Monday 16 January 2012

குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement)....?


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி ?
          ஒவ்வொரு மனிதனும் தனது பிள்ளைகளை நல்ல வழியில் வளர்த்தெடுக்கவே பெரும் ஆசை கொள்வான். அனால் இன்றைய நவீன காலத்தில் கல்வி பெரும் வியாபாரமாகி விட்ட நிலையில் ஒரு சாதாரண குடிமகனால் என்ன செய்ய முடியும்.
              அதற்கு ஒரு சிறிய தீர்வாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். பெரும் பொருட்செலவுகள் எற்படாது.
தேவையான பொருட்கள்-
1 பலகை துண்டு
1 மின்கலம் battery
1 மின் குமிழ் Bulb
கடத்தி (வயர்)
வளையக் கூடிய கம்பி
1 சட்டை ஊசி (pin)

செய்முறை
படத்தில் உள்ளது போல ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள். சரியான முறையில் அனைத்தையும் பொருத்திக் கொள்ளுங்கள்

        இப்போது அந்த வளையத்தை உங்கள் வலது கையால் பிடித்து வளைக்கப்பட்டுள்ள கம்பியினுள் அடி வரை கொண்டு சென்று மீள திருப்பிக் கொண்டு வர வேண்டும். வளையம் கம்பியில் படுமாக இருந்தால் மின் சுற்று முழுமையடைவதால் மின் குமிழ் எரியும் ஆள் அவுட் எப்படி விளையாட்டு பிடிச்சிருக்கா ?
             அது மட்டுமல்ல இதை இரண்டு கைகளாலும் செய்ய வேண்டும். அது தான் மிக மிக முக்கியமாகும் காரணம் மூளையின் இரண்டு சோணையறையிலும் நுண் செயற்பாட்டுக்கான (fine movement) பகுதிகள் தனித் தனியாகவே பிரிக்கப்பட்டுள்ளது.
           இதன் மூலம் மிக நுண்ணிய வேலைகளையும் விரைவாகச் செய்ய முடியும் உதாரணத்துக்கு யானையை எடுங்கள். ஒரு ஊசியை கீழே போட்டு விட்டு யானையையும் எம்மையும் போட்டிக்கு விட்டால் யானை எமக்கு முதல் தனது துதிக்கையால் எடுத்து விடும். வயது போன காலத்தில் வரும் fine tremer (தளர்வு நடுக்கம்) போன்றவற்றையும் இதன் மூலம் தடுக்கலாம்.
               முயற்சித்துப் பாருங்கள் மகத்தான மகவை உருவாக்குங்கள்.
               பலருக்கு இச் செய்தியை பரவ செய்ய வேண்டுமென்றால் கீழே உள்ள மூஞ்சிப் புத்தக (face book) சொடுக்குங்கள்.

No comments:

Post a Comment