இறை தூதர்களைக் குறித்து பைபிளில் காணப்படும் தரம் தாழ்ந்த குறிப்புகள் அது மனிதக் கரங்களால் மாசுபட்டது என்பதற்கான ஆதாரம் என்பதைத் தெளிவான சான்றுகளுடன் இஸ்லாம் கல்லி தளத்தில் வெளியிடப்பட்டது. உண்மையை உட்கொள்ள இயலாத கிறித்தவ மிஷனரிகள் (ஈஸா குரான்) மறுப்பு என்ற பெயரில் எதைஎதையோ உளறிக் கொட்டியுள்ளனர். இத்தகைய உளறல்களில் இவர்களின் அறியாமையும் முரண்பாடுகளும் வெட்ட வெளிச்சமாகியுள்ளன. முரண்பாடுகளை மறைக்க நொண்டிக் காரணங்களைக் கூறிய போது மேலும் மேலும் முரண்பாடுகள்!
தன் தாயை நோக்கி இயேசு பெண்ணே! என்று தரமற்ற முறையில் அழைத்ததாகக் குறிப்பிடும் பைபிளின் (யோவான் 2: 1-5) வாசகத்தைச் சுட்டிக் காட்டி அவரைத் தாயை மதிக்காதவர் என்று பைபிள் சித்தரிப்பதாக இஸ்லாம் கல்வியின் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. அதற்கு இவர்கள் அளித்த மறுப்பின் சாராம்சம்:
தன் தாயை பெண்ணே என்று இயேசு அழைத்ததில் தவறில்லை, காரணம் மரியாள் இயேசுவின் தாய் மட்டுமல்ல, இயேசு மரியாளின் கடவுளாகவும் இருந்தார்!
கிரேக்க புலவர் "ஹோமர் - Homer " என்பவர் எழுதிய கவிதைகளில், ஒடிஸ்ஸியஸ்(Odysseus) என்பவர், தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை(Penelope) குறிப்பிடும் போது இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்.
ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சீசர் அகஸ்தஸ், எகிப்து இராணியாகிய "கிளியோபாட்ராவை" குறிப்பிடும் போது, இந்த வார்த்தையையே பயன்படுத்துகின்றார்.
மற்ற பெண்களைக் குறித்தும் இயேசு பெண்ணே என்று அழைத்துள்ளார். எனவே தன் தாயைக் குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டதில் தவறில்லை.
இனி இவர்கள் வைத்த வாதங்களில் இவர்களின் அறியாமையும் முரண்பாடுகளும் எங்ஙனம் வெளிப்படுகிறது என்பதைக் காண்போம்.
//மரியாள் இவ்வுலகத்தில் பெயரளவிற்கு இயேசுவிற்கு தாயாக இருக்கிறார், ஆனால், அந்த மரியாளுக்கு "இயேசு" தேவனாக இருக்கிறார் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.//
மரியாளுக்கு இயேசு கடவுளாம்! மரியாள் இயேசுவின் அடிமையாம்! பெண்ணே என்று தன் அடிமையை அழைத்துள்ளார்! இதில் என்ன தவறு என்று கேட்டுள்ளனர்!! இதற்குப் பின்னர் இவர்கள் கூறியதில் உள்ள முரண்பாடுகளைக் குறிப்பிடும் முன் இவர்கள் நமது சிந்தனைக்கும் அறிவுக்கும் இழைக்கும் அநீதியைப் பார்ப்போம். பெண்ணே என்று சாதாரணமாக அழைக்கக் கூடிய ஒரு பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து வரக்கூடிய நிலையில் உள்ள கடவுள்!!! (இத்தகைய வர்ணனைகளை விட்டும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் பரிநுத்தமானவன்!) தாயும் அடிமையுமானவள் என்று குறிப்பிடுகின்றனர். ஒரு வாதத்திற்காக இதனை ஒத்துக் கொண்டாலும் தனக்கு பிறப்பு அளித்தற்காகவாது தாயே! என்று குறிப்பிடலாம் அல்லவா?
அடுத்ததாக இவர்கள் குறிப்பிட்டுள்ள உதாரணம் இவர்களின் முட்டாள் தனத்தின் உச்சகட்டத்தை வெளிப்படுத்துகிறது.
கிரேக்க புலவர் "ஹோமர் - Homer " என்பவர் எழுதிய கவிதைகளில், ஒடிஸ்ஸியஸ்(Odysseus) என்பவர், தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை(Penelope) குறிப்பிடும் போது இந்த வார்த்தையை பயன்படுத்துகிறாராம்!
ஹோமர் என்ன! இன்று கூட தமிழ்க் கவிஞர்களும் இந்த வார்த்தையைப் பயன் படுத்துகின்றனர். ஆனால் எதற்குப் பயன்படுத்துகின்றனர்? கணவன் மனைவியைக் குறிப்பிடும் போது. காதலன் காதலியைக் குறிப்பிடும் போது. எந்தக் கவிஞனும் தாயை வர்ணிக்க பெண்ணே என்று குறிப்பிடுவதில்லை.
இப்போது நாம் கேட்கிறோம்.
மனைவியை அன்பே! கண்ணே! மணியே! முத்தே! செல்லமே! என்றெல்லாம் கொஞ்சி அழைப்போம். இது போல் தாயை அழைக்கலாமா? மனைவியிடம் நடந்து கொள்வது போல் தாயிடம் நடந்து கொள்ளலாமா? பெண்ணே என்று மனைவியை அழைத்தால் அது அன்பான வார்த்தை! அது போல் தாயை அழைக்கலாமா? அவ்வாறு அழைப்பதை எந்தத் தாயாவது விரும்புவாரா? இதை எழுதிய கிறித்தவரும் தன் தாயை அவ்வாறுதான் அழைக்கிறாரா?
இன்னும் ஆரம்பத்தில் மரியாளுக்கு இயேசு தேவனாக இருந்ததால் அவ்வாறு அழைத்தார் என்று கூறிவிட்டு பின்னர் அன்னபாக அழைத்தார், தாயை அவ்வாறு அழைக்கலாம் என்று கூறி முரண்படுவதேன்??
அடுத்து, ரோம மன்னர் சீசர் எகிப்து அரசியை இவ்வாறு குறிப்பிட்டதாக இவர்கள் காட்டும் உதாரணமும் பொருத்தமற்றதாகும். சீசருக்கு எகிப்தின் அரசி என்ன அம்மாவா?
எது எவ்வாறாயினும் சத்தியத்தை உட்கொள்ள இயலாத கிறித்தவ சபை (ஈஸா குரான்) மறுப்பு என்ற பெயரில் உளறிக் கொட்டியது அவர்களுக்கே சம்மட்டி அடியாக விழுந்துள்ளது!
இஸ்லாமின் இறை தூதராகிய இயேசுவைக் குறித்த இத்தகைய கற்பனைகளே பைபிளில் மனிதச் சரக்குகள் மலிந்துள்ளன, அது இறை வேதமல்ல என்பதற்கான சான்றுகளா உள்ளன.
முஸ்லிம்களுக்கு இயேசுவைக் குறித்து இத்தகைய தரம் தாழ்ந்த நம்பிக்கை கிடையாது. தன் தாய்க்கு நன்றியுடையவராக இருப்பதில் முஸ்லிம்களுக்கே முன்மாதிரயாகத் திகழும் மகான் குர்ஆன் குறிப்பிடும் ஈஸா அலைஹிஸ்ஸலாம்! இதோ குர்ஆன் கூறுகிறது.
நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை நற்பாக்கியமுடையவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும். இவர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா. எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்)
(திருக்குர்ஆன் 19: 30-34)
No comments:
Post a Comment