Friday, 13 January 2012

அதிசய மருத்துவம் அக்குபங்க்சர்....


 



அக்குபங்க்சர் என்பது மயிரிழையை காட்டிலும் மிக மெல்லிய ஊசி அல்லது கை விரல்கள் மூலம் தோலின் மேல் பகுதியில் தொடுவது மூலம் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை களையக் கூடிய மருத்துவ முறையாகும். இம்முறை 5000 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

  நம்மை விட பல மருத்துவ முன்னேற்றங்களை கண்டுள்ள மேலைநாட்டினர் அக்குபங்க்சர் போன்ற பாரம்பரிய கலைகளை அவற்றின் பக்கவிளைவுகளற்ற, விரைவில் நிவாரணம் அளிக்கும் தன்மையை அறிந்து அவற்றின் மூலம் தங்களின்  நோய்களுக்கு சிகிச்சை பெற மாற்றுமுறை மருத்துவர்களை நாடிச்செல்கின்றனர். அவசர கால நோய் நிலைகளுக்கு ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்தை வேறு மாற்று முறை மருத்துவங்கள் பெற முடியவில்லை என்பது உண்மை.

  1962 ம் ஆண்டில் கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அல்மா அட்டாவில் உலக சுகாதார நிறுவனத்தால் நடைபெற்ற மருத்துவ வல்லுனர்களின் கூட்டத்தில் மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் உள்ள நல்லவற்றை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும், அதன் மூலம் "2000 ம் வருடத்தில் எல்லோருக்கும் நலவாழ்வு" என்ற குறிக்கோளை அடைய தீர்மானம் போட்டனர். அன்று நடந்த மருத்துவ வல்லுனர்களின் கூட்டத்தில் ஏறக்குறைய 96 வகை நோய்களுக்கு அக்குபங்க்சர் மூலம் முதல்நிலை சிகிச்சை அளிக்கலாம் என்று பரிந்துரைக்கபட்டது.


     அக்குபங்க்சர் சீனாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டுவரும் அறிவியல் முறையாகும். மனிதனின் ஆரோகியத்தை மேம்படுத்தவும் நோய் வராமல் தடுக்க கூடிய முறைகளையும் ஒருவேளை நோய் ஏற்பட்டால் அவற்றிலிருந்து நிவாரணம் பெறக்கூடிய விதிமுறைகளையும் நமக்கு எடுத்துறைக்கும் மேன்மையான அறிவியல் கலையாகும்.


சீன மொழியில் ஷன் சியு என்று அறியப்படும் அக்குபஞ்சர் சீன பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. அக்குபஞ்சர் என்பது லத்தீன் மொழியில் உள்ள அகுஸ் (ஊசி)பஞ்சேர் (குத்துதல்) என்ற வார்த்தைகளால் உருவான சொல்லாகும். சீன மொழியிலும் ஷன் சியு என்றா ஊசி மருத்துவம் என்றே பொருள்படுகிறது.
உலகின் பழமையான, அதேவெளை பரவலாக பயன்பாட்டில் உள்ள மருத்துவ முறைகளில் ஒன்றாக அக்குபஞ்சர் உள்ளது. மேலும் நாளுக்கு நாள் இந்த அக்குபஞ்சர் சிகிச்சை முறை அதன் குணபடுத்தல் மற்றும் நோய் தடுப்பு பயன்கள் காரணம் பிரபலமாகியும், பரவலாகியும் வருகிறது. சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி நடைமுறையில் உள்ள இந்த அக்குபஞ்சர் மருத்துவம், பொதுவாக ந்ப்ப்யாளிலள் வலி நிவரணம் பெறவும், அறுவைச் சிகிச்சைக்கான மயக்கநிலை அடையவும்தான் பயன்படுத்தப்பட்டது ஆனால் அந்நிலை மாறிவிட்டது என்கிறார், ஷாங்காய் ஷுகுவாங் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், அக்குபஞ்சர் சிகிச்சையாளருமான ஷன் வெய்துங்க்.
தற்போது அக்குபஞ்சரின் முக்கியத்துவம் வருமுன் காத்தல், தடுத்தல் என்ற அம்சத்தில் உள்ளது என்று சொல்லும் இவர், சீன பாரம்பரிய மருத்துவத்தில் அக்குபஞ்சரின் உயரிய நிலை ஒரு நபரை நீண்ட ஆயுளும், உடல்நலமும் பெறுவதற்காக பிரயோகிக்கப்பட்டது என்கிறார். இன்றைக்கு அக்குபஞ்சரின் சிறிய ஊசிமுனைகள் மக்கள் பலரது வேறுபட்ட பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறையாக நம்பிக்கையளித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக உடல் இளைக்க, உடல் பருமன் குறைக்கவென அக்குபஞ்சர் சிகிச்சையை நாடும் மக்களும், முகப்பொலிவு பெறவும், புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடவும், உளநல மற்றும் இதர உடல் சார் பிரச்சனைகளை தீர்க்கவும் அக்குபஞ்சர் சிகிச்சையை நாடும் மக்களும் இன்றைக்கு வெகுவாக காணமுடிகிறது என்கிறார் மருத்துவர் ஷன் வெய்துங்க்.

நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை தூண்டவும், காயமடைதல் மற்றும் தளர்ச்சி, மன அழுத்தம் ஆகியவை ஏற்படும்போது சுரக்கும் ஹார்மோன்கள் எனும் பல வகை இயக்குநீர்களை வெளிப்படுத்தவும் அக்குபஞ்சர் உதவும். ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, அமிலச் சுரப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை அனுக்கள் தயாரிப்பு ஆகியவற்றிலும் அக்குபஞ்சரால் மாற்றங்கள் அல்லது பாதிப்புகள் ஏற்படுத்த முடியும். அக்குபஞ்சர் ஊசிகள் குறிப்பிட்ட இடங்களில் குத்தப்படும்போது அல்லது சொருகப்படும்போது, சாந்தப்படுத்தும், ஆசுவாசப்படுத்தும், வலி தெரியாமல் இருக்கச்செய்யும், களைப்பாறச் செய்யும் தன்மை கொண்ட என்டார்ஃபின்கள் வெளிப்படுகின்றன. இது மன அழுத்தம், சலிப்பு, எரிச்சல், பதட்டம் ஆகியவற்றை எதிர்கொள்ள உதவும். இந்த மனரீதியிலான, உளரீதியிலான சிக்கல்கள்கூட உடல் பருமனுக்கு காரணமாக அமையும். என்டார்பின்கள் ஜீரண மற்றும் ஹார்மோன் அல்லது இயக்குநீர் அமைவுகளை தூண்டி, வேகமாக ஓடும் சில உறுப்புகளின் அமைப்புகளை சமநிலை படுத்தும், சீராக்கும் என்கிறார் மருத்துவர் ஷன் வெய்துங்க்.

குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை, ஆட்டிசம் எனப்படும் உளநிலை கோளாறு, போன்றைவைகூட அக்குபஞ்சரால் தீர்க்கலாம் என்கிறார் இவர். அட இதென்ன ஆச்சரியம் அக்குபஞ்சருக்கு 461 வகையான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது என்கிறார் 43 வயது மருத்துவரான தூ யுவான் ஹாவ். தனது குழுவினரோடு இணைந்து 4 ஆண்டுகால ஆய்வுகளின் மூலம் அக்குபஞ்சர் இத்தனை நோய்களுக்கு தீர்வு தரக்கூடியது என்று கண்டுபிடித்துள்ளார் இவர். தூ யுவான் ஹாவின் ஆய்வு முடிவுகளின் வழி அறியப்பட்ட ஒரு முக்கியமான தகவல், நரம்பு மண்டலம், ஜீரன அமைப்பு, தசைகள், எலும்பு, தோல், ஆகியவற்றிலான சிக்கல்களுக்கு அக்குபஞ்சரின் ஆற்றல் நல்ல பயனுள்ளதாக அமைந்து குணமடைதல் அதிகமாக இருக்கிறது என்பதாகும். குறிப்பாக நினைவிழப்பு நோய், தோலில் ஏற்படும் சிறங்குகள் அல்லது புண்கள், நரம்பு மண்டலத்திலான தாக்குதல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு அக்குபஞ்சர் நல்ல பலன் தரும் சிகிச்சை என்று தனது 4 வருட ஆய்வில் தூ யுவான் ஹாவ் கண்டறிந்துள்ளார்.


 அக்குபங்க்சர் மருத்துவ முறை 

  • அக்குபங்க்சர் நாடி பரிசோதனை மூலம் சக்தி ஓட்ட குறைபாட்டின் மையத்தை அறிந்து , அதனை சரி செய்யக்கூடிய அக்குபங்க்சர் புள்ளியினை தொடுவதன் மூலம் நோய் களையப்படுகிறது.
  • சிலருக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே குணம் தெரிய ஆரம்பிக்கும்.சிலருக்கு நான்கு ஐந்து முறை செய்த பிறகு திடீரென மாறுதல் தெரிய ஆரம்பிக்கும்.




அக்குபங்க்சர் மூலம் கீழ்க்கண்ட நோய்களையும் குணப்படுத்த முடியும்.
  1. ஒற்றைத்தலைவலி
  2. தேமல்
  3. சொரியாசிஸ்
  4. கருதங்காமை 
  5. மாதவிடாய் தள்ளிபோதல்
  6. குறைவான விந்தணுக்கள் 
  7. மூலம் 
  8.  பித்தப்பை கல்
  9. சிறுநீரக கல்
  10. நீரிழிவு நோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்த முடியும்.
  11. தூக்கம்மின்மைக்கு அக்குபங்க்சர் மூலம் விரைவாக குணப்படுத்த முடியும். 
  12. இருதய சக்தி ஓட்ட பாதையில் உள்ள புள்ளிகளை தூண்டுவதன் மூலம் மனம் அமைதி பெற்று தூக்கம் நன்றாக வரும்.
  13. கனவுகள் இல்லாமல் அமைதியான முறையில் உறக்கம் வரும். படபடப்பு குறையும், தேவை இல்லாத சிந்தனைகள் குறையும். 
  14. இருதயம் சம்பந்தமான நோய்கள்
  15.  தலைவலி,
  16. சிறுநீரக கோளாறுகள்
  17. சளி,
  18. சைனஸ்
  19. நுரைஈரல் சம்பந்தமான நோய்கள்
  20. மூட்டு வலி
  21. முகத்தில் அதிகமாக சுருக்கங்கள் விழுவது
  22.  முடி கொட்டுவது
  23.  தோல் நோய்கள்
  24. கன்னங்கள் ஒட்டிப்போய் இருத்தல்
  25.  வெள்ளைப்படுதல் போன்ற நோய்களையும் குணப்படுத்த முடியும்
தமிழ் என்று எழுத TAMIL என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து கீழே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும் ..
Thanks-www.thiruarun.Blogspot.com
.

No comments:

Post a Comment