ஓரிறை கொள்கை பற்றி பழைய கிரகந்தங்களில் மிக தெளிவாக குறிப்பிடபட்டிருந்தும் பல தெய்வ (வழிபாட்டுக்) கொள்கையையே தூக்கி பிடிப்பற்கான ஆதாரம் (காரணம்) என்ன ?
தன் உயர்வான பண்புகளைக் குறித்து இறைவனே நன்கறிவான். அதனை வேதவெளிப்பாடுகளின் மூலம் மனிதனுக்கு அறிவித்துக் கொடுத்தான். ஆனாலும் முந்தைய வேதங்களில் மக்கள் தங்கள் விருப்பப்படி கருத்துக்ளைப் புகுத்திய போது, வேதங்கள் வர்ணித்த இறைவனின் தன்மையிலும் களங்கம் ஏற்பட்டு விட்டது. உதாரணமாக உபநிஷத்துக்கள் கூறும் செய்தி.
''அவனுக்கு இணையானக உலகில் ஒன்றும் இல்லை. அவனைக் காண்பதற்கான அடையாளங்களும் இல்லை. எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாவான அவனுக்குக் காரணமானவன் எவனும் இல்லை. அவனைப் படைத்தவனோ அவனுக்கு அதிபதியோ எவரும் இல்லை'' (சுவேதாதரோபநிஷத் 6:5)
''அவனுக்கு முன் சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் பிரகாசிப்பதில்லை'' (முண்டகோபநிஷத் 2:2:11)
''அவன் மகாத்மா, காணுதற்கரியவன்'' (பகவத்கீதை 7:19)
''இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை'' (அதர்வவேதம் 323)
மேற்கண்டவாறெல்லாம் இந்து மத வேதங்கள் கூறுவதிலிருந்து முன்னால் அருளப்பட்ட வேத வசனங்களின் தாக்கம் அதில் உள்ளது என்பதை தெளிவாக்குகிறது. எனினும் மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வேதங்களில் கையூடல்களைச் செய்த போது பல தெய்வக் கொள்கையும் அதில் இடம் பெற்று இன்றளவும் இறைவனுக்கு பல்வேறு உருவங்களைக் கற்பித்து வணங்கி வருகின்றனர் இந்துக்கள்.
இன்னும்
நான் சர்வ வல்லமையுள்ள தேவன் (ஆதியாகமம் 17:11)
பூமியில் ஒருவரையும் பிதா என்று கூறாதீர்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார் (மத்தேயு 23:9)
இஸ்ரவேலே கேள்! நம்முடைய கடவுளாகிய கர்த்தர் ஒருரே கர்த்தர் (மாற்கு 12:29)
மேற்கண்ட பைபிளின் வரிகள் முன்னால் அருளப்பட்ட வேதங்களின் தாக்கம் அதில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. எனினும் மனிதக் கற்பனைகளின் இடைச் செருகலால் இறைவன் மூன்று என்றும் அவன் மனிதனின் சாயலை உடையவன் என்றும் மனிதராகிய இயேசு கடவுள் என்றெல்லாம் வர்ணித்து உருவ வழிபாட்டைச் செய்து வருகின்றனர் இன்றைய கிறித்தவர்கள். திருக்குர்ஆன் இறைவன் அருளிய இறுதி வேதமாக உள்ளது. அது கூறும் கடவுள் கொள்கை தெளிவானது. முரண்பாடுகளற்றது. பகுத்தறிவுக்குப் பொருத்தமானது. இறைவன் என்பவன் உருவமற்ற ஒரு மாயை என்ற அத்வைத சித்தாந்தத்தை அது கூறவில்லை. இறைவனுக்கு உருவமே இல்லை எனில் அவன் ஒன்றுமே இல்லை என்றாகி விடும். இறைவனுக்கு உருவம் இல்லை என்று கூறுபவர்கள் இறைவனே இல்லை என்ற நாத்திக சித்தாந்தத்தின் பாலே வழிகாட்டுகின்றனர். திருக்குர்ஆன் கூறும் அல்லாஹ் என்பவன் தனக்கே உரிய பண்புகளால் உயர்ந்தவன். அவனுக்கு உள்ளமை உண்டு. ஆனால் அதனை சிற்றறிவு கொண்ட மனிதனால் வர்ணிக்க இயலாது. அவன் ஒப்புவமையற்றவன். மேற்கோளுக்காக மட்டும் சில வசனங்களைக் குறிப்பிடுகிறேன்.
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (திருக்குர்ஆன் 2:255)
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை அலன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (திருக்குர்ஆன் 42:11)
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை . (திருக்குர்ஆன் 114)
இதுகுறித்து மேலும் விளக்கங்கள் அறிய .
http://www.islamkalvi.com/general/allah_part2.htm
நன்றி:irudithoodu.blogspot.com

All is Gods or God's ? |

No comments:
Post a Comment