் சூரியக் கிரண ங்களால் பற்ற வைக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறு ம் நாட்டுக்கு எடுத்து வரப்படுகி றது.


வரலாற்றுத் துளிகள்:

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 உலக நாடுகள் கலந்து கொண்டன. தடகள போட்டிகள், குத்துசண்டை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், சைக்கிள் ரேஸ், நீச்சல், ஜிம்னாஸ்டிக், பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் இதில் இடம் பெற்றன.

ஒலிம்பிக்கின் 11-வது நாள் மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மராத்தான் போட்டியில் கிரேக்க வீரர் ஸ்பிரி டான் லூயின் தங்கம் வென்றார்.

1914-ம் ஆண்டு பேரான் டி.குபர்ட் ஒலிம்பிக் கமிட்டியின் 20-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் சங்க மாநாட்டின் போது வெள்ளை நிறத்திலான ஒலிம்பிக் கொடியை நிர்வாகிகளிடம் வழங்கினார்.

1920-ல் ஆன்ட் லெர்ப் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போதுதான் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும் ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்தபடி அமைந்திருக்கும். இது ஒலிம்பிக்கில் பங்குபெரும் 5 கண்டங்களையும் குறிக்கும். மேல்புற வரிசையில் நீலம், கருப்பு, சிகப்பு நிறத்திலும் கீழ்வரிசையில் மஞ்சள், பச்சை நிறத்திலும் வளையங்கள் அமைந்திருக்கும்.
.

1896-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் சேர்த்துக் கெள்ளப்படவில்லை. 1900-ம் ஆண்டு பாரிசில் நடந்த 2-வது ஒலிம்பிக் போட்டியில் கோல்ப், வில்வித்தை, டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

1928-ல் தான் பெண்கள் தடகள போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. த்ற்பொது ஒலிம்பிக் பொட்டியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் ஒருசில நாடுகள் சர்வதேச போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை விதித்து உள்ளன.


 
 *1936ல் ஜெர்மனியில் ஹிட்லர் மேற்பார்வையில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின அத்லெட் வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். தங்கவென்ற அத்தனை பேரையும் பார்த்துப் பேசிய ஹிட்லர் ஜெஸ்ஸி ஓவ ன்ஸை மட்டும் கண்டு கொள்ளவேயில்லை. ஓவன்ஸுக்கு ஏற்பட்ட அவ மானத்தால் கறுப்பர்கள் அடைந்த வலி 1968 மெக்ஸி கோ ஒலிம்பிக்ஸில் வெளிப்ப ட்டது. 200மீ ஓட்டப் பந்தய த்தில் கறுப்பின அமெரிக்கர் களான ஸ்மித்தும் கார்லோஸும் முறையே தங் கம், வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். பரிசு வாங்க வரும் போது இருவரும் கறுப்புப் பட்டையை அணிந்து, அமெரிக்க தேசிய கீதம் ஒலித்தபோது கறுப்பு க்ளவுஸ் அணிந்த கைக ளை உயர்த்திக் காட்டி தங்கள் கோபத்தை உலகுக்குக் காட்டி னார்கள்.

* 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் போட்டியின்போது, ரஷ்ய ராணு வம் ஆப்கானிஸ்தானுக்குள் அத் துமீறி நுழைந்ததைக் கண்டித்து மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியி லிருந்து விலகியது அமெரிக்கா. 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பி க்ஸில், ரஷ்ய வீரர்களின் பாதுகாப்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன என்று அந்த ஒலிம்பிக்ஸை ப் புறக்கணி த்தது ரஷ்யா.

* 1896-2010 வரை நடைபெ ற்ற கோடை மற்றும் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளி ல் அமெரிக்க ஐக்கிய நாடு கள், ஒருங்கிணைந்த ரஷ் யா, ஜெர்மனி (கிழக்கு-மேற் கு) நாடுகள் முதல் மூன்று இடங்க ளைப் பெற்றுள்ளன.

*1920-ல் ஏற்றப்பட்ட கொடியைதான் 1984-ம் ஒலிம்பிக் வரை பயன்படுத்தினர். 1988 சியோல் ஒலிம்பிக்கில்தான் பழைய கொடி மாற்றப்பட்டது. புதிய கொடி ஏற்றப்பட்டது



இதுவரை ஒலிம்பிக் போட்டி நடந்த இடங்கள்:

எதென்ஸ்-1896
பாரீஸ்-1900
செயின்ட் லூயிஸ்-1904
லண்டன்-1908
ஸ்டாக்ஹோம்-1912
ஆண்ட்வெர்ப்-1920
பாரீஸ்-1924
ஆம்ஸ்டர்டாம்-1928
லாஸ் ஏஞ்சல்ஸ்-1932
பெர்லின்-1936
லண்டன்-1948
ஹெல்சின்சி-1952
மெல்போர்ன்-1956
ரோம்-1960
டோக்கியோ-1964
மெக்சிகோ-1968
முன்ஜி-1972
மோன்தொல்-1976
மாஸ்கோ-1980
லாஸ் ஏஞ்சல்ஸ்-1984
சியோல்-1988
பார்சிலோனா-1992
அட்லாண்டா-1996
சிட்னி-2000
எதென்ஸ்-2004
பீஜிங்-2008
லண்டன் -2012

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடங்கள் !!

ரியோ -2016 - பிரேசில் 
டோக்கியோ -2020- ஜப்பான் 

தொகுப்பு  :  மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment