தாய்க்கும் சேய்க்கும் இடையே பாலமாக செயல்பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் ஒரு அற்புதமான அமைப்பே தொப்புள் கொடி .
இதனுள் மூன்று ரத்த குழாய்கள் இருக்கும் . இரு தமனி (artery ) மற்றும் ஒரு சிரை(vein ). பிறந்தவுடன் கத்தரிக்கும் போது குறுக்கு வெட்டு தோற்றத்தில் இந்த மூன்று ரத்த குழாய்களும் தெரியும் . பிறவி குறைபாடு ,இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஒரு தமனி மட்டுமே இருக்கலாம் . (single umbilical artery )
தொப்புள் கொடி குழந்தை பிறந்த 7 - 10 நாட்களில் விழுந்துவிடும் .இரண்டு வாரங்களுக்கு பிறகும் விழவில்லை எனில் நோய் தோற்று உள்ளது என்று பொருள் ,உரிய சிகிச்சை செய்யவேண்டும்.
umbilical granuloma |
இதற்க்கு silver nitrate மருந்தை மருத்துவர் அறிவிரையின் பேரில் பயன்படுத்தவேண்டும் .
cleaning |
கிராமங்களில் இன்னும் சுருட்டு சாம்பல் வைப்பது , சாணம் தடவுவது போன்ற செயல் களை செய்து வருகின்றனர் . இது முற்றிலும் தவறு .
தொப்புள் கோடியில் உள்ள ரத்த குழாய்கள் கல் ஈரலில் சென்று முடிகின்றன , எனவே இங்கே நோய்தொற்று வந்தால் கல்லீரலை கூட பாதிக்கும் .கவனம் அவசியம் .
தொப்புள் கொடிக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு . நாள் பட்ட புண்களை ஆற்ற இதிலிருந்து மருத்துகள் தயாரிக்க படுகிறது (placentrex ).
மேலும் தொப்புள் கொடி ரத்தம் பல நோய்களுக்கு ஒரு சரியான தீர்வாக அமையபோகிறது -( cord blood and stemcell )
No comments:
Post a Comment