கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய சுற்றுலாத்தளங்கள் இருக்கின்றன. அதை நம் நண்பர்கள் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டவே இந்த பதிவு. முதலில் இன்று கன்னியாகுமரியிலிருந்து ஆரம்பிக்கலாம்.
தொகுப்பு :மு,அஜ்மல் கான்.
கன்னியகுமரி பகவதிஅம்மன் கோவில்
அன்னை பராசக்தி சிவனை திருமணம் செய்ய் வேண்டி தவமிருந்து க்ன்னியாகவே வீற்றிருக்கிறாள். குமரி அம்மன் கன்னி பகவதியாக் வீற்றிருப்பதனால் இம்மாவட்டம் க்ன்னியகுமரி என்று பெயர் பெற்றது. அம்மனின் வைர மூக்குத்தி மிகவு ம் பிரகாசமாக் ஜெலிக்கும் அழகுடையது( அசலை யாரோ ஆட்டையை போட்டுவிட்டதாக ஒரு பேச்சும் உண்டு). சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்பதற்க்கேற்ப வட நாட்டில் சிவன் காசி விஸ்வநாதராகவும், தென்னாட்டில்(குமரியில்) அன்னை பராசக்தி கன்னி பகவதியாகவும் குடியிருக்கிறார்கள்.
குகநாதீஸ்வரர் கோவில்
இது இங்கே எங்களைப்போல் குமரி வாசிகளுக்கே அதிகம் தெரியாது. கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள குக நாதீஸ்வரர் கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. காசியில் விஸ்வநாதராக காட்சியளிக்கும் சிவ பெருமான் குமரியில் ஈஸ்வரராக, குகநாதீஸ்வரராக கோவில் கொண்டுள்ளார். சோழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கோவில் விளங்குகிறது.
சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்
குமரி கடலில் சூரிய உதயம் பார்ப்பதற்கு கண் கொள்ளாக்காட்சியாக இருக்கும். உலகில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் இரண்டையும் ஒரே இடத்தில் பார்க்கக்கூடிய இடங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. சித்திராபவுர்ணமி அன்று சூரியன் மறைவதையும், சந்திரன் தோன்றுவதையும் ஒரு சேர காணலாம். இந்த அபூர்வ காட்சி உலகில் வேறு எங்கும் காண முடியாது. முக்கடலும் சங்கமிக்கும் புனித கடலில் நீராடி கதிரவனை வழிபடுவது புண்ணியமாகும். மஹாபாரதத்தில் அர்ஜீனன் குமரியில் வந்து நீராடினான் என்று வரலாறு கூறுகிறது.
விவேகானந்தர் மண்டபம்
25-12-1892 அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தர் அன்னை பகவதியை வணங்கிய பின் தூரத்தில் தெரிந்த இப்பாறையை கண்டு மகிழ்ந்து நீந்தி சென்று அதில் தியானத்தில் ஆழ்ந்தார். இந்தியாவின் பெருமையை உலகறிய செய்யவேண்டும் என்ற எண்ணம் இங்கு வைத்துதான் சுவாமிக்கு உதயமானது.அதன் நினைவாக சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில் அவருக்கு நினைவு மண்டபமும் சிலையும் அமைக்கப்பட்டு 02-09-1970-ல் அன்றைய ஜனாதிபதி வி.வி.கிரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
திருவள்ளுவர் சிலை
குமரி கடலில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் அருகில் உள்ள பாறையில் விஸ்பரூபத்துடன் காட்சியளிப்பது, உலக திருமறையாம் திருக்குறள் தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலை. 133 அதிகாரங்களில் திருக்குறள் அமைந்திருப்பதை நினைவு படுத்தும் வகையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 01.01.2000 அன்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.திருவள்ளுவர் சிலைக்கும், விவேகனந்தர் மண்டபத்திற்க்கும் சென்று வருவதற்க்கு பூம்புகார் நிறுவனத்தினரால் படகு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.
காந்தியடிகள் நினைவு மண்டபம்
தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு குமரிகடலில் அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் ஒரு நினைவு மண்டபம் 1956-ல் கட்டப்பட்டுள்ளது.அம்மண்டபத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தியதி அவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் சூரிய வெளிச்சம் விழுகிறது. 15-1-1937-ல் காந்தியடிகள் குமரிக்கு வருகை தந்தபோது குமரிக்கடலில் நீராடிய காட்சி, அன்று சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்து வரவேற்ப்பு புத்தகத்தில் தமிழில் கையொழுத்திட்டது இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது.
காமராஜர் நினைவாலயம்
கருப்பு காந்தி என்றும், கர்மவீரர் என்றும் குமரி மக்களால் அப்பச்சி என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் நினைவாக அமைகக்ப்பட்டுள்ள இம்மண்டபம் 02.10.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. இங்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு,தேசப்பற்று என பல்வேறு புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment