Friday 13 January 2012

இஸ்லாத்தில் பெண்கள் நிலை: இன்றைய யதார்த்தம் என்ன?

 

 

மார்க்கத்தைக் கற்ற நமது இளைஞர்களில் அனேகர் திருமண விடயத்தில் மட்டும் 'உம்மாவுக்காக!' என்று 'தாய் சொல் தட்டாத தனயர்களாய்' மாறி லட்சங்களுக்குத் தன்னை விற்றுவிடத் தயங்காத பின்னடைவு அல்லது பெண்பார்க்கும் போதே நல்ல 'பசை'யுள்ள புளியங்கொம்பாகப் பார்த்துப் பிடித்துக்கொள்ளும் சாமர்த்தியம்(?!)

 

இன்னொருபுறம் திருமணத்தின் பின்னர் 'பிறருக்கு அழகுகாட்ட' என்று ஏற்கெனவே அவள் போட்டிருந்த ஃபர்தாவைக் கழற்றிவிட்டு வெறுமனே ஒப்புக்கு ஷால் போடுமாறு நிர்ப்பந்திக்கும் 'வீரம்?!' கூட ஆங்காங்கே வெளிப்படத்தான் செய்கிறது. இப்படி இப்படி எத்தனை! எதைச் சொல்ல? எதை விட?


தமக்கு சீதனம் சேர்க்கவும், நிர்க்கதியான நிலையிலிருக்கும் தமது குடும்பத்தைப் பராமரிக்கவும் என்று எத்தனை ஆயிரம் முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கில் பணிப்பெண்களாய் முதுகுமுறிய வேலை பார்க்கிறார்கள்? 


மஹ்ரம் துணையின்றி வேலை வாய்ப்புக்காக தனியே வெளிநாடு போவது ஹராம் என்று 'ஃபத்வா' கொடுக்கும் நமது மார்க்க மேதைகள் இந்த விஷச் சக்கரத்திலிருந்து பெண்களும் நம் சமூகமும் மீள்வதற்கான தயாரிப்புகளைச் செய்துகொடுப்பது பற்றி சமூகத்தைத் தட்டியெழுப்பவோ, அந்நிய கலாசாரத்தால் சீர்கெட்டுப் போயுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பவோ என்ன தயாரிப்புகளைச் செய்துள்ளார்கள்? 
இஸ்லாம் வாழும் மார்க்கம். வாழ்வு முழுமையும் வணக்கம் என்று கற்றுத் தந்துள்ள உன்னத மார்க்கம். எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு தந்துள்ள நடைமுறை மார்க்கம். அப்படியிருக்க யதார்த்தநிலை எவ்வளவு நேர்மாறாக இருக்கிறது?]]


ஒருகாலத்தில் மற்ற சமயத்தவர் மத்தியில் பெண்ணுக்கு ஆன்மா உண்டா இல்லையா என்ற பட்டிமன்றம் ஒருபுறம், பெண் என்பவள் இழிபிறப்பு என்றும் தீண்டத்தகாதவள், துரதிருஷ்டம் பிடித்தவள் என்றும் தள்ளிவைத்து எள்ளி நகையாடும் அவலநிலை மறுபுறம் என்று உலகத்தில் பெண்ணினம் சீரழிந்துகொண்டிருந்தது. பெண்ணைப் போகப் பொருளாய், விற்பனைப் பொருளாய் பார்த்த, பிறந்த உடனேயே குழிதோண்டிப் புதைத்த ஒரு காலம் இருந்ததை நாம் அறிவோம். அல்லாஹ் தஆலா கூறுகிறான்: 
''அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்''. (திருக்குர்ஆன்: 16:58)

இந்நிலையில்தான் இஸ்லாம் என்ற உன்னத மார்க்கம் பெண்ணுக்கு உயிரோடு உணர்வும், அறிவோடு ஆன்மாவும் உண்டு என்பதை உலகுக்கே உரத்துச் சொன்னது. தாய்மையை மேன்மைப்படுத்தியது. பெண்ணுக்கும் உரிமைகள் உண்டென்பதை, சொத்துரிமை முதல் திருமணத்தில் பெண்ணின் விருப்பத்துக்கு மதிப்பளிப்பது வரை பெண்ணை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது. 


ஃபர்தா என்ற உன்னத வரையறையை வழங்கி அவளைக் கண்ணியப்படுத்தியது. மஹர் எனும் உரிமையை வழங்கி அவளின் எதிர்காலத்துக்கு உத்தரவாதமளித்தது. 
பெண்பிள்ளைகளைப் பெற்று நல்ல முறையில் வளர்த்து உரியமுறையில் திருமணமுடித்துக் கொடுக்கும் தந்தைக்கு சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டது. 


மனைவி என்ற நிலையில், 'உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியருக்குச் சிறந்தவர்களே!' என்று அவளுக்கு உயர்வளித்தது. 


தாய் என்ற நிலையில், 'உறவுகளில் முதன்மையாய் நேசிக்கப்படத் தகுதியான முதல் மூன்று இடங்களையும்' தாய்க்கே வழங்கியது. 


இப்படி எத்தனை எத்தனை உன்னதங்களை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது!
எல்லாம் சரிதான்! ஆனால்.... 


இன்றைய நமது சமுதாயத்தின் யதார்த்தம் என்ன? இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள இந்த உன்னதங்களையெல்லாம் குறைவே இன்றி நமது சமுதாயம் பெண்ணுக்கு உள்ளபடி வழங்கியுள்ளதா? 

அவள் கண்ணியத்துக்குரியவளாய் மதிக்கப்படுகிறாளா?


பெண்பிள்ளை பிறந்துவிட்டால், 'ஐயோ! இவளை எப்படிக் கரைசேர்ப்பேன்?' என்று பெற்றோர் கவலையோடு திகைத்துப்போகும் நிலை இன்று இல்லவே இல்லையா?


நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (திருக்குர்ஆன்: 4:4) 



பெண்கள் நான்கு காரணங்களுக்காகத் திருமணமுடிக்கப்படுகின்றனர் என்று கூறிய இஸ்லாம், இறுதியில் 'மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே தெரிவுசெய்யுங்கள்' என்று கூறியிருப்பதை எத்தனை பேர் பொருட்டாகக் கருதுகின்றார்கள்? மார்க்கம் கற்றவர்கள்கூட வெள்ளைத் தோலை வலைபோட்டுத் தேடும் நிலை இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்லிவிடத்தான் முடியுமா என்ன? 


கணவன் மரணித்தபின் விதவையான பெண்களுக்கோ திருமண வாழ்வில் தோல்வியுற்று நிற்கும் பெண்களுக்கோ மறுவாழ்வு கொடுக்கும் துணிவு நமது இளைஞர்களில் எத்தனை பேருக்கு வந்துள்ளது? அப்படியே தமக்கிருக்கும் உரிமையைப் பயன்படுத்தி இரண்டாம் திருமணம் முடிப்போர்கூட இருபதுக்குள் இளம் கன்னியையே தேடி மணக்கும் நிலைதானே பெரும்பாலும் நடைமுறையில் இருக்கிறது?


மஹர் என்பதன் தாத்பரியத்தை உணராமல் ஐநூறோ ஆயிரமோ ஒப்புக்குக் கொடுக்கும் நிலையில், தன் கணவனை இழந்த அல்லது விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணின் எதிர்காலத்துக்கான உத்தரவாதம் சமூகத்தால் வழங்கப்பட்டுள்ளதா? 


அல்லாஹ் கூறுகிறான்: ''இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.'' (திருக்குர் ஆன்: 2:41) 


''(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்;. பாலூட்டும் தாய்மாகளுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்;. எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.'' (திருக்குர் ஆன்: 2:233.)



தமக்கு சீதனம் சேர்க்கவும், நிர்க்கதியான நிலையிலிருக்கும் தமது குடும்பத்தைப் பராமரிக்கவும் என்று எத்தனை ஆயிரம் முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கில் பணிப்பெண்களாய் முதுகுமுறிய வேலைபார்க்கிறார்கள்? 


மஹ்ரம் துணையின்றி வேலை வாய்ப்புக்காக தனியே வெளிநாடு போவது ஹராம் என்று 'ஃபத்வா' கொடுக்கும் நமது மார்க்கமேதைகள் இந்த விஷச் சக்கரத்திலிருந்து பெண்களும் நம் சமூகமும் மீள்வதற்கான தயாரிப்புகளைச் செய்துகொடுப்பது பற்றி சமூகத்தைத் தட்டியெழுப்பவோ, அந்நிய கலாசாரத்தால் சீர்கெட்டுப் போயுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பவோ என்ன தயாரிப்புகளைச் செய்துள்ளார்கள்? 


நமது இஸ்லாமிய இயக்கங்கள் இந்த அவலங்களை ஒழித்து சமூகத்தின் கண்களாய் உள்ள பெண்களின் கண்ணீர் துடைக்க என்னென்ன தீர்வுத் திட்டங்களை முன்வைத்து நடைமுறைப்படுத்தி வருகின்றன?


இஸ்லாம் வாழும் மார்க்கம். வாழ்வு முழுமையும் வணக்கம் என்று கற்றுத் தந்துள்ள உன்னத மார்க்கம். எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு தந்துள்ள நடைமுறை மார்க்கம். அப்படியிருக்க யதார்த்தநிலை எவ்வளவு நேர்மாறாக இருக்கிறது?


இன்னொருபுறம், திருமணத்தின் பின் சதா வேலை...வேலை என்ற அவதிப்படும் தமது மனைவியருக்கு ஓய்வு நேரத்திலாவது சற்று ஒத்தாசை செய்துகொடுக்கும் ஆண்கள் எத்தனை பேர்? விடுமுறை நாளில் சமையலுக்கு ஓய்வுகொடுத்துவிட்டு வெளியில் போய் சாப்பிட்டு வரலாம் என்றோ வெளியில் இருந்து சாப்பாடு தருவிக்கலாம் என்றோ ஆதரவாய்க் கூறும் ஆண்கள் எத்தனைபேர்? அவள் செய்யும் பணிகளில் நல்லவற்றை நாலு வார்த்தையில் பாராட்டி, அவளுக்கு நன்றி தெரிவிக்கும் இங்கிதம் எத்தனை பேரிடம் உள்ளது? 


மாதவிடாய்க் காலங்களிலும் தாய்மையுற்றுக் கருவைச் சுமந்திருக்கும் நிலையிலும் பெண்கள் உளவியல் ரீதியாக சஞ்சலமுற்ற நிலையில் காணப்படுவர் என்பதை உளவியலும் மருத்துவமும் சொல்லியுள்ள நிலையில் எத்தனைபேர் அவளுடன் இதமாக, ஆதரவாக, ஆறுதலளிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்கள்? கல்யாணம் கட்டிக் குழந்தை பெற்றதுக்குப் பரவாயில்லை, தொடர்ந்து படி என்றோ உன் ஆற்றல்களை சமூக மேம்பாட்டுக்காய்ப் பயன்படுத்து என்றோ ஊக்கமளிக்கும் ஆண்கள் எத்தனைபேர்? 


கண்ணியத்துக்குரிய என் அன்புச் சகோதரர்களே! 
கற்பூரம் சுமக்கும் கழுதைகள் போல உன்னத மார்க்கமொன்றை, இறையோனின் மாபெரும் ஒளிவிளக்கைச் சுமந்திருந்தும் போகும் வழிதெரியாமல் இருட்டுக்குள் குருட்டுத் தவம் செய்து கொண்டிருக்கும் நமது சமுதாயத்தின் அவலநிலையையும், பெண்களின் முடிவலித் துயரங்களையும் கண்டும்கேட்டும் மனம் வெதும்பிப் போன நிலையில் எழுந்த கேள்விகள் இவை. இஸ்லாத்தில் பெண்ணுக்கு 'எல்லாம்' இருக்கின்றதுதான். எனவே, புதிதாக நமக்கு யாரும் உரிமை பெற்றுத்தரத்தேவையில்லை. அல்லாஹ் ஏற்கெனவே தந்திருக்கிறான் நிரப்பமாக! ஆனால், அவை நமது பெண்களுக்குத்தான் இன்னும் வந்து சேரவில்லை. இஸ்லாத்தில் இருக்கிறது. முஸ்லிம் சமூகத்திடம் நடைமுறையில் இல்லை. இனியேனும் இந்நிலை மாறுமா? பெண்களின் அவலம் தீருமா? சகோதரர்களே பதில்கூறுங்கள்!
ஜஸாக்கல்லாஹு கைரன்! 


நன்றி :   சகோதரி  லறீனா அப்துல் ஹக்


பெண்ணை தலாக் சொன்னபின் அவளையோ குழந்தைகளையோ ஏறிட்டும் பாராமல் கைவிட்டுப் போகும் ஆண்கள் எமது சமூகத்தில் எத்தனை பேர் உள்ளனர்? நமது ஆலிம்களில் எத்தனை பேர் தமது ஜும்ஆப் பிரசங்கங்களில் இவற்றைப் பற்றியெல்லாம் எடுத்துச்சொல்லி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றார்கள்? பொறுப்பிலிருந்து நழுவிச் செல்லும் ஆண்களைத் தண்டித்தோ கண்டித்தோ பெண்ணுக்கு நியாயம் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைதான் எமது சமூகத்தில் காணப்படுகின்றதா?
என்றுதான் அல்குர்ஆன் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் எமது சமூகத்தில் இஸ்லாம் சொல்லாத சீதனம் என்ற அனாச்சாரம் தலைவிரித்து ஆடவில்லையா? இலங்கையில் ஒரு குறித்த பிரதேசத்தில் இன்றுவரை முஸ்லிம்கள் மத்தியில் ஒவ்வொரு பெண்குழந்தைக்கும் தனித்தனி வீடுகட்டி, அதற்குரிய பொருட்களையெல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. மாப்பிள்ளையின் தகுதிக்கு ஏற்றபடி (இன்ஜினியர், டொக்டர், லோயர் என்ற ஒவ்வொரு தரத்துக்கும் ஒவ்வொரு ரேஞ்சில் ரேட் நிர்ணயிக்கப்படுகிறது) கார், கொழும்பில் வீடு என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். வேறு பகுதிகளில் இரகசியமாக ரொக்கம் வாங்கி அதில் ஓர் அற்பத் தொகையை 'மஹர்' என்று ஒப்புக்குக் கொடுக்கும் அவலம் இன்னுமே முற்றாக முடிவுக்கு வரவில்லை. இஸ்லாத்திற்கு எதிரான சீதனத்தைக் கொடுத்து மாப்பிள்ளையை 'விலைகொடுத்து வாங்க' மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்கும் பெண்கள் பலர் முதிர்கன்னிகளாய் வீட்டுக்குள் வலம்வரும் நிலை. சீதனம் ஹராம் என்று தெரிந்தும் பெண்ணுக்கு இன்னும் வயதேறினால் அறவே திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்ற அச்சத்தில் எப்படியோ மாப்பிள்ளை வீட்டார் கேட்பதைக் கொடுத்து பெண்ணை 'வாழவைத்து'விடும் பலர். மார்க்கத்தைக் கற்ற நமது இளைஞர்களில் அனேகர் திருமண விடயத்தில் மட்டும் 'உம்மாவுக்காக!' என்று 'தாய் சொல் தட்டாத தனயர்களாய்' மாறி லட்சங்களுக்குத் தன்னை விற்றுவிடத் தயங்காத பின்னடைவு அல்லது பெண்பார்க்கும் போதே நல்ல 'பசை'யுள்ள புளியங்கொம்பாகப் பார்த்துப் பிடித்துக்கொள்ளும் சாமர்த்தியம் (!?!). இன்னொருபுறம் திருமணத்தின் பின்னர் 'பிறருக்கு அழகுகாட்ட' என்று ஏற்கெனவே அவள் போட்டிருந்த ஃபர்தாவைக் கழற்றிவிட்டு வெறுமனே ஒப்புக்கு ஷால் போடுமாறு நிர்ப்பந்திக்கும் 'வீரம்?!' கூட ஆங்காங்கே வெளிப்படத்தான் செய்கிறது. இப்படி இப்படி எத்தனை! எதைச் சொல்ல? எதை விட?

 

No comments:

Post a Comment