சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறார். இதுவரை 190 டெஸ்ட் (15,533 ரன்கள், 51 சதம்), 463 ஒருநாள் (18,426 ரன்கள், 49 சதம்) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் மொத்தம் 100 சதம் அடித்து சாதித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் பிராட்மேனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் வீரராக நிபுணர்களால் வர்ணிக்கப்படும் தற்போதைய கிரிக்கெட் உலகின் சகாப்தம் என்று அழைக்கப்படும் தெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது வழங்கப்படுகிறது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிலார்ட் கூறும்போது,
இந்திய கிரிக்கெட் வீரர் தெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா என்ற உயரிய விருது வழங்கப்படும் என்றார்.
ஆஸ்திரேலியா அல்லாத ஒருவர் இந்த விருதை பெறுவது அபூர்வமானது. இந்த விருதை பெறும் 2-வது இந்தியர் தெண்டுல்கர் ஆவார். இதற்கு முன்பு முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலிப் சொரப்ஜி இந்த விருதை பெற்றார். ஆஸ்திரேலிய மந்திரி சைமன் இந்தியா வரும்போது தெண்டுல்கருக்கு இந்த விருது வழங்கப்படும்.
இந்த விருதை பெறும் 3-வது கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் ஆவார். இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு கிளைவ் லாயிடும், 2009-ம் ஆண்டு பிரைன் லாராவும் (வெஸ்ட்இண்டீஸ்) இந்த விருதை பெற்றனர்.
தெண்டுல்கர் 190 டெஸ்ட்டில் 15,533 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும் எடுத்துள்ளார்.
இதுவரை சச்சின் எடுத்துள்ள 51 டெஸ்ட் சதங்களில் 11 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 20 முறை சமநிலையும் 19 முறை வெற்றியும் அடைந்துள்ளது.
40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார்.
தெண்டுல்கர் பெற்ற முக்கிய விருதுகள்......
1994 அர்ஜூனா விருது.
1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.
1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது.
1999-பத்மசிறீ விருது.
2008-பத்மவிபூஷன் விருது.
1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.
1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது.
1999-பத்மசிறீ விருது.
2008-பத்மவிபூஷன் விருது.
இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் சச்சின்க்கு சிறப்பு விருது 2009 -இல் வழங்கப்பட்டது.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment