Wednesday 25 January 2012

சூரிய கதிரியக்கத்தால் பூமிக்கு ஆபத்தா ? ஒரு இஸ்லாமிய விழிப்புணர்வு!!

இன்றைய சூரிய கதிர்களின் தாக்கமும்,சுனாமியும், பூகம்பங்களும் அழிவிற்கு சில உதாரணங்கள். ஏனெனில் இவை பூமியில் மேல்பரப்பிலும், நீர்ப்பரப்பிலும் மட்டுமே பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் அன்று...? வானத்திலிருந்து வரும் பாதிப்புகளும், மலைகள் சிதறி ஏற்படுத்தும் விளைவுகளும் நம்மால் கற்பனை செய்யதால் மனம் தாங்குகிறதா? திருமறைக் குர்ஆனை பொய்ப்பிப்பவர்கள் இனியாவது சிந்திக்க மாட்டார்களா? அனுபவங்களின் அடிப்படையில்கூட‌ மனிதன் பாடம் படிக்கவிட்டால்..... அந்த இறைவனுக்கா நஷ்டம்? 



திருக்குர்ஆனின் மற்ற எச்சரிக்கைகளையும் பார்ப்போம்!
  • வானம் பிளந்துவிடும்போது..நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது.. கடல்கள்கொதிக்கவைக்கப்படும்போது..மண்ணறைகள்புரட்டப்படும்போது... ஒருவன் தான் முற்படுத்தியதையும் பிற்படுத்தியதையும் அறிந்துக் கொள்வான்! (அல்குர்ஆன்: 82: 1-5)
  • சூரியன் சுருட்டப்படும்போது... நட்சத்திரங்கள் உதிரும்போது... மலைகள் பெயர்க்கப்படும்போது... கருவுற்ற‌ ஒட்டகைகள் கவனிப்பாரற்று விடப்படும்போது... காட்டு விலங்குகள்ஒன்றுதிரட்டப்படும்போது... கடல்கள் தீ மூட்டப்படும்போது.... உயிர்கள் மீண்டும் (உடல்களோடு)ஒன்றிணைக்கப்படும்போது...(அல்குர்ஆன் 81:1-7)
  • பூமி பேரதிர்ச்சியாக குலுக்கப்படும்போது... பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும்போது... இதற்கு என்ன நேர்ந்துவிட்டது என்று மனிதன் கேட்கும்போது... அந்நாளில், தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்!(அல்குர்ஆன் – 99:1-5)

  • நாசா வெளியிட்ட ஆரோரா புகைப்படங்கள்.


மின் காந்த புயல் ஆரோரா (AURORA) என்று அழைக்கப்படும் இந்த புயல் பூமியை கடந்த 23ம் தேதி 03.59 முதல் 24ம் தேதி 03.59 வரை பூமியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது . இந்த வகை கதிர்கள் தாக்கம் M9 என்ற அறிவியல் வகைபாடுகளின் கீழ் விவரிக்கபடுகிறது. கடந்த 23ம் தேதி ஏற்பட்ட கதிர் தாக்குதல் உலகின் மிக நீண்ட நேர மற்றும் கடுமையான தாக்குதல் ஆகும். நாசாவின் சூரிய டைனமிக்ஸ் ஆய்வகம் கைபற்றிய கதிர்வீசுகளை ஆய்வு செய்து கூறும்போது இந்த வகை தாக்கம் X-Flare எனப்படும் X வகை கதிர்கள் என்றும் இதனால் மனிதர்களுக்கோ மற்ற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாது என்றும் மின் காந்த கருவிகளுக்கும் , செய்தி தொடர்புக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியது. இதை முன்னிது உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் காந்த கருவிகள் தொடர்பை நிறுத்தி வைத்தன பல விமானங்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது . மேலும் நாசா கூறும்போது இந்த கதிர்கள் ஏற்படுத்திய மாற்றத்தை இரவு நேரங்களில் ஆர்டிக் எனப்படும் பூமியின் காந்த புலத்தில் மிக துல்லியமாக பார்க்கலாம் என கூறியது . சூரியனில் இருந்து வெடித்து மிக வேகமாக வெளியேறும் கதிர்களை பற்றி ஆய்வு செய்துவரும் Solar and Heliosphere Observatory (SOHO) மற்றும் STEREO-Behind spacecraft ஆய்வகம் கூறுகையில் இந்த மின்க காந்த கதிர்கள் சுமார் 2200 KM வேகத்தில் பூமியை தாக்கியது . மேலும் இதை பற்றிய முதல்நிலை ஆய்வில் இந்நிறுவனங்கள் கூறியது , மேக கூட்டங்கள் சரியான பாதையில் தான் பயணிக்கின்றனவா என்பது விஞ்ஞானிகளுக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறின .மேலும் வலிமையான தாக்கத்தை ஆரோரா ஏற்படுத்தி இருக்கும் என்று கூறுகின்றனர். ஆர்டிக் கடல் பகுதியில் இதன் தாக்கம் மிக தெளிவாக உணரப்பட்டதாக தெரிவிக்கின்றனர். கோடார் (CODAR or COSTAL RADAR) எனப்படும் கடல் ஆளவீட்டு கருவிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் ஆளவீட்டில் சுமார் 4543 KHz  மாற்றம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர். இன்னும் என்ன என்ன இதைபற்றிய ஆய்வுகள் தெரிவிக்கிறது என்பதை பொருத்து இருந்து பார்ப்போம், 

OSLO பல்கலைக்கழக இயற்பியல் துறை வெளியீட்டுள்ள ஆரோரா கதிர்கள் தாக்குதல் அனிமேஷன்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment