Friday 13 January 2012

பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா’!.(குடலிறக்கம்) என்றால் என்ன? ஒரு சிறப்பு பார்வை...

 ஹெர்னியா (குடலிறக்கம்)  என்றால் என்ன?

குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பு அல்லது திசுவினால் உருவாக்கப்படும் ஒரு புடைப்பு. புடைப்பானது பொதுவாக அது இருக்கும் உடல்ப்பாகத்தின் பலவீனமான பகுதியினூடாகத் தள்ளுகிறது. மிகவும் பொதுவாக, குடலிறக்கம் ஏற்படும் பகுதி வயிறு ஆகும். 

சில பாடி பில்டர்ஸ், வெயிட் தூக்கும் சாம்பியன்ஸ், கடினமாக உழைக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு தான் இந்த ஹெர்னியா வரும் என சிலர் நினைப்பர். சிலர் நன்கு சாப்பிட்டு ஒரு ஹெவி தும்மல் அல்லது தும்மலுடன் சேர்ந்த இருமல் வந்தாலும் இந்த தசை கிழிந்து ஹெர்னியா வரும் ஆபத்து உண்டு. சிலருக்கு ஹெர்னியா இருப்பது தெரியவே தெரியாது. ஆனால் சிலருக்கு வலி சும்மா அடி பின்னி எடுத்துவிடும். சில ஆண்களுக்கு விரை வீக்கம் மற்றூம் சின்ன லம்ப் எனப்ப்டும் கட்டி போன்ற ஒன்று இருக்கும் பட்சத்தில் உடனே சர்ஜரி தான் சரியான வைத்தியம்.

மொத்தன் ஐந்து வகை ஹெர்னியாக்கள் தான் ஃபேமஸ...
1. Inguinal hernia / 2. Incisional hernia / 3. Femoral hernia / 4. Umbilical hernia / 5. Hiatal hernia

அது என்ன ஹெர்னியா? குடலிறக்கம் தான் அவ்வாறு அழைக்கப்படுகிறது. ஆண்களைவிட பெண்களே இதனால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

பெண்களுக்கு இது வரும் காரணம் முக்கியமாக ஓவர் வெயிட், வயிறு பகுதிகளில் வெயிட் போடுவது, அடிக்கடி பிரசவித்தல், அஸ்சைட்ஸ் எனும் திரவகம் அதிகமாக வயிற்றில் சுரத்தல், இயற்கை பிரசவம் சரியாக ஆகாமல் நிறைய நேரம் துடிக்கும் போது, வைற்றில் பெரிய கட்டி போன்ற விஷயங்களுக்கு கண்டிப்பாக ஹெர்னியா நிச்சயம். பெண்கள் புகை பழக்கம் கூட மெயின் ரீஸன் அதனால் இது ஆண்களுக்கு மட்டும் வரும் ஒரு பிரச்சினை இல்லை. சாப்பிட்ட பிறகு வயிற்றின் பெல்ட், பேன்ட், மற்றும் பாவாடை, சுரிதார் பாட்டத்தை அட்ஜ்ஸ் செய்யவே கூடாது. சாப்பிடும் முன் செய்யலாம் அல்லது சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து செய்யலாம். கர்ப்பபை எடுத்த தாய்மார்களுக்கு ஹெவியாக வேலை செய்தால் ஹெர்னியா நிச்சயம்.


எவ்வாறு அறிவது?
பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து காணப்படும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது.
பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, `சிசேரியன்’ எனப்படும் மகப்பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

அடுத்ததாக, பெண்களுக்கு வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கையான ஒன்று. இப்படி எடை கூடுவது அவர்களது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது. ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆகஆக அவளது வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி வலுவிழக்கச் செய்கிறது.இப்படித்தான் பெண்களுக்கு பெரும்பாலும் குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகிறது.



ஆண்களுக்கு வருமா?
ஆண்களுக்கும் சில காரணங்களால் குடலிறக்கம் ஏற்படலாம். அவர்களது இடுப்புக்கு கீழ், சிறுநீர் வெளியேறும் பகுதியை அடுத்து, விரைக்காய்கள் இருக்கும். அவை வயிற்றின் உட்பகுதியில் தொடங்கி, வெளியே நீண்டு தொங்குகின்றன. அந்த பகுதி வலுவிழக்க நேரிடும்போது அவர்களுக்கு அந்த பாதையில் குடல் இறங்கலாம். இதுதவிர, தொப்புள் பகுதியும் வலுவிழக்கும் வாய்ப்பு கள் இருப்பதால் அவற்றின் வழியாகவும் குடலிறக்கம் ஏற்படலாம்.
மேலும், ஆண்கள் முதுமையடையும் காலத்தில், `புரோஸ்டேட்’ சுரப்பிகள் வீங்கிப் பெரிதாகும். சிறுநீர் கழிப்பதில் அது சிரமத்தை ஏற்படுத்த… நாளடைவில் அந்த சிரமமே அவருக்கு குடலிறக்கம் ஏற்பட வழிவகுத்து விடுகிறது.இந்த காரணங்கள் தவிர, ஆண், பெண்களுக்கு குடலிறக்கம் ஏற்பட சில பொதுவான காரணங்களும் உள்ளன.

இயற்கை கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும் அதன் காரணமாகவும் ஒருவருக்கு குடலிறக்கம் ஏற்படும்.
ஒருவர் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இருமினாலும் கூட குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருமல் ஏற்படும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிப்பதுதான் அதற்கு காரணம்.


அறுவை சிகிச்சை...


ஹெர்னியா இருந்தால் வலி மற்றும் அதிகம் தொல்லை இல்லாததால் உடனே அவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மறந்துவிடுவார்கள். ஆனால் உடனே செய்வது மேலும் தசை கிழியாமல் தடுக்க இயலும். ஒரு ஆர்டிஃபிஸியல் மெஷ் வைத்து பழைய மாதிரி தைத்து விடுவார்கள். எனக்கு தெரிந்து டாக்டர்கள் அந்த சமயம் அப்பன்டிக்ஸ் இருந்தால் அதையும் எடுத்து விடுவார்கள். அதிக கொழுப்பையும் முடிந்த வரை எடுத்து விடுவர்கள். இப்பல்லாம் ஃபுல் அறுவை சிகிச்சை தேவை யில்லை லேப்ராஸ்கொபிக் சர்ஜரி (துழை) போதும், ரத்த சேதம் அதிகம் இல்லை மற்றூம் 3 நாட்களீல் டிஸ்சார்ஜ் ஆகலாம். அப்புறம் குடம் மற்றும் வெயிட் தூக்கவே கூடாது. அப்படி தூக்கினால் அந்த மெஷூம் கிழிந்து இன்னொரு ரிப்பேர் சர்ஜரி தேவை. முடிந்த அளவு ஹெல்தியா இருந்தா இது வர்ரது கஷ்டம் அல்லது நல்ல அப்டமன் கரன்ச் செய்தால் கூட இந்த சதையை ஸ்ட்ராங்காக வைத்து கொள்ளலாம். சாப்பிட்ட அரை மணி நேரத்திற்க்கு எந்த வேலையும் கண்டிப்பாக செய்ய வேண்டாம், நடப்பது கூட. முட்டியை மடக்கி வெயிட் தூக்குவது இன்னொரு கேர்ஃபுல் அட்வைஸ்...!


ஒருவர் அறுவை சிகிச்சை முடிந்து எத்தனை நாட்கள் கழிந்தபின் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியும்?: அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குப் பின் மறுபடி வேலைக்குச் செல்லலாம். ஆனால், இது அந்த நோயாளியின் உடல்கூறு எப்படிப்பட்டது என்பதையும், அவருக்கு இருந்த குடலிறக்கத்தின் அளவையும் பொறுத்தே இருக்கும். “லாப்பரோஸ்கோப்’ மூலமாகவும், குடலிறக்கத்தை சரி செய்ய முடியும்.





குழந்தைகளுக்கு தொப்புள் சார்ந்த குடலிறக்கம்...

பிள்ளைகளில் காணப்படும் இரண்டு மிகவும் பொதுவான குடலிறக்க வகைகள் பின்வருமாறு:

  1. குடலின் ஒரு பகுதி அடிவயிற்றுச் சுவரினூடாகத் தொப்புளினூடாக தள்ளப்படும்போது தொப்புள் சார்ந்த குடலிறக்கம் ஏற்படும்.
  2. குடலின் பகுதி அடிவயிற்றுச் சுவரினூடாக கவட்டினுள் அல்லது கவட்டைச் சுற்றி தள்ளும்போது அடிவயிறு சார்ந்த குடலிறக்கம் ஏற்படுகிறது. அடிவயிறு சார்ந்த குடலிறக்கம் 100 குழந்தைகளில் 5 குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

குடலிறக்க நோய்க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்..

தொப்புள் சார்ந்த குடலிறக்கம்

தொப்புள் சார்ந்த குடலிறக்கம் பெரும்பாலும் பிறந்த ஒரு சில வாரங்களில் காணப்படும். பெரும்பாலும் இது தொப்புள்க்கொடி விழுந்த பின்னர் சம்பவிக்கும். பொதுவாக, இது 2 வயதுக்கு முன்பாக சிகிச்சை செய்யப்படாமலே நிவாரணமாகிவிடும்.
அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  1. தொப்புளைச் சுற்றி ஒரு மென்மையான வீக்கம்
  2. வீக்கம் நாளின் பிற்பகுதியில் தோன்றலாம்
  3. உங்கள் பிள்ளை இருமினால், அழுதால், தும்மினால், அல்லது அடிவயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்திருந்தால், வீக்கம் பெரியதாகும்

தொப்பூழுக்குரிய குடலிறக்கம்
இது தொப்பூழைச் சூழவுள்ள வயிற்றுச் சுவரின் தசைகளில் ஏற்படும் ஒரு பிளவு ஆகும். குழந்தை அழும்போது அல்லது கடும்முயற்சி செய்யும்போது சிலவேளைகளில் குடலின் ஒரு சிறுபகுதி இந்தப் பிளவினூடாக வெளிப்பிதுங்கக்கூடும்.
அடிவயிறு சார்ந்த குடலிறக்கம்

அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  1. கவட்டுக்கு மேல் அல்லது விதைப்பைக்கு மேல் ஒரு மென்மையான வீக்கம்
  2. வீக்கம் நாளின் பிற்பகுதியில் தோன்றலாம்
  3. உங்கள் பிள்ளை இருமினால், அழுதால், தும்மினால், அல்லது அடிவயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்திருந்தால், வீக்கம் பெரியதாகும்

குடலிறக்கத்துக்கான காரணங்கள்

தொப்புள் சார்ந்த குடலிறக்கம்

தொப்புளானது தோலுக்குக் கீழ் மிகச் சிறியளவான தசையைத்தான் கொண்டிருக்கிறது. அது ஒரு பலவீனமான பகுதி. ஒரு குழந்தை அழுதால் அல்லது தனது வயிற்றைத் தள்ளினால், அழுத்தம் சில சமயங்களில் உறுப்பின் ஒரு பகுதியை அல்லது திசுவைத் தொப்புளினூடாகத் தள்ளும்.

அடிவயிறு சார்ந்த குடலிறக்கம்

இந்த வகையான குடலிறக்கம் பெரும்பாலும் ஆண்பிள்ளைகளுக்குச் சம்பவிக்கும். அடிவயிறு சார்ந்த கால்வாய் தான், விதை விதைப்பைக்குள் இறங்கும் பாதை. வழக்கமாக பிறந்த சிறிது காலத்திற்குள் இந்தக் கால்வாய் மூடப்பட்டுவிடும். அது முழுமையாக மூடப்படாவிட்டால், கவடு அல்லது விதைப்பைக்குள் குடலின் ஒரு பகுதி இறங்கக்கூடிய அளவுள்ள துவாரம் ஒன்றை விட்டுவிடும். இது தோலின் கீழ் ஒரு புடைப்பை உருவாக்கும். இது ஒரு அடிவயிறு சார்ந்த குடலிறக்கம் எனப்படும்.

சிக்கல்கள்

குடலின் ஒரு பகுதி அல்லது வேறொரு உறுப்பு அல்லது திசு இந்தத் துவாரத்தில் சிக்கிக்கொண்டால், அதனுடைய இரத்த விநியோகம் அடைக்கப்பட்டுவிடலாம். இது நசுங்கிய குடலிறக்கம் என அழைக்கப்படும். இது சம்பவிக்கும்போது, அந்தப் பகுதி நிறம் மாறுபட்டதாகவும் வலியுள்ளதாகவும் மாறும். உங்கள் பிள்ளை வாந்தியெடுக்கலாம். இது சம்பவித்தால், உங்கள் பிள்ளையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும், அல்லது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உடனே செல்லவும்.

குடலிறக்கமுள்ள உங்கள் பிள்ளைக்கு மருத்துவர் என்ன செய்யலாம்...

உங்கள் பிள்ளையின் மருத்துவர் குடலிறக்கத்தைப் பரிசோதிப்பார். உங்கள் பிள்ளைக்கு அறுவைச் சிகிச்சை தேவையா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.

சிகிச்சைகள்...

தொப்புள் சார்ந்த குடலிறக்கம்

பெரும்பாலான பிள்ளைகளுக்கு தொப்புள் சார்ந்த குடலிறக்கத்துக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படாது. அது மிகவும் பெரிதாகவிருந்தால் அல்லது தானாகவே மறைந்துவிடாவிட்டால் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டால் அது ஒரு சிறிய அறுவைச் சிகிச்சையாக இருக்கும். அறுவைச் சிகிச்சையின்போது, குடல் திரும்பவும் அதனிடத்தில் வைக்கப்படும். அடிவயிற்றுச் சுவர்த் தசைகள் தைக்கப்படும். [ii] பெரும்பாலும், அறுவைச் சிகிச்சை 3 வயதுக்குப் பின்பு தான் செய்யப்படும். தொப்புள் சார்ந்த குடலிறக்கம் நசுங்கிப் போவது மிகவும் அரிதானது.

அடிவயிறு சார்ந்த குடலிறக்கம்

குடலிறக்கம் நசுங்கிப்போயிருக்கலாம் என்பதால் அடிவயிறு சார்ந்த குடலிறக்கமுள்ள பிள்ளைகளுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும். வழக்கமாக, அறுவைச்சிகிச்சை முன்கூட்டியே பதிவு செய்யப்படும். ஆயினும், குடலிறக்கம் அதிக வலியுள்ளதானால், உங்கள் பிள்ளைக்கு அவசர அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
அறுவைச் சிகிச்சையின்போது, சிறு குடல், அல்லது வேறு உறுப்பு அல்லது திசு, அதன் சரியான இடத்துக்குத் தள்ளி வைக்கப்படும். குடலிறக்கத்துக்குக் காரணமாக இருக்கும் துவாரம் அல்லது இடைவெளியை அறுவை மருத்துவர் சரி செய்வார். வேறொரு குடலிறக்கம் அல்லது பலவீனத்திற்காக, அறுவை மருத்துவர் கவட்டின் மறுபக்கத்தையும் பரிசோதிப்பார்.
பொதுவாக, உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சை நடைபெற்ற அன்றே வீடு திரும்பலாம். ஒரு சில நாட்களில் அவன் சுறுசுறுப்புள்ளவனாகிவிடுவான்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்..

நீங்கள் ஒரு மென்மையான புடைப்பை அவதானித்தால் அல்லது ஒரு குடலிறக்கம் இருப்பதாகச் சந்தேகித்தால், உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரிட ம் ஒரு மருத்துவ சந்திப்புத் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
பின்வரும் நிலைமைகளின் போது, உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும், அல்லது தேவைப்பட்டால் 911ஐ அழைக்கவும்:

  1. வீக்கத்தில் கடும் வலி
  2. குடலிறக்கம் பெரிதாக மற்றும் கடினமாக இருக்கிறது
  3. உங்கள் பிள்ளை வாந்தியெடுக்கிறான்
  4. குடிலிறக்கம் சிவப்பு நிறமாக அல்லது நிறம்மாறியதாகத் தோன்றுகிறது

முக்கிய குறிப்புகள்


  1. அடிவயிறு சார்ந்த குடலிறக்கம் 100 குழந்தைகளுள் 5 குழந்தைகளுக்கு ஏற்படும். அவை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யப்படும்.
  2. தொப்புள் சார்ந்த குடலிறக்கம் தானாகவே பொருந்திக்கொள்ளும். அவற்றிற்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படாது.
  3. உங்கள் பிள்ளை வாந்தியெடுத்தால் அல்லது வீக்கத்தில் வலி அல்லது நிறமாற்றம் இருந்தால் உடனே மருத்துவ உதவியை நாடவும்.
  4. சிகிச்சையளிப்பதற்கு ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்படும். அதில், குடலைத் திரும்பவும் அதன் சரியான இடத்தில் வைத்து, அடிவயிற்றுச் சுவரில் தையல்கள் போடப்படும்.

குடலிறக்கத்தைச் சீர் செய்யும் பழைய முறைகள் சிறந்தவையா? என்னென்ன முறைகள்?:
 இதற்குக் கையாளப்படும் பழைய முறைகள், 150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழக்கத்தில் இருந்து வந்துள்ளன. அவை, மிகவும் சிறந்தவையே. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
  1. *இயன்ற வரை அதிகம் நடக்க வேண்டும்.
  2. *வழக்கமாக எந்த அளவுக்கு எடை தூக்கி வந்தாரோ, அந்த அளவு எடையைத் தூக்கலாம்.
  3. *நோயாளி மாடிப்படிகளில் ஏறி இறங்கலாம்.
  4. * குத்துக்காலிட்டு உட்காரும், இந்திய வகைக் கழிப்பிடத்தைப் பயன்படுத்தலாம். இவற்றால் எல்லாம் குடலிறக்கம் ஒரு போதும் மீண்டும் ஏற்படாது.
குடலிறக்கத்தைச் சரி செய்வதற்கான சிறந்த வழி எது?: 
சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை (மெஷ்), இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் அந்தப்பொருள் (மெஷ்), குடலிறக்கம் மீண்டும் ஏற்படாமல் தடுக்கிறது. இது, திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்தப் பகுதிக்கு வலுவூட்டும். மிகச் சிலருக்கு நோய் தொற்று ஏற்பட லாம். “மெஷ்’ சுருண்டு விடலாம். இவற்றை, உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.


தடுப்பு முறைகள்...

அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?

நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசிய
ம்......

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.

இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.


இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...



பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்படும்போது இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்காக சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த வலை திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்த பகுதிக்கு வலுவூட்டுகிறது.இயற்கைக் கடன்களை கழிக்கும்போது தேவையில்லாமல் சிரமப்படுவதை (முக்குவது) தவிர்த்தாலும் குடலிறக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே...

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : அ .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment