Thursday 19 January 2012

தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்

 

  
 IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.
 இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் வழக்கம் போல் இடஒதுக்கீட்டை வழங்கமால் தமிழக அரசு ஏமாற்றுமா? என்ற சந்தேகமும் தொடர்கின்றது. இதுவரை பணி அமர்த்தப்பட்ட அரசு பணிகளில் 3.5 % நடைமுறை படுத்தபடவில்லை. ஆனால் இப்போது அறிவித்துள்ள பணி மிக முக்கியமானது. இதில் கட்டாயம் 3.5% இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியே ஆகவேண்டும். எனவே பட்டதாரி முஸ்லீம்கள் இந்த வாய்ப்பை தவரவிடாமல் உடனடியாக விண்னப்பிக்கவும்.  காவல் துறையாலும், அரசு அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்பட்ட நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் சமூக அக்கரை உள்ள பட்டதாரி முஸ்லீம் இளைஞர்கள் இந்த தேர்வை எழுத முன்வர வேண்டும்

இந்த தேர்வை பற்றிய முழு விபரம்.
யார் விண்ணப்பிக்க முடியும்?
1.  ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். தொலை தூர கல்வியில் படித்துஇருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
2. 21-வயதிற்க்கு மேல் இருக்க வேண்டும். 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
3. காவல் துறை பணிகளில் சேர உடல் தகுதி Physical fitness  இருக்க வேண்டும்
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :  ஜனவரி 28
விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் : அனைத்து மாவட்ட தலைமை தபால் நிலையங்கள், சென்னையில் உள்ள TNPSC அலுவலகம். இந்த  www.tnpsc.gov.in  இணைய தளத்திற்க்கு சென்று ஆன்லைனிலும் விண்ணப்பிக்க்லாம். விண்ணப்பத்தின் விலை ரூ.30.
தேர்வு கட்டணம்  : முதல் கட்ட தேர்வு ரூ.75.  இரண்டாம் கட்ட தேர்வு  ரூ.125
தேர்வு நடக்கும் இடங்கள் : அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுகள் நடத்தபடுகின்றன
சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் :
1. 10 - ஆம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்ட படிப்பிற்கான சான்றிதழ். ஒரிஜினல் சர்டிபிகேட்டை சமர்பிக்க வேண்டாம், நகலை அட்டஸ்டேஷன் செய்து அனுப்பினால் போதும்.
2. உடல் தகுதி Physical fitness சான்றிதழ்
3. சாதி சான்றிதழ்
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
Tamil Nadu Public Service Commission,
Commercial Taxes Annexe Building, No.1
Greams Road, Chennai – 600 006
தேர்வை பற்றி
 இந்த தேர்வு மூன்று கட்டங்களாக நடக்கும். முதல் கட்ட தேர்வு மற்றும் இரண்டாம் கட்ட தேர்வு எழுத்து தேர்வாகும். இதில் தேரியவர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 இந்த தேர்வு சம்மந்தமான முழு தகவலும் www.tnpsc.gov.in  இந்த இணைய தளத்தில் உள்ளது. மேலும் விபரங்கள் அறிய sithiqu.mtech@gmail.com இந்த மின் அஞ்சலில் தொடர்புகொள்ளவும்.

No comments:

Post a Comment