Sunday 15 January 2012

உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆன்......





கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆன் பிரதி ஆப்கானிஸ்தானில்உருவாக்கப்பட்டுள்ளது.இப் புனித அல்குர்ஆன் பிரதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு செவ்வாய்கிழமையன்று ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நடைபெற்றது.  கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆன் பிரதியானது, ஆப்கானிஸ்தானின் உயர்நிலை அரச அதிகாரிகள்,இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.இதன் போது ஹாகீம் நாஸிர் குஸ்ரேவ் கலாச்சார நிலையம் மற்றும் குராஸான் நகரின் வரலாற்றைக் கூறும் ஓவியக்கண்காட்சியை திறக்கும் நிகழ்வும் நடைபெற்றன.
கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆனை உருவாக்குவதற்கான நிதி மற்றும் அனுசரனை ஆப்கானிஸ்தானின் கொடைவள்ளல் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது.இப்புனித அல்குர்ஆனின் சித்திர மற்றும் வர்ண வேலைப்பாடுகள் செய்துமுடிக்கஏறத்தாள 5வருடங்கள் சென்றன.இப்புனித நூலின் வர்ணவேலைப்பாடுகள் பிரசித்தபெற்ற ஓவியர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய அல்குர்ஆனை உருவாக்கும் வேலைதிட்டம்2004செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு 2009செப்டம்பர் மாதம் நிறைவுபெற்றது.அட்டைகள் உருவாக்கல் மற்றும் காப்பகம் செய்தல் என்பவற்றுக்கு குறைந்தது இரு வருடங்கள் சென்றுள்ளன. இப்புனித அல்குர்ஆனானது 218 பக்கங்களைக்கொண்டுள்ளது. இப்புனித நூலானானது 228சென்றிமீற்றர் நீளத்தையும்,155சென்றிமீற்றர்
அகலத்தையும் கொண்டது.மேலும் இப்புனித அல்குர்ஆன் பிரதியின் 30 ஜூஸ்களும்30வெவ்வேறு வடிமைப்புக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment