Thursday, 31 May 2012

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா. ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தொழுகையாளிகள் மட்டுமே மறுமையில் சுவனத்தை அடைய முடியும், தங்களுடைய இறைவனை கண்குளிர கண்டு மகிழ முடியும் தொழாதவர்களால் அது அறவே சாத்தியமில்லை என்பதையும் தொழுகை எனும் இறைவணக்கம் தான் மனிதனை தீய வழியிலிருந்துத் தடுத்து நேர்வழியில் செலுத்தும் என்பதையும் பார்த்தோம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதால் தீயவழிக்கு இழுத்துச் செல்லும் கேடுகெட்ட கலாச்சாரம் மிகுந்த காலத்தில் வாழ்ந்து வருவதால் குழந்தைகளின் சிறுப் பிராயத்திலேயே நேர்வழியில் செலுத்தும் தொழுகையைப் புகுத்தி விட வேண்டும் தாமதித்தால் தீய கலாச்சாரம் உள்ளத்தில் புகுந்து விட்டால் முற்றியப் பிறகு மாற்றுவதுக் கடினமாகி விடலாம்.

ஐம்பதிலும் வளையுமா ?

ஐம்பதில் வளைந்தவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள் என்று ஒரு சிலரைப் பார்த்து தங்கள் குழந்தைகளுக்குத் தொழுகையை ஏவும் விஷயத்தில் பெற்றோர்கள் நாட்களை தள்ளிப் போடுகின்றனர். அவர்கள் பார்க்கும் ஐம்பதில் வளைந்தவர்கள் எல்லாம் அல்லாஹ்வால் வளைக்கப்பட்டவர்கள் என்பதைக் காணத் தவறி விடுகின்றனர்.

மனிதர்களின் உள்ளங்களை அல்லாஹ் தனது இரு விரல்களுக்கு மத்தியில் வைத்திருப்பதால் அவன் நாடும்பொழுது தனது வல்லமையை நிலைநாட்டுவதற்காக இனித் தேராது என்று கைவிடப்பட்டவருடைய உள்ளத்தையும் புரட்டி நேர்வழியில் செலுத்தி அவரை தனது தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களில் ஒருவராகவும் ஆக்கி விடுவான்.

படித்ததினால் அறிவுப் பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம் படிக்காத மேதைகளும் பூமியில் உண்டு என்றுக் கூறுவதைப் போல் படிக்காதவர்களில் ஆயிரத்தில் சிலரை படித்தப் பண்டிதர்களுக்கு நிகரானவர்களாக உருவாக்குவது இறைவனின் வல்லமையில் உள்ளது.

சர்வ வல்லமைப் படைத்த உலக அதிபதியாகிய அல்லாஹ் தனது வல்லமையிலிருந்து சிறிதளவை கூட உலகில் உள்ள எவருக்கும் வழங்கவில்லை என்பதால் நம்முடையப் பிள்ளைகள் வளர்ந்து தீமையை உள்ளத்தில் புகுத்திக்கொண்டு வழிகெட்டப் பின் அவர்களை நேர்வழியில் செலுத்த நினைப்பது நமக்கு முடியாதக் காரியமாகி விடும். அல்லாஹ் அவனை தட்டழிந்து கெட்டலைய விட்டு விட்டால் நம் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்காருவதைத் தவிற வேறெதுவும் செய்ய இயலாது.

அதனால் நமக்கு விதியாக்கப்பட்ட உள்ளத்தில் பதியும் சிறுப் பிராயத்தில் குழந்தைகளுக்கு தொழுகையைப் புகுத்தி விடவேண்டும்.

தொழுகையைப் புகுத்தி விடுவதுடன் நமது கடமை முடிந்தது என்றில்லாமல் குழந்தைகள் தொழுகையாளிகளாக ஆவதற்கு வல்லோன் அல்லாஹ்விடம் பெற்றோர்களாகிய நாமும் பிரார்த்திக்க வேண்டும்.

இப்ராஹீம் நபி(அலை)அவர்கள் இறைவனின் உத்தரவின்படி தன் மனைவி, பிள்ளையை வனாந்திரத்தில் விட்டுத் திரும்பும் பொழுது அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவதற்காக இறைவனினிடம் பிரார்த்தித்தது சான்றாகும்.

இன்ன இடத்தில் விட்டுத் திரும்பி விட வேண்டும் என்பது இறைவனின் உத்தரவாக இருந்ததால் அவர் அங்கிருந்து திரும்பியதும் அவர்களுக்கு இறைவன் பொறுப்பாளியாகி விடுகிறான்.

அவர்களுக்கு இப்பொழுது என்னத் தேவைப்படும் ? எதிர் காலத்தில் என்ன தேவைப்படும் ? என்பதை தனக்கு உத்தரவிட்ட இறைவனுக்கு நன்குத்தெரியும் என்பதை இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் நன்றாக அறிந்துகொண்டே அங்கிருந்து வெளியாகி சற்று மறைந்தப் பின்னர் தனது மனைவிப் பிள்ளைக்கு நிகழ்கால, எதிர்காலத் தேவைகளை தன்னுடைய அறிவுக்கு எட்டும்வரை இறைவனிடம் பட்டியலிட்டார்கள்.


14:37. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில் இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! என்று உள்ளம் உருகப் பிரார்த்தித்து விட்டுத் திரும்பினார்கள்.


இந்தப் பிரார்த்தனையை செவியுற்ற அல்லாஹ் இதை அதிகப் பிரசங்கித்தனம் என்றுக்கூறவில்லை என்னுடையப் பொறுப்பில் விட்டவர்களுக்கு என்ன தேவைப்படும் என்று எனக்குத் தெரியாதா ? நீ பட்டியிலிட்டால் தான் எனக்குத் தெரியுமா ? உனக்குத் தெரியாததெல்லாம் எனக்குத் தெரியும் என்று கோபப்பட்டு பதிலளிக்கவில்லை மாறாக அவர்கள் பட்டியலிட்ட இறைவணக்கம், சகோரத்துவம், உணவுப் போன்ற மூன்று அம்சங்களையும் குறைவின்றியே நிறைவேற்றிக் கொடுத்தான்.

இதன் மூலமாக நம் உள்ளம் நாடும் நமக்குத் தேவையான நல்ல விஷயங்களை நமது நாவு; வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தை இறைவனிடம் பெறவேண்டும்.


நம்முடைய குழந்தைகள் ஸாலிஹான குழந்தைகளாக வளரவேண்டும் என்று நினைத்தால் தொழுகையை குழந்தைப் பருவத்தில் புகுத்தவதுடன் புகுத்தியத் தொழுகை உள்ளத்திலிருந்து வெளியேறாமல் நிலை கொள்வதற்காகவும் அவர்களின் எதிர்கால தேவைகளாகிய உணவும், பிற மனிதர்களின் உள்ளங்கள் ஈர்க்கப்பட்டு சகோதர வாஞ்சையுடன் வாழ்வதற்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.


தொழுவார், சகோதரத்துவம் இருக்காது, தொழுகையும் சகோதரத்தவமும் இருக்கும், பொருளாதாரம் இருக்காது பொருளாதாரத்தைத் தேடும் பொழுது சறுக்கிடுவார். இப்படி எதாவது ஒன்று அமைந்தால் மற்றொன்று அமையாததைப் பார்க்கிறோம்.


மூன்றும் ஒருங்கே அமையப் பெறவேண்டும் என்றால் குழந்தைகளை சிறுப்பிராயமாக இருக்கும் பொழுது மூன்றுக்கும் முதன்மையானதான தொழுகையைப் புகுத்துவதுடன் அவர்களது இதரத் தேவைகளை இறைவனினடம் பெற்றோர் கேட்க வேண்டும். மூன்றும் ஒருவருக்கு ஒருங்கே அமையப் பெற்று விட்டால் அவரின் சுவனத்தை தடை செய்ய எவராலும், எந்த சக்தியாலும் முடியாது.



இஸ்லாம் வந்தது மனித சமுதாயத்தை வழிகேட்டிலிருந்து நேர்வழியில் செலுத்துவதற்காகத் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆன் - நபிமொழி நெடுகிலும் காணப்படுவதைப் பார்க்கிறோம் அதில் ஒன்று தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்கள் ஷைத்தானின் தீமையிலிருந்து பாதுகாவல் தேடும் பிரார்த்;தனை மிகப் பெரிய சான்றாகும்.



ஏன் என்றால் ? அந்த தாம்பத்தியத்தின் மூலமாகவே குழந்தைப் பாக்கியம் அருளப்படுவதால் அங்கு ஷைத்தான் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்திலும் இறைவனின் பாதுகாவல் கொண்டு ஷைத்தானை விரட்டுவதற்காக


بِسْمِ اللَّهِ , اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ , وَجَنِّبِ الْشّيْطَانَ مَا رَزَقْتَنَا

பிஸ்மில்லாஹி, அல்லாஹூம்ம ஜன்னிப்னாஷ் ஷைத்தான, வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஜக்தனா



உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்யத்தில் ஈடுபடச் செல்வதற்கு முன் 'அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறி நெருங்குகிறேன். 'இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு ! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப்போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் புகாரி : 141ஃ138.



நல்லதை தெரிந்துக் கொள்வதில் இஸ்லாம் நாணத்தைப் பேணச் சொல்லவில்லை, தீமையைத் தெரிந்து கொள்வதில் இஸ்லாம் வெட்கப் படச்சொன்னது.



ஷைத்தான் ஒருவரை நெருங்குவதால் அவரது பொருளாதாரத்தை சரித்திடுவதில்லை, அல்லது அவரது பொருளாதாரத்தை மேம்படுத்திடுவதில்லை ஒழுக்கங்கெட்ட செயல்கள் புரிவோரை இறைவன் வெறுக்கிறான் என்பதை அறிந்திருந்த ஷைத்தான் ஒழுக்கக்கேட்டைத் தூண்டி இறைவளை வணங்கும் சிந்தனையை மாற்றி விடுவதைத் தவிற வேறெதுவும் அவனால் செய்ய இயலாது.



ஒழுக்கங்கெட்ட செயல்கள் புரிவோரை இறைவன் கோபம் கொள்கிறான் என்பதற்கு நூஹ் (அலை) அவர்களின் மகனை அவர்களின் கண் முன்னே அலை ஒன்றை அனுப்பி அடித்து சென்றப் பிறகு அதைக் கண்ணுற்ற நூஹ்(அலை)அவர்கள் மனம் உடைந்து இறைவா ! இவன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனல்லவா ? என்று ஆதங்கத்துடன் கேட்டதற்கு அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல என்றுக்கூறி விட்டு அவன் ஒழுக்கங்கெட்டவன் என்ற பதிலை அல்லாஹ் அளித்தான்.


ஏகஇறைவனை மறுத்த மகனை, ஒழுக்கங்கெட்ட செயல்களில் மூழ்கித் திளைத்த மகனை கண்முன்னே நிகழ்ந்த இறைவனின் கோபத்திலிருந்து நபியாக இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. உலகில் இப்படி என்றால் ? மறுமையில் இதை விட கடுமையானதாக இருக்கும். தந்தையின் கண் முன்னே மகனும், மகனின் கண் முன்னே தந்தையும் சித்ரவதை செய்யப் படுவார்கள்.


ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரை அங்கு தெளிவாக அறிந்து கொள்வார்கள் என்பதற்கு இப்ராஹீம் நபி(அலை)அவர்கள் தன் தந்தையின் நிலையைக் ண்டு தவித்து இறைவனிடம் இறைவா ! மறுமையில் என்னை கண்ணியப்படுத்துவதாக வாக்குறி அளித்திருந்தாய் ! இங்கு நான் மட்டும் கண்ணியமடைந்து என் தந்தை சித்ரவதைப் படுவதை என்னால் சகிக்க முடிய வில்லை அதனால் என் தந்தையை மன்னித்து அவருக்கு கண்ணியத்தை வழங்கு என்றுக் கேட்க ? அதை இறைவன் மறுத்து அவருடைய கண் முன்பாகவே அவரின் உருவத்தை மாற்றி நரகில் வீசப் பட்டது தெளிவான ஆதரமாகும்.



உலகில் மகனுக்குத் தலைவலி என்றாலே தாங்கிக் கொள்ள முடியாத தாய்,தந்தையால் மறுமையில் மகனை நெருப்பால் பொசுக்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியுமா ? இறுதித் தீர்ப்பு நாளின் மீது உறுதியான நம்பிக்கை இருந்தால் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளருவதற்காக தொழுகையைப் புகுத்தி விடுவதுடன் இறைவனிடம் அவர்களின் உலக – மறுமைத் தேவைகளைப் பிரார்த்திக்க வேண்டும்.



பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்த்தெடுத்தால் அது இம்மை- மறுமையில் அவர்களுக்கு மட்டும் நலவாக அமையாது, மாறாக வளர்த்தெடுக்கும் பெற்றோருக்கும் நலவாக அமைந்துவிடும் வயதான காலத்தில் அன்புடனும், பரிவுடனும் பராமரிப்பார்கள், மரணித்தப் பின்னரும் கப்ரு வாழ்க்கைக்காகவும், மறுமை வாழ்க்கைக்காகவும் இறைவனிடம் உள்ளம் உருகப் பிரார்த்திப்பார்கள்.



உலகில் நற்செயல்கள் புரிந்து ஒரு மலை அளவு நன்மைகளை குவித்திருந்தாலும் மரணித்தப் பின்னர் அவர்களின் ஒழுக்கமுள்ளப் பிள்ளைகள் அவர்களுக்காக கேட்கும் துஆ மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகளைப் போல் குவியக் கூடியதாக அமைந்து விடும்.


மரணத்திற்குப் பின் தன்னை ஈன்ற தாய் தந்தையரின் மறுமை வாழ்வுக்காக பிள்ளைகள் பிரார்த்திக்க வேண்டும் என்பதை அறியாமலே இன்றும் எத்தனையோப் பிள்ளைகள் இருக்கின்றனர் அதற்கும் தாய், தந்தையர் தான் காரணம் தொழுகையை சிறுப் பிராயத்தில் அவர்களுக்குப் புகுத்தி விட்டால் மார்க்கத்தில் ஏவப்பட்டுள்ள நற்செயல்களை சிறிது,சிறிதாக கற்றறிந்து கொள்வார்கள்.


தாய், தந்தையார் குழந்தைகளுக்கு ஏவுவது கடமை நூஹ் நபி(அலை) அவர்களின் மகனைப்போல் ஏற்றுக் கொள்ளத் தவறி வழிக்கெட்டால் அதற்கு தாய், தந்தை பொறுப்பாகி விடமுடியாது.


தொழுகையை ஏவ வேண்டும், அந்தத் தொழுகை உள்ளத்தில் பதிய இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

திருமண மண்டபம் பார்த்து பதிவு செய்யும் முன் கவனிக்க‍வேண்டிய விஷயங்கள்...


இந்தக் காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை கூட எளிதில் கிடைத் து விடுவார்; ஆனால் திருமண மண்டபம் கிடைப்பதுதான் குதி ரைக் கொம்பாக இருக்கிறது. சமீ பத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கே, இரு ந்த போர்டில் ஏறத்தாழ இந்த ஆண்டு முழுவதும் இருக்கும் அனைத்து முகூர்த்த நாட்களுக்கு ம் அந்த மண்டபம் புக் ஆகி இருந் ததைப் பார்க்க முடிந்தது. இன்று திருமண மண்டபங்களுக்கு நல்ல கிராக்கி சார்! சினிமா தியேட்டர்களை இடித்துவிட்டு ஒன்று ஷாப் பிங் வளாகம் கட்டுகிறார்கள்; அல்லது திருமண மண்டபம் கட்டுகி றார்கள்” என்றார் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். இன்று சாதாரண வசதிகள் கொண்ட, சிறிய திருமண மண்டபங்களுக்குக் கூட நாள் ஒன்றுக்கு ஐம்பதா யிரம், எழுபத் தைந்தாயிரம் என்று வாடகை கேட்கிறார் கள். இதைத் தவிர மின் கட் டணம், அலங்காரம், தண்ணீ ர் அது, இது என்று சொல்லி இன்னும் ஆயிரக்கணக்கில் கறந்து விடுகிறார்கள். என வே, திருமண மண்டபம் பார்த்து பதிவு செய்வதை கவனமுடன் செய்ய வேண் டியது மிக அவசியம்.
சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில் திருமணம்நடத்த வேண்டுமென்றால், நகரத்தின் எந்த ஏரியாவில் மண்டபம் வேண்டும் என்ப தைத் தீர்மானித்துக் கொள் ள வேண்டும். அதனை மாப் பிள்ளை வீட்டாருடன் கல ந்து ஆலோசித்து முடி வெடு ப்பது நலம். பொதுவாக எல் லா திருமண மண்ட பங்களி லும், டோக்கன் அட் வான்ஸ் என்பதெல்லாம் கிடையாது. புக் பண்ணும்போதே மொத்த தொகை யையும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். அதன் பின்னால், கேன்சல் செய்தால் பணம் வாபஸ் வாங்குவது அவ்வளவு சுலபமில்லை. எனவே, மண்டபத்தை புக் பண்ணுவ தற்கு முன்னால், தீர ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். திரும ணத்துக்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை உத் தேசமாகக் கணக்கிட்டு, அத ற்கேற்ப மண்டபத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். திருமண ஹாலில் எத்தனைப் பேர் அமரலாம், சாப்பாட்டுக் கூடத் தின் கொள்ளவு என்ன, தங்கும் அறைகள், குளியலறைகள், கழிப் பறைகள் போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றனவா, குளிய லறைகளில் வெந்நீர் வசதி உண்டா, குடி தண்ணீருக்கு என்ன ஏற் பாடு போன்றவற்றைத் தெரிந்து கொண் டுதான் இறுதி முடிவு எடுக்க வேண் டும்.குறிப்பிட்ட மண்டபத்தில் தான் திருமணம் செய்வது என்று முடிவு செய்துவிட்டால், மூன்று, நான்கு முகூர்த்த நாட்களை முடிவு செய்து க் கொண்டு, அதில் மண்டபம் கிடை க்கக் கூடிய நாளில் முகூர்த்தத்தை முடிவு செய்யலாம். இல்லையெ னில் முகூர்த்த நாளை முடிவு செய் து கொண்டு, அந்த நாளில் கிடைக்கிற மண்டபத்தில் திருமணத்தை நடத்திக் கொள்ள வேண்டும்.
மண்டப நிர்வாகமே மண்டபத்தில் உள்ள அறைகளுக்கான பூட்டு,சாவிகளைக் கொடுப்பார்க ள், இல்லை நாமே எடுத்துக் கொண்டு வரவேண்டுமா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப ஏற் பாடுகள் செய்ய வேண்டும். எப்படியென்றாலும், எந்த அறை யாருக்கு ஒதுக்கப்படு கிறது என்பதை முன்னதாக வே முடிவு செய்து, சம்மந்த ப்பட்டவர்களிடம் பூட்டு, சாவியை ஒப்படைத்துவிட்டு, டூப்ளிகேட் சாவிகளை ஒருவர் பத்திரமாக வைத்துக் கொண்டால், எதிர்பாரா மல், சாவி தொலைந்து போனாலும் பிரச்னை இல்லாமல் இருக்கு ம். மண்டபத்தில் இருக்கும் அறைகளுக்கு நிர்வாகத்தின ரே பூட் டும், சாவியும் கொடுப் பார்கள் என்றாலும் விலை உயர்ந்த பொருட்கள் வைக்கு ம் அறைகளைப் பூட்டுவதற்கு, நாமே சொந்தமாக பூட்டு, சாவி எடுத்துக் கொண்டு போய் பயன்படுத்து வது நல்லதொரு முன் ஜாக்கிரதை நடவடிக்கை. அடுத்ததாக, கார் பார்க்கிங் வசதி, எமர்ஜென்ஸி வழி, சமையல்கூடத்தில் உள்ள வசதிகள் போன்றவ ற்றை நேரில் பார்த்து, ஏற்பாடு செய்வ து நல்லது. மண்டப அலங்காரம், வாழை மரம், மின் அலங்காரம், குடி தண்ணீர், மற்ற உபயோக ங்களுக்கான தண்ணீர் போன்றவை மண்டப வாட கையில் அடங்குமா அல்லது உபரியா க நாம் பணம் செலவழித்து செய்ய வேண் டுமா என்பதை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். சில மண்டபங் களில், இந்த ஏற்பாடுக ளுக்கு வெளியாரை அனுமதிப்பதில் லை. அதற்கேற்ப திருமண காண்டிரா க்டரிடம் பேசி முடிக்க வேண்டும்.
இப்போதெல்லாம் நெரிசல் மிகுந்த சாலைகள் வழியாக போக்குவ ரத்து இடைஞ்சலாக மாப்பிள்ளை அழை ப்பு ஊர்வலம் நடத்துவதில்லை. ஆ னால், நீங்கள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடத்த வேண்டுமென்றால் , அப்பகுதியிலுள்ள காவல் நிலையத் திலிருந்து ஊர்வல அனுமதியை வாங்கிக் கொள்ள வேண்டும்.





நன்றி :கௌதம் ராம் அவர்கள்.

காதல் முக்கியமா? உறவு முக்கியமா?- ஒரு சிறப்பு பார்வை 

Post image for காதல் முக்கியமா? உறவு முக்கியமா?

இப்படியெல்லாமா காதல் என்பது இருக்கும் என்று பலர் அதிசயிப்பார்கள்.

ஆணும் ஆணும் காதலிப்பது, பெண்ணும் பெண்ணும் காதலிப்பது என்பதெல்லாம் ஏதோ ஒரு புரட்சி என்று தோன்றுமே தவிர, இது காதல் கிடையாது. உடலில் ஜீன்கள் செய்யும் சேட்டை அவ்வளவுதான்.

இதுபோலவே தவறான உறவு முறைகளுக்குள் உண்டாகும் காதலும் ஏடாகூடக் காதலே. அண்ணன் உறவு முறை, தகப்பன் மகள் உறவு முறை போன்றவற்றில் காதல் ஏற்பட்டுவிட்டது என்பதை சமூகம் ஒப்புக்கொள்ளாது.

உண்மையில் என் சகோதரரை காதலிக்கிறேன் என்பது சம்பந்தப்பட்டப் பெண்ணைப் பொறுத்தவரை அக்மார்க் நிஜமாகவே இருக்கலாம். ஆனால், அதற்கான இதனை காதல் எனும் வரிசையில் சேர்ப்பித்துவிட முடியாது.

பலரது ஏச்சுக்கும், பேச்சுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாகும் உறவு முறைகளைக் காதல் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட காதலில் இருந்தும் வெளியேறுவதுதான் நல்லது.

உண்மைக் காதல் என இதனைக் கடைசி வரை கடைப்பிடிக்க நினைத்தால் கண்டிப்பாக பிற்காலத்தில் முன்னர் செய்த காதலுக்காக வருத்தப்பட வேண்டியிருக்கும்.

இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.



காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம்.நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.


பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.


ஒரு காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை அவர்கள் அதிகமாக வீட்டில்தான் இருப்பார்கள். பொழுதுபோக்கு என்பது ரேடியோ மட்டும்தான் இருக்கும். டிவி இருக்கும் வீடு விரலைவிட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கும். இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தப்படியே எல்லாம் பார்க்கலாம்,பேசலாம் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பெண்ணை படிக்கவைத்து, படிப்புக்கு பிறகு அவளுக்கு திருமணம் செய்வதற்கு பேசி முடித்து, பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கும் நிலையில், அந்த பெண் திடிரென்று யாரோ ஒருவனுடன் ஓடிவிடுகிறாள் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது உண்மைதானே?





திருமணக் காதலர்கள!





குறிப்பாக நம் நாட்டைப் பொறுத்தவரை மிக அதிகமான திருமணம் என்பது பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணமாகும்.

திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழையும் வரை ஒருவரை ஒருவர் முழுசாக பார்த்து கூட இருக்கமாட்டார்கள். ஒரு வார்த்தை கூட பேசியிருக்க வாய்ப்பிருக்காது. உறவுகளுக்காகவும், சமுதாயத்தின் கட்டாயத்திற்காகவும் சேர்ந்து வாழும் பெரும்பாலான தம்பதியர்கள்இருவரும் காதலர்களாக கடைசி வரை சந்தோஷமாக வாழமுடியும் என்ற உண்மை நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஓர் ஆணால் இன்னொரு பெண்ணைத் தேர்வு செய்ய முடியாது என்பதும், அந்தப் பெண் வேறு வழியின்றி கணவனாக வந்திருக்கும் ஆணை மட்டுமே காதலிக்க வேண்டும் என்ற கட்டாயம் தவிர, மற்ற எல்லா விஷயங்களும் காதலர்களைப் போலவே இவர்களுக்கும் பொருந்தவே செய்யும்.

உறவை விட காதல் தான் முக்கியம் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் சில நாட்கள் பழகிய ஒருவனுடன் இப்படி ஓடும் எதனை பெண்கள் ,அந்த குடும்பத்தின் நிலை என்ன? அந்த குடுபத்தில் இன்னுரு பெண் இருந்தால் அவள் நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா? அன்பு சகோதரிகளே! அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்! பெற்றோரை கண்ணிய படுத்துங்கள்! ஆசை அறுபது நாள் மோகம் நுப்பது நாள் என்று சொல்வார்கள். வேண்டாம் இந்த காதல். விபரிதம் தெரியாமல் இந்த காதலில் சிக்கி விடாதீர்கள்!



உங்கள் குடும்பத்தை தலை குனிய வைத்துவிடாதீர்கள், உறவு தான் முக்கியம் அது தான் கடைசி வரை வரும் என்பதை மறந்து விடாதீர்கள்!

அந்த காதல் இந்த காதல் கள்ள காதல் சொல்லாத காதல் சுகமான காதல் ஊரை சுற்றும் காதல் இப்படி பலவகை காதல் இருக்கிறது. உண்மையான காதல் என்பது எது என்று புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப்பிறகு உங்கள் துணையுடன் கொள்ளும் காதலே உண்மையானது, நிலையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பள்ளிக்கு போனால் படிப்பை மட்டும் கவனியுங்கள். பெறோர்கள் உங்களை நம்ம்பி அனுப்புகிறார்கள் அவர்களுக்கு மோசம் செய்யாதீர்கள்! மாற்று மத பெண்களுடன் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கு உங்கள் செல் போன் நம்பரை கொடுக்காதீர்கள்! எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கும் உங்களுக்கும் நற்கிருபை செய்வானாக..

 ஆக்கம்  மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

இந்தியாவின் ஜனாதிபதி : ஓர் கண்ணோட்டம்...



File:Rashtrapati Bhavan-1.jpgஇந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் வந்தாலும் வந்தது, நாட்டின் பல்வேறு கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. தேர்தல் முடியும் காலத்தில், அவர்களுடைய உட்கட்சி அழுக்குகள் எல்லாம் வெளியே அலசப்படும் என்றல்ல. ஆனால், அந்த உட்கட்சி விவகாரங்கள் ஒருசில கட்சிகளின் கட்டுக்கோப்பான 'இமேஜை' உடைத்து விடுமோ என்ற எண்ணம் உருவாகி வருகிறது. அப்படியே, நாட்டின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியையும் அவை பதம் பார்த்து விடுமோ என்ற பயமும் எழுகிறது.

இந்தியாவின் ஜனாதிபதியாக ஆவதற்கு, முப்பத்தைந்து வயது நிரம்பிய நாட்டின் பிரஜை யாருக்கும் தகுதி உண்டு. ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் பங்கெடுக்கும் தேர்தலில் வெற்றிபெற்றவரே ஜனாதிபதியாக முடியும். இது ஜனநாயக விதி, தேர்தல் விதிமுறை. அவ்வாறு ஜனாதிபதியாக பதவி ஏற்பவர் தன்னையோ, தான் சார்ந்திருந்த அரசியல் கட்சியையோ அல்லது தனது மாநிலத்தையோ மட்டும் பிரதிநிதித்துவப் படுத்துவது இல்லை. அவர் இந்திய திருநாட்டிற்கும், அதன் இறையாண்மைக்கும். மாட்சிமைக்கும்  உயிரோட்டமுள்ள சின்னம், அடையாளம்.

ஆனால், ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தல் நேரத்திலும் நடப்பது என்ன? பெருமைக்கும் பெருமதிப்பிற்கும் உள்ள அந்த பதவியை அரசியல் கட்சிகள் கூறு போட்டு விற்கும் அளவிற்கு நிலைமை போய்விட்டது. அதுவும். கூட்டணி ஆட்சி என்று வந்த பிறகு, அனைத்து தரப்பினரையும் அனுசரித்து போகவேண்டும் என்ற பெயரில் அந்த அரும்பெரும் பதவி அரசியல் பேரத்திற்கான ஒரு கருவியாக மாறிவிட்டது. தற்போதைய சூழ்நிலையில், மத்தியில் ஆளும் கூட்டணியின் காங்கிரஸ் தலைமை, அதே அணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனார்ஜியை எப்படி சரி கட்டி, ஜனாதிபதி தேர்தலில் அவரது ஆதரவை பெறுவது என்ற குழப்பத்தில் இருக்கிறது. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்த போதும் இதே நிலைமை தான் நிலவியது.

இதை விட தவறானது, தங்களது கூட்டணி கட்சிகளை புறம் தள்ளி விட்டு, தேசிய அளவில் கூட்டணிகளின் தலைமை ஏற்கும் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா தலைமைகள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு - ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகிய இரண்டு பதவிகளையும் தங்களது குடும்ப சொத்து என்ற கணக்கில் பங்கு போட்டுக் கொள்வது. இந்த முறையும் இது நடக்க வாய்ப்பு உள்ளது. காரணம், இரண்டு பதவிகளுக்கான தேர்தலும் அடுத்தடுத்கு நடக்க இருப்பது தான். அவர்களுக்குள் உடன்பாடு எட்டப்பட்டு விட்டால், அதுவே தங்களுக்கு கிடைத்த வெற்றியாக கூட்டணி கட்சிகள் கொண்டாடுகின்றன. அல்லது, நல்ல காலம், யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற குழப்பம் தங்களுக்கு ஏற்பட்டு விடவில்லையே என்ற நிம்மதி பெருமூச்சாவது அவர்களில் பல கட்சிகளும் விடுவதும் நிதர்சனமானது.

ஆனால். இதனை எல்லாம் தாண்டி, உள்கட்சி பிரச்சினைகளிலும் இந்த உயர் பதவிகள் சிக்கிக் கொண்டு அல்லாடுவது வேதனை தரும் விடயம். தற்போது, காங்கிரஸ் கட்சியின் உள்ளே, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி பதவிக்கு முன் நிறுத்த வேண்டுமா? என்ற கேள்வி அலசப்பட்டு வருகிறது. ஜனாதிபதி வேட்பாளர் குறித்த ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா போன்ற எதிர்கட்சிகள் அவரை ஆதரிக்காது என்று கூறுவர் கட்சியில் உள்ளனர். ஆனால். பல்வேறு காரணங்களுக்காக அவரை பிடிக்காதவர்கள், அதனையே காரணம் காட்டி, தங்களது துவேஷத்திற்கு பிரணாப் முகர்ஜியை மட்டுமல்ல, மாட்சிமை பொருந்திய ஜனாதிபதி பதவியையும் இலக்கு ஆக்கி விடுவது வேதனைக்குரிய விடயம்.

இதேமுறை ஒரு காலத்தில் கட்டுக்கோப்பாக இருந்த பாரதிய ஜனதா கட்சியையும் தற்போது ஆட்டிப்படைக்கிறது என்பதே உண்மை. அண்மையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி சந்தித்து, முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் தனியாக பேசியதாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தன. இருவருமே பத்திரிகையாளர்களிடம் வேட்பாளர் குறித்து எந்த செய்தியையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால். அடுத்த நாளே, தேசிய ஊடகங்களில் அவர்கள் இருவரும் ஜனாதிபதி பதவிக்கு, பிரணாப் முகர்ஜி மற்றும் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி ஆகிய இருவரில் ஒருவரை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து கலந்தாலோசித்ததாக கூறின.

இந்த செய்தியில் எத்தனை தூரம் உண்மை இருந்தது என்று தெரியவில்லை. ஆனால், உடனடியாகவே இந்த இருவரையுமே பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்ளாது என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அந்த கட்சியை பொறுத்த வரை அவர் ஒரு மூத்த தலைவர். நாடாளுமன்ற அகராதியில் அதற்கும் அப்பால் சென்று, மக்களவையின் பெரு மதிப்பிற்குரிய எதிர்கட்சி தலைவர். ஆனால், இவற்றால் மட்டுமே அவர் சார்ந்த கட்சியையும், அந்த கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியையும் பிரதிநிதித்துவப் படுத்தி கொள்கை முடிவுகளை அவரால் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

சுஷ்;மா சுவராஜ் கருத்து தெரிவித்த பின்னரும் அவருக்கு ஆதரவாக கட்சியின் மூத்த தலைவர்கள் பேசாதது, அது அவரது சொந்த கருத்து மட்டும் தானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இதன் பொருள் என்ன? பாரதிய ஜனதா கட்சியில் தற்போது அரங்கேறி வரும் தலைமைக்கான குடும்பி பிடி சண்டையில் ஜனாதிபதி பதவியையும் சுஷ்மா சுவராஜ் போன்றவர்கள் பகடை காயாக உருட்டி விளையாடுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அதுவும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 'தொங்கு நாடாளுமன்றம்' ஏற்பட்டால், தனது கட்சிக்கு மட்டுமல்ல, தான் பிரதமர் ஆவதற்கு துணை நிற்பார் என்று சுஷ்மா போன்றவர்கள் நினைப்பவரையே அவர் போன்றவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க விரும்புவதாகவே தெரிகிறது.

இது இப்படி என்றால், பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், அகாலி தளமும் சுஷ்மாவின் கருத்து அவர் சார்ந்த கட்சியின் கருத்தாக மட்டுமே கொள்ளப்பட வேண்டும் என்று உடனடியாகவே கூறினர். தேசிய ஜனநாயக கூட்டணி, ஜனாதிபதி தேர்தல் குறித்து எந்த பேச்சுவார்த்தைகளும் நடத்தி இருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியதன் மூலம், அவர்கள் இருவரும் சுஷ்மாவின் தன்னிச்சையான பேச்சையும், பாரதீய ஜனதா கட்சியின் போக்கையுமே விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கும் 'மாட்சிமை' ஹமீது அன்சாரிக்கு இல்லை என்று சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த உயர் பதவியில், மீண்டும் தமிழ் நாட்டை சேர்ந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களை வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி நினைப்பது குறித்து எந்தவிதமான இரு கருத்துக்களும் இருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், இதுவே பாரதீய ஜனதா கட்சியின் கருத்து என்று 'நவீன ஆதித்யன்' பல மாதங்களுக்கு முன்னரே கோடிட்டுக் காட்டியது. ஆனால், அதனால் மட்டுமே, அன்சாரிக்கு அந்த பதவியை அலங்கரிக்கும் மாட்சிமை இல்லை என்று சுஷ்மா கூறுவது, அப்துல் கலாம் அவர்களது பெயருக்கே பெருமை சேர்க்காது.

சுதந்திர போராட்ட காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இருந்த எம்.ஏ.அன்சாரின் குடும்பத்தை சேர்ந்த ஹமீது அன்சாரி, இந்தியாவின் தூதுவராக பல்வேறு நாடுகளில் பணியாற்றியவர். பின்னர். அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக பணியாற்றி, சிறந்த கல்வி பணியாளர் என்று பெயர் பெற்றவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக, துணை ஜனாதிபதி பதவியில் இருந்து, மாநிலங்களவையை அவர் வழி நடத்திய விதத்தை, பாரதிய ஜனதா கட்சி உட்பட்ட எந்த ஒரு கட்சியும் ஒருமுறை கூட குறை கூற இடம் கொடுக்காதவர்.

நாளையே, சுஷ்மாவின் எதிர்ப்பையும் மீறி, அன்சாரி ஜனாதிபதியாகவும், ஒரு வாதத்திற்கேனும் சுஷ்மாவே பிரதமராகவும் தேர்ந்தெடுக்க படும் சூழல்நிலை உருவானால், அவர் எப்படி அன்சாரியின் முகத்தை ஏறெடுத்தும் பார்ப்பார் என்பதை எல்லாம் அவர் நினைத்து கூட பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. இதுபோன்று தான், கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின் சோனியா காந்தி பிரதமரானால், தான் மொட்டை போட்டு அதனை துக்க தினமாக அனுஷ்டிப்பேன் என்று சுஷ்மா கூறியதையும் நாடு ரசிக்கவில்லை. அந்த சம்பவத்தை நினைவு வைத்திருந்தால், அவர் இப்போது இவ்வாறு பேசியிருக்கமாட்டார்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஜனாதிபதி பதவியே, ஆட்சி மாற்றத்தின் போது தங்களது கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்று கருதுபவர்களையே முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் முறையாக மாறிவிட்டது. அதாவது, முறை தவறி தனக்கு ஆதரவளித்த கட்சிக்கு அவர்களுக்கு தேவைப்படும் வேளைகளில் ஜனாதிபதி துணை நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுதப்படாத சட்டமாக ஆகிவிட்டது. இது குறித்து கட்சி தலைமைகளும் வேதனைப்படுவதில்லை. அவர்களால் முன்னிறுத்தப் படுபவர்களும் வெட்கப்படுவதில்லை. மக்களாகிய நாமோ, இவை எதைப் பற்றியுமே கவலைப் படாமல், 'அரசியலில் இதுவெல்லாம் சகஜம்' என்று வாறாகவிருக்க நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறோம்.
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

Gemologist Degree course....



Gemology is the art and profession of recognizing and assessing a wide variety of gemstones. Trained and qualified professionals are required to identify and appraise gems to be sold to jewelers.



  1. Gemologist Degrees thumbnail



    You can become a certified gemologist by earning a degree in gemology.

    A career as a gemologist is a great choice for individuals interested in a variety of gemstones that are natural or synthetic. Gemologists must have good hand and finger dexterity, patience, good eye-hand coordination, and excellent concentration. Since they work with valuable materials, gemologists must be trustworthy, honest, and have good character. Those who work with customers must have excellent communication and interpersonal skills.


    Anyone can study gemology and be called a gemologist, but not all gemologists hold a degree in gemology. Having a degree in gemology means that you have been conferred an academic title by a school or educational institution as an indication that you have completed a gemology course. There are many gemology schools that confer various degrees on those who complete their gemology course. The most prestigious titles come from schools that have established a solid reputation over a long period of time.

    1. Singem Jewelry Design

      • Based in Kolkata Mumbai, Singem is India’s largest institute for jewelry studies and offers a three-year bachelor's degree in jewelry design. The school also provides a one-year diploma course in jewelry making and design. Course highlights in jewelry design include diamonds and gemology; other topics comprised jewelry manufacturing, design and business management. The jewelry design program is affiliated with Punjab Technical University and will prepare students for careers in various fields within the jewelry industry. Candidates who successfully complete their training will receive job placement assistance through the school’s career center, which is well connected with some of the top jewelry trade and manufacturing industries throughout India like Shree Ganesh Kewellers, P.C. Chandra and Indian Gems and Jewelry.
        Singem Jewelry Design
        10 Heysham Road
        Bhowanipore, Kolkata 700 020
        India
        011-91-33-2454
        Singem.org

      Indian Institute of Gemology

      • Founded in 1991, the Indian Institute of Gemology provides top-quality education in the identification and grading of gems. Diploma programs in gemology at the Institute include basic and advanced training in gem identification and courses in diamond grading. The programs are designed for candidates who already work in gemology but wish to learn the latest scientific trends in the field. The institute is privately funded and is affiliated with leading jewelers and gem experts in India, as well as the Asian Institute of Gemological Studies in Bangkok, Thailand. Course highlights in gem identification covers a study of precious stones like rubies, sapphires, quartz and pearls. Students will learn about the origins of precious stones, crystal systems in gems and identifying various species and varieties of gems. In order to successfully complete the training, students are required to pass a written examination that covers theoretical and practical topics related to gemology.
        Indian Institute of Gemology
        10980 Eastern Park Road
        Karol Bagh
        New Delhi 1100055, India
        011-91-235-20974
        iigdelhi.com

      St. Xavier’s College

      • St. Xavier’s College is a Jesuit institution affiliated with the University of Mumbai. Prospective students who are interested in earning a degree in gemology can enroll in the department of geology. In addition to providing courses in gemology, course highlights in geology consist of themes like the earth’s solar system, structural geology and morphology of fossils. The department also offers courses in a wide array of topics that relate to gemology or mineralogy such as mineral exploration and definition, introduction to rock forming minerals, classification of crystals and minerals and studies of matter.
        St. Xavier’s College
        5 Mahpalika Mark
        Mumbai, 400 001
        India
        011-91-22-226-20661
        xaviers.edu
    Graduate Gemologist Diploma from the Gemological Institute of America

    • The Gemological Institute of America (GIA), considered by many as the world's foremost authority on precious gems, accepts students from all over the world. The school grants the Graduate Gemologist (G.G.) diploma, which is the industry's highest professional credential, to those who are able to complete the course at one of its campuses located in California, New York and various other parts of the world. At GIA, it can take as little as 6 months to learn the skills and get the recognition of a being a fully qualified professional, and acquire a Graduate Gemologist Diploma.

    Certified Gemologist Degree from the American Gem Society

    • The American Gem Society (AGS) was founded in 1934 with the objective of making it easier and safer to buy jewelry, and it is dedicated to promoting the ethical representation of all jewelry products. A gemologist who is granted the title of Certified Gemologist (CG) by the American Gem Society is one who has completed advanced studies in diamonds and colored gemstones. A Certified Gemologist demonstrates mastery of diamond, gemstone and precious metal testing procedures. A gemologist who earns a degree from AGS must appear for a re-test each year to maintain his certification as a Certified Gemologist.

    Gemology Diploma from the Montreal School of Gemmology

    • The Montreal School of Gemology is well-known gem training institution that is based in Montreal, Canada. The school provides provides full courses to students preparing to write exams for the Canadian Gemological Association (CGA), the Gemmological Association of Great Britain (Gem-A), and the Gemological Institute of America (GIA). The school issues a gemology diploma recognized by the gem and jewelry industries upon completion of its gemology program.

    The Gemmological Association of Great Britain provides four internationally recognized gem qualifications awarded after an examination: the Foundation Certificate in Gemmology, the Diploma in Gemmology, the Diamond Practical Certificate and the Gem Diamond Diploma. The Foundation Certificate and the world-renowned Diploma in Gemmology, are of the highest gemological education standard provided by the Gemmological Association of Great Britain, and are officially accredited in the UK. The Diploma in Gemmology is awarded on the basis of course work and the final exams, and it takes a minimum of six months to complete the course.

    BSc Honours Degree in Gemmology from Kingston University in London

    • The Kingston University in London, England offers Gemmology and Applied Mineralogy BSc(Hons) title to those who can satisfactorily complete its 1 to 2 year gemology course. The Level 6 course is suited for students with approved prior learning and training in the field of gemology, and is designed to develop an overview of the field of gemology and applied mineralogy.

Collection By : M.Ajmal khan.