Sunday 8 January 2012

பூமி உருண்டை என்பதை எவ்வாறு நிரூபிப்பது?

பூமி உருண்டை என்பதை எவ்வாறு நிரூபிப்பது?'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும். இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.'
31 : 29 - குர்ஆன்

இந்த பூமியின் அமைப்பானது சமதளம் என்றே முந்தைய கால மக்கள் நம்பியிருந்தனர். அவர்கள் பூமியில் அதிக தூரம் பயணிக்க பயந்ததுண்டு. பூமி சம தளமாக இருப்பதால் எல்லைக்குச் சென்றால் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் தான் காரணம்.

1597 அம் ஆண்டில் வாழ்ந்த ஃபிரான்ஸிஸ் டிரக் என்ற விஞ்ஞானிதான் பூமி உருண்டையானது என்று உறுதியாகக் கூறினார். இந்த உண்மையைத்தான் குர்ஆனும் சொல்கிறது.

பகலும் இரவும் ஒன்றுக்குள் ஒன்று புக வைக்கிறது என்ற இந்த நிகழ்வு பூமி உருண்டையாக இருந்தால்தான் நடைபெறும். சம தளமாக இருந்து பூமி சுற்றாமலும் இருந்தால் ஒன்றோடு ஒன்று புக வைக்கும் நிகழ்வு நடக்காது.

'சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.'
13 : 2 - குர்ஆன்

நாமெல்லாம் பள்ளியில் படிக்கும் காலத்தில் விஞ்ஞானப் பாடத்தில் சூரியனைப்பற்றி படித்திருப்போம். சூரியனானது நிலையானது. அசைவற்றது. மற்ற கோள்கள் தாம் அதைச் சுற்றி சுழல்கிறது. சூரியன் தன் இடத்தை விட்டு நகர்வதில்லை என்பதாகும்.

அனால் இன்று விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பானது சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் சுழல்கின்றன. சூரியன் ஒரு முறை தன்னைத் தானே சுற்றி வர சுமார் இருபத்தைந்து நாட்கள் ஆகிறது. அது மட்டும் அல்ல சூரியனில் கருப்புப் புள்ளிகளும் உள்ளன என்பதாகும்.

நேற்று வரை விஞ்ஞானிகள் சூரியன் அசைவற்றது. நிலையானது. என்று சொன்னவர்கள் இன்று தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டார்கள். 'மற்ற கோள்களோடு சேர்ந்து சூரியனும் ஓடுகின்றது' என்ற குர்ஆனின் கருத்தை இன்று உண்மை என்று அறிவியலாரும் ஒத்துக் கொண்டனர். இந்த இடத்திலும் அறிவியலாரை பின்னுக்குத் தள்ளி விட்டு குர்ஆன் நிமிர்ந்து நிற்கிறது.

சந்திரனின் பிரகாசம்:

'வானத்தில் நட்சந்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும் ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்'
25 : 61 - குர்ஆன்

சந்திரன் தன் சொந்த ஒளியினாலே பிரகாசிக்கிறது என்று முந்தைய மனிதர்கள் நம்பியிருந்தனர். ஆனால் இன்று சந்திரனின் ஒளியானது அதன் சொந்த ஒளியல்ல. சூரியனின் ஒளியைத்தான் அது பிரதிபலிக்கின்றது என்று விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர். அதாவது சந்திரன் சூரியனின் ஒளியை வாங்கி அதைத் திரும்ப வெளியிடுகிறது. ஆகையால் நாம் சந்திரனைக் காணும் போது அதில்காணும் ஒளியானது சந்திரனின் ஒளியல்ல. சூரியனின் ஒளியைத் தான் அது திரும்பக் கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது என்று சில ஆண்டுகளுக்கு முன்தான் விஞ்ஞானம் கண்டறிந்து கூறியது.

குர்ஆன் சந்திரனின் ஒளிக்கு 'முனீர்' என்னும் பதத்தை உபயோகப் படுத்தியுள்ளது. இந்த அரபி பதத்துக்கு நேரடியான பொருள் பிரதிபலிக்கின்ற ஒளி. மிகவும் கவனமாக நேர்த்தியாக சந்திரனின் ஒளியை பிரதிபலித்தல் என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ளதால் குர்ஆன் இறை வாக்குதான் என்பது மேலும் உறுதியாகிறது.
 
சந்திரனின் இறைவனே மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment