Friday 13 January 2012

ரொம்ப பேசாதீங்க செல்போன் !.. காது போயிடும்!…

 

December 26, 2011
னிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்புபோல் மாறிக் கொண்டிருக்கிறது, செல்போன்! இது எவ்வளவு முக்கியமானது என்றாலும், அதிக நேரம் பேசினால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு.

மும்பை கே.இ.எம். மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை மருத்துவ பேராசிரியர் நீலம் சாதியும், டாக்டர் தனஸ்ரீ சிப்லங்கரும் இணைந்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட 50 பேரின் காது கேட்கும் திறனை ஆய்வுசெய்தனர். ஆய்வுக்குட் பட்டவர்களில் 68 சதவீதம் பேர் 21 முதல் 25 வயது இளைஞர்கள். அவர்களில் 16 பேர் பெண்கள்.

ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் 23 பேர், (அதாவது 46 சதவீதத்தினர்) செல்போனில் அள வுக்கு அதிகமாகப் பேசி, தங்கள் காது கேட்கும் திறனை ஓரளவு இழந்திருந்திருந்தது கண்டுபிடிக் கப்பட்டிருக்கிறது. செல்போனில் பேசுபவர்கள் மட்டு மன்றி, அதை பயன்படுத்தி காது கருவிகளை மாட்டிக்கொண்டு அதிக நேரம் பாட்டுகேட்பவர் களுக்கும் காதுகேட்கும் திறன் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

“இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் வருடக்கணக்கில் செல்போனை பயன்படுத்தியவர்கள். வலது காதில் வைத்து பெரும்பாலும் பேசியதால், வலது காது வலியால் பாதிக்கப்பட்டிருக்கவும் செய்கிறார்கள்” என்றும் டாக்டர் நீலம் சாதி தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கு உள்ளான 50 பேர்களில் 20 பேர் இடது காதில்வைத்து செல்போனை பயன்படுத்துகிறவர்கள். 19 பேர் வலதுகாதில்வைத்து பேசியவர்கள். மீதி 11 பேர் இரண்டு காதுகளிலும் மாறிமாறி வைத்து பேசியவர்கள்.இவர்களில் 13 பேர் காது வலியாலும், 11 பேர் காது அடைப்பினாலும், 19 பேர் காது சரியாகக் கேட்காமலும், 7 பேர் காதில் வித்தியாசமான சத்தம் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாதிக்காத அளவிற்கு செல்போனில் பேசுவது எப்படி?
- தவிர்க்கமுடியாத நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் செல்போனில் பேசுங்கள்.

- தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் செல்போன்களை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட செல்போன்களை மட்டும் உபயோகியுங்கள்.

- நேரடியாக செல்போனில் பேசும் பழக்கத்தை தவிர்த்து ஸ்பீக்கர் மோட், ஹியரிங் போன் மற்றும் ஹெட்போன் உபயோகித்து உரையாடுவது நல்லது.

- குழந்தைகளும், கர்ப்பிணிகளும் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

- பழுதடைந்த, சரிவர இயங்காத அலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது.
- செல்போனுக்கு பதில் தொலைபேசியை உபயோகியுங்கள். ஈ- மெயில் தொடர்பும் சிறந்தது.

- செல்போன் மிகக்குறைந்த பேட்டரியில் வலுவிழந்து நிற்கும்போது பேச வேண்டாம். முழுமையாக `சார்ஜ்’ செய்துவிட்டு பேசுங்கள்.

No comments:

Post a Comment