Monday 15 October 2012

சர்வதேச மாணவர் தினம் (World Students Day ) - ஒரு சிறப்பு பார்வை....


Abdul Kalamஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல்கலாமின் பிறந்த தினத்தை சர்வதேச  மாணவர் தினம் (World Students Day ) ஆக  ஐ.நா.சபை அறிவித்தது. 

இந்தியாவின் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத மரியாதை இது.

உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேலான மாணவர்களை நேரில் சந்தித்துஉரையாடியுள்ள அப்துல் கலாமை பெருமைப்படுத்தும் விதமாக இந்தத் தினம் உலகம்முழுவதும் கொண்டாடப்படுகிறது.



எளிமை, நேர்மை, நாட்டுப் பற்றுக்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர் அப்துல் கலாம். தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, விஞ்ஞானத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ஆராய்ச்சிகளிலேயே இளமையைக் கரைத்துக் கொண்டு, வெளிநாட்டு உதவிகளுக்காக காத்து நின்ற இந்தியாவுக்கென்று சுயமான தொழில்நுட்பத்தில் ஏவுகணையை வடிவமைத்தவர் டாக்டர் கலாம். அக்னி, பிருத்வி போன்றவையெல்லாம் உருவானதில் டாக்டர் கலாமின் பங்கு ஏராளம்.

இந்தியாவின்முதல் சுய தொழில்நுட்ப செயற்கை கோள் என பல்வேறு அறிவியல் சாதனைகளுக்குசொந்தக்காரரான அப்துல் கலாமுக்கு இந்த நாளில் உலகம் முழுவதும் இருந்துபிறந்தநாள் வாழ்த்துகள் குவிகின்றனமாணவர்களும்அவருடைய பிறந்த நாளைமாணவர் தினமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

முக்கிய சிந்தனைகளில் சில..!

* நம்மிடம் இல்லாதது எதுவும் இல்லை. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில். 54கோடி இளைஞர்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. 7 ஆயிரம் மைல் நீளமுள்ளகடல் எல்லை, 1,500 டி.எம்.சி. நீரை கடலில் ஆண்டுதோறும் சேர்க்கும் ஜீவநதிகள். எல்லாம்இருக்கிறது.

* என்னால் முடியும் என்ற நம்பிக்கை நம்மிடம் இல்லை. அந்த நம்பிக்கையை ஒவ்வொருஇளைஞர்களிடமும் கொண்டு வருவதுதான் நமது கடமை.

* 2020க்குள் இந்தியா முன்னேறிய நாட்டு நிலைமையை அடைய வேண்டுமானால் நதிகள்இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் நதிகள் இணைப்புத் திட்டத்தைநிறைவேற்றும் தலைமுறை யார் என்பதே இங்கு வினா? அந்த கனவு நனவாககடுமையாக உழைக்க வேண்டும்.

ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல்கலாம்  அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரத்தில் பிறந்தார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்தியவிண்வெளி ஆய்வு மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு பணிகளில்முக்கிய பங்கு வகித்துள்ளார்

இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான்-மிமி (1998)சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார். இந்திய விண்வெளி அறிவியல் மற்றும்தொழில்நுட்பக் கழகத்தின் (திருவனந்தபுரம், கேரளா) வேந்தராகவும் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப்பேராசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும்ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகை பேராசிரியர் போன்ற சிறப்பு நிலைகளில் உள்ளார்.

விருதுகள்..!

இந்திய அரசு இவருக்கு வழங்கி உயரிய விருதுகள் : பத்மா பூஷன் (1981), பத்மா விபூஷன்(1990), பாரத் ரத்னா (1997).

எழுதியுள்ள நூல்கள்:
    அக்னிச் சிறகுகள்
    எழுச்சித் தீபங்கள்
    இந்தியா 2020
    இந்தியா 2010
    அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment