Sunday 15 January 2012

மாறுகண் வரமா? சாபமா? ஒரு பார்வை


மாறு கண் :SQUINT
இரண்டு கண்களின் ஒத்திசைவு குறைபாடே மாறுகண் எனபடுகிறது . குழந்தைகள் மனதளவில் ஒரு வித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் , எனவே விரைந்து கண் மருத்துவரை அணுகி நலம் பெறவேண்டும்


சாதாரணமாக நாம் பார்க்கும் போது இரண்டும் கண்களும் ஒரே நேரத்தில் ஒரே திசையில் நகரும் , ஆனால் மாறுகண் உள்ளவருக்கு ஒரு கண் மட்டும் ஒரே திசையில் நகராமல் இருக்கும் .

இதில் இரண்டு வகைகள் உள்ளன :
CONCOMITTANT SQUINT
NON CONCOMITTAT SQUINT - (PARALYTIC SQUINT)

நாம் நேராக பார்க்கும் போது நமது இரு கண்களும் நடுவில் இருக்கவேண்டும் , அனால் PARALYTIC SQUINT என்ற வகையில் ஏதேனும் ஒரு கண் எந்த திசையிலும் நகராமல் அப்படியே இருக்கும் .

PARALYTIC SQUINT.: இதனை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்


CONCOMITTANT SQUINT இரண்டு வகைப்படும் :


CONVERGENT SQUNT
DIVERGENT SQUINT
CONVERGENT SQIUNT : நாம் நேராக பார்க்கும் போது ஒரு கண் மட்டும் உள் நோக்கி , அதாவது மூக்கு நோக்கி போகும்.
இதில் இரண்டு வகை உள்ளது
ACCOMMODATIVE TYPE
NON ACCOMMODATIVE TYPE

ACCOMMODATIVE TYPE CONVERGENT SQIUNT : இதனை மூன்று வயதிற்குள் மருத்தவரிடம் காண்பித்தால் சில பயிற்சி மற்றும் கண் கண்ணாடி மூலம் சரி செய்ய முடியும் . ஏன் எனில் சில சமயம் இது பார்வை குறைபாடினால் வருகிறது .(HIGH HYPERMETROPIC REFRACTORY ERROR)

NON ACCOMMODATIVE TYPE : இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்


DIVERGENT SQIUNT: நாம் நேராக பார்க்கும் போது ஒரு கண் மட்டும் வெளி நோக்கி , அதாவது காது நோக்கி போகும்
DIVERGENT SQUINT - கட்டாயம் அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் .இது தானாக சரி ஆகாது.

அறுவை சிகிச்சை செய்ய சரியான நேரம் எது ?
அனைத்து வகையான மாறு கண் வகையும் 5 வயதிற்குள் செய்திட வேண்டும் , ஏனெனில் 5 வயதிற்கு பிறகு செய்தால் கண்ணின் அசைவு சரி ஆகிவிடும் ஆனால் பார்வையில் முனேற்றம் அவ்வளவாக இருக்காது .


அறுவை சிகிச்சை பாதுகப்பனதா ?
ஆம் , அறுவை சிகிச்சை கண்ணின் உள்ளே செய்வது அல்ல , மாறாக கண்ணை சுற்றி உள்ள கண் தசையில் செய்யபடுகிறது , எனவே பயம் தேவை இல்லை .


PATCHING FOR SQUINT : அறுவை சிகிச்சைக்கு முன் , சில நேரங்களில் PATCHING என்ற தற்காலிக முறையை கடை பிடித்தல் நலம் . இதனால் மறுகண்ணின் பார்வை இழக்காமல் பாதுகாக்க படும் . இந்த முறையில் நல்ல கண்ணை மூடி வைத்து , மாறுகண்ணுக்கு வேலை கொடுப்பது ஆகும் .இதனால் மறுகண்ணின் செயல்பாடு அதிகரிக்கும்

1 comment:

  1. தகவல்களுக்கு நன்றிகள்...

    ReplyDelete