Saturday 13 October 2012

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் வாழையிலையின் பங்கு! ஒரு பார்வை....

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .வைபோகத்தில்  
நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். 

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

வாழையிலை சாப்பாடு....

வாழையிலையில்   எப்படி எங்கு பதார்த்தங்களை வைப்பது, எப்படி சாப்பிடுவது   பற்றி   பட விளக்கம் -


இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிரில் முடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சாப்பாட்டின் போது சேர்த்துக் கொள்ள வேண்டும். 

1. உப்பு 

2. ஊறுகாய் 


3. சட்டினி 


4. கோசுமரி (Green Gram Salad) 


5. கோசுமரி (Bengal Gram Salad)


6. தேங்காய் சட்டினி 


7. Beans Pallya (Fogath)
 


8. Gujje Pallya (Jack Fruit Fogath) 


9. சித்ரான்னங்கள் (எலும்பிச்சை சாதம், புளி சாதம், தேங்காய் சாதம்) 


10. அப்பளாம் 


11. சிப்ஸ் 


12. இட்லி 


13. சாதம்


14. பருப்பு 


15. ரைத்தா 


16. ரசம் 


17. Uddinahittu (Black Gram Paste)


18. கத்திரிக்கா பக்கோடா 


19. Menaskai (Sweet And Sour Gravy)
 


20. Goli Baje (Maida Fry) 


21. அவியல் 


22. 
வெண்டைக்கா பக்கொடோ 


23. கத்திரிக்கா சாம்பார் 


24. ஸ்வீட் 


25. Gojjambade (Masalwada Curry)
 


26. Kayi Holige (Sweet Coconut Chapati) 


27. Vangi Bath (Vegetable Upma) 


28. Bharatha (Sour Ginger Gravy)


29. பாயசம் 


30. தயிர் 


31. மோர்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் . 


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

வாழையிலை குளியல்...

தொழுநோய், சோரியாசிஸ், வெண்குஷ்டம் போல, எந்த தோல் வியாதி இருந்தாலும், அதிகமா குண்டான ஆளுங்களும், ஊளை சதை ஆசாமிங்களும் இந்த இயற்கை மருத்துவ சிகிச்சை முறையில இந்த வாழை யிலை குளியல் சிகிச்சை  செய்யலாமுங்க!

இலை மேல முதுகு தரையில படும்படி நல்லா மல்லாக்கா படுக்க வைச்சபிறகு, நோயாளியோட உடம்பு முழுக்க மூடுகிற மாதிரி வாழையிலைகளை கொண்டு மூடி விடணும். இலையோட உள்பகுதி, அதாவது நாம சாப்பிட பயன்படுத்திற பகுதி, அவரோட உடம்புல படும்படி இலையை வைச்சி வாழை நாரால கட்டிடனும்.மூச்சி விடறதுக்காக சின்ன ஓட்டை மட்டும் போட்டு, அப்படியே அவரை ஒரு அரை மணி நேரம் இருக்கிற மாதிரி விட்டுடணும்.

சொல்ல மறந்திட்டேனே! அவரு உள்ளாடையில மட்டும் தான் இருக்கணும்பா! பக்கத்திலேயே அவரை கண்காணிக்க ஒருத்தரு இருக்கணும்.

அரை மணி ஆயிட்ட பிறகு, கட்டுகளை எல்லாம் அவிழ்த்து, அவரை ரிலீஸ் பண்ணிடனும்
அவரை எழுப்பி பாத்தோம்னா, அந்த இலையெல்லாம் தண்ணியா இருக்கும். அந்த அளவுக்கு அவரு உடம்புல இருந்து கெட்ட நீர் வெளிபட்டு இருக்குமுங்க. அவரு உடம்பு கூட, வேத்து கொட்டி, ஏதோ குளிச்சிட்டு வந்தவக மாதிரி இருப்பாரு.

அவரு ஒரு அரை மணிநேரம் நிழல்ல ஓய்வு எடுத்த பின்னாடி பச்சை தண்ணியில குளிக்கணும்.

இந்த யூஸ் செய்த இலைகளை ஆடு மாடுகளுக்கு திங்க கொடுத்திடாதீக! சரியா? அதுல எல்லாம் நச்சு தன்மை இருக்குமுங்க! எல்லாத்தையும் பூமில குழி தோண்டி புதைச்சிடுங்க!

இந்த சிகிச்சை செய்யும் போது யாருக்காவது நெஞ்சு படபடப்பு, அசௌகிரியம் ஏதாச்சும் இருந்ததுன்னு சொன்னா, உடனே அவரை கட்டுயெல்லாம் அவிழ்த்து ரிலீஸ் பண்ணிடுங்க! லேட் பண்ணிட கூடாது.

வாழையிலை வெய்யில்ல படும்போது Photosynthesis, தமிழ்ல அதுக்கு என்னன்னு சொல்லுவாங்க அப்பு? தெரியலியா? எனக்கும் தெரியல, இருங்க! போய் Dictionary -ஐ பாத்துட்டு சொல்றேன்.

ஆங்.. அதுக்கு பேரு ஒளிசேர்க்கையாம்பா! இந்த ஒளிசேர்க்கை நிகழ்ச்சி நடக்கும்போது, Chlorophyllஅதாம்பா பச்சையம்! அது, நம்ப உடம்புல புகுந்து நம்ப உடம்போட நோய் எதிர்க்கிற தன்மையை வலுபடுத்துது. இந்த சிகிச்சை முறையை நோயாளிங்க தான் இல்ல, ஆரோகியமா இருக்கிறவங்களும் மாசத்தில ஒரு முறை செய்யலாமுங்க.


நம்ப தோல்ல இருக்கிற துவாரமெல்லாம் திறக்கபட்டு, கெட்ட நீரெல்லாம் வெளியே போன பின்னாடி, நோயாவது நொடியாவது. நாம ஆரோகியமா வாழ, எந்த டாக்டரும் வேணாம் , கண்டக்டரும் வேணாம்! ஆமாம்! நூறு வயசு வாழறதுக்கு இது க்யாரண்டியான வழிமுறைங்க!

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment