Wednesday 4 January 2012

போபால் கோர அழிவு என்றால்.......


Add caption

20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய கோர அழிவு என்றால் அது போபால் விஷவாயு தாக்குதலாகும். போபால் விஷவாயு தாக்குதல் துயரம் இருபதாம் நூற்றாண்டின் மூன்று சோக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் தகுதி வாய்ந்தது.
 
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் அமெரிக்க வான்படை விமானங்கள் வீசிய அணுகுண்டு வீச்சுக்கு அடுத்த படியாக போபால் விஷவாயு தாக்குதல் இரண்டாம் இடம் பெறுகிறது.
 
போபால் விஷவாயு தாக்குதலில் 26 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியான துயரம் உலகிலேயே இதுவரை எங்கும் நடந்திடாத ஒன்று.
 
 
 
 
ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வீச்சுக்கு அடுத்தபடியாக போபால் விஷவாயு சம்பவமும் ரஷ்யாவின் செர்ணோபில் அணுக் கரு உலை விபத்து மூன்றாவது இடத்தையும் பெறுகின்றன.
 
ஜப்பானில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் பேராவர். அங்கு கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் அடங்காதவை.
 
ஜப்பானின் அணுகுண்டு வீச்சாகட்டும்! ரஷ்யாவின் செர்ணோபில் அணுக்கரு விபத்தாகட்டும்! இரண்டிலும் உடமையாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
 
மொத்த அமெரிக்காவே ஜப்பான் அணு குண்டு வீச்சு விபகாரத்தில் களத்தில் நிவாரண உதவிகளைச் செய்தது. முதலில் சற்று தாமதித்தாலும் செர்ணோபில் அணுக்கரு சோகத்தில் ரஷ்ய ராணுவம் களத்தில் மின்னல் வேகத்தில் மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.
 
ஆனால் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தவிக்க விடப்பட்டனர். போதிய மருத்துவ உதவிகளும் மருத்துவ மனைகளும் இன்றி அந்த அப்பாவி மக்கள் பட்ட துயரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.
 
போபாலில் கசிந்து வெளியேறிய மிக் என்ற வாய்வினால் (METHYL ISOCYNATE – MIC)  உடனடி யாக மாண்டவர்கள் 3 ஆயிரம் பேராவார். சில நாட்களில் எட்டாயிரம் மக்கள் மடிந்தனர். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்வையிழந்து விட்டனர். பலர் முடமானார் கள். பலர் மூச்சுத்திணறல் வியாதியினால் சிக்கிக் கொண்டனர். சட்டயுத்தத்தில் யூனியன் கார்பைடு நிறுவனமும் இந்திய அரசும் ஈடுபட்டுக் கொண்டே பாதிக்கப்பட்ட மக்களை கண்டு கொள்ளாமல் தவிக்க விட்டு விட்டனர்.
இழப்பீட்டுத் தொகை 470 மில்லியன் டாலர் பங்கிடப்படும். உயிர்களை பலி கொடுத்த மக்களுக்கோ நோயில் பரிதவிக்கும் மக்களுக்கோ அது சரிவரப் போய் சேரவில்லை.
 
அந்த கொடூர நிமிடங்கள்!
மத்தியப் பிரதேச மாநில தலைநகரமான போபால் 10 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது.1981ல் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு உதவியால் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை போபாலில் நிறுவ முடிவு எட்டப்பட்டது.அதில் அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடுக்கு 51 சதவீத பங்குகளும் இந்திய அரசுக்கு 26 சதவீத பங்குகளும் 24 ஆயிரம் இந்தியர்களுக்கு 23 சதவீதமும் பங்குகளாக சேர்த்து போபால் யூனியன் கார்பைடு பூச்சி மருந்து தொழிற்சாலைஉருவாக்கப்பட்டது.
 
பூச்சிக் கொல்லி மருந்தை உருவாக்கத் தேவையான மிக் ரசாயனத்தை தயாரிக்கவும் அதை சேகரித்து வைக்கவும் இந்த தொழிற்சாலை இயக்கப்பட்டது.
 
மூல வேதிப் பொருளான ‘மிக்’குடன் கார்பன் டெட்ராகுளோரைட் (CARBON TETRA CHLORIDE) மற்றும் ஆல்ஃபா நாஃப்தால் (ALPHA NAPTOOL) இரண்டையும் இணைத்து பூச்சிக் கொல்லி மருந்து உருவாகிறது.
 
அவற்றில் மிக் மட்டுமே மிக வீரியம் உடையது. கொடிய விஷத் தன்மை கொண்டதாகும். (HIGHLY TOXIC) தண்ணீருடன் இதைக் கலந்தால் தீவிர வெப்பத்தை (VIOLANT EXOTHERMIC REACTION) வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலுடையது.
 
மிக் மரணமூட்டும் விஷப் பொருள் என்பது பொதுவான அடிப்படை அறிவியல் சார்ந்தவர்களுக்குக் கூடத் தெரியும்.
 
1984 டிசம்பர் 2ஆம் நாள் அந்த கருப்பு ஞாயிறு அன்று இரவு 9:30 மணிக்கு இரண்டாம் ஷிப்ட் அதிகாரியின் உத்தரவுப்படி பணியாள் ஒருவர் பிளாஸ்டிக் பைப்பைக் கழுவினான்.
 
போபால் ரசாயணத் தொழிற்சாலையில் 15 ஆயிரம் கலன்– கொள்ளளவு கொண்ட மூன்று மிக் கலன்களில் (E610, E611, E629) இரண்டில் மட்டும் தான் எப்போதும் மிக் ரசாயணத் திரவம் இருக்க வேண்டும். ஒரு கலன் அவசியம் காலியாகவே இருக்க வேண்டும்.ஆனால் அன்று முரண்பாடாக மூன்று கலன்களிலும் மிக் நிரப்பப்பட்டு இருந்தது. மிக இருந்த கலனை இணைக்கும் வால்வை மட்டும் மூடி அவன் நீரைச் செலுத்தினான்.
பராமரிப்புப் பணியில் வாடிக்கையாகப் பைப் பைக் கழுவ பயன்படுத்திய நீர் எதிர்பாராத வாறு 13 ஆயிரம் —கலன் — மிக் தங்கிய கலன் கசிந்து கொட்டியது. இது பணியாள் செய்த இமாலயத் தவறு. மிக் கலனில் அழுத்தம் ஏற—அதன் நிலவரத்தைக் காட்டிய அழுத்தமானியின்-எச்சரிக்கையை தொழில்நுட்ப நிபுணர்கள் புறக்கணித்தனர்.
11 மணிக்கு வந்த ஷிப்ட் குழு இந்த எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தினர்.
நள்ளிரவு 12:40 அளவில் அழுத்தம் உச்ச நிலை அடைந்து தாங்க முடியாத நிலையில் கலன் உடைய ஆரம்பித்த போது விஷயம் கைமீறியது.
விஷவாயு கட்டுப்படுத்த முடியாத நிலையில் காட்டுத் தீ போல பெருகிவிட்டது. 120 அடி உயர புகை போக்கியில் 10 அடி உயர வெண் மேகங்கள் போன்ற புகை மண்டலம் மேலெழும்பியது.

மூன்று கலன்களிலும் மிக் நிரப்பப்பட்டு இருந்தது. மிக இருந்த கலனை இணைக்கும் வால்வை மட்டும் மூடி அவன் நீரைச் செலுத்தினான். பராமரிப்புப் பணியில் வாடிக்கையாகப் பைப்பைக் கழுவ பயன்படுத்திய நீர் எதிர்பாராதவாறு 13 ஆயிரம் —கலன் — மிக் தங்கிய கலன் கசிந்து கொட்டியது. இது பணியாள் செய்த இமாலயத் தவறு.

12:50க்கு தீயணைப்புப் படையினர் உள்ளே நுழைந்தனர். நீர் சரமாரியாக வீசியடிக்கப்பட்ட போதிலும் குறையாததோடு 110 அடி உயரத் துக்கு எழுந்தது. காற்றைவிட கனமான விஷ வாயு புகை மண்டலம் தாழ்ந்து காற்றுப் போன போக்கில் தரை மட்டத்தில் பரவ ஆரம்பித்தது.
தொழிலாளர்கள் அனைவரும் கண் எரிச்சலில் ஓட்டம் பிடித்தனர். 1:30 மணிக்கு மிக் அபாய வாயு எச்சரிக்கை சங்கு இயக்கப் பட்டது. எப்போதும் ஒலிக்கும் சைரன்தானே என மக்கள் சட்டை செய்யாது தூங்கினர். யாரும் அதனால் எச்சரிக்கை அடையவில்லை. ஒலித்துக் கொண்டிருந்த அபாய சைரனும் 15 நிமிடத்தில் நிறுத்தப்பட்டது.
உறங்கிக் கொண்டிருந்த ஆயிரம் ஆயிரம் ஏழை பாமர, உழைக்கும் மக்கள் (குறிப்பிடத்தக்க அளவில் சிறுபான்மை மக்கள்) உறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலேயே —- மரணத்தை அடைந்தனர்.
விழித்த சிலரும் கண்ணெரிச்சல் தாங்காது நெஞ்சு எரிச்சல் தாங்காது அங்குமிங்கும் ஓடினர். சிதறினர். பதற்றத்தில் காற்றடிக்கும் திசை எது என தெரியாமல் ஓடி விஷவாயு அணைப்பில் உயிரை பறிகொடுத்தனர். அருகில் இருந்த மருத்துவமனைகள் யாவும் நிரம்பி வழிந்தன. ஆயிரக்கணக்கான மக்களும் மாக்களும் நொடிப் பொழுதில் சடலங்களானார்கள்.
இறந்து விழுபவர்களை இரவு பகலாக தொடர்ந்து எரிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. விஷவாயுவுக்கு அடுத்து பிணங்கள் கருகும் வாடை போபாலை புரட்டிப் போட்டது.
 
போபால் நரகம்
பூச்சிக் கொல்லி தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளான ஐயப்பிரகாஷ் நகர், காசிகாம்ப் , சோலாஜென்சி –, ரயில்வே காலனி ஆகியவற்றில் வாழ்ந்த மக்களில் கணிசமானோர் விஷவாயுவுக்குப் பலியானார்கள்.
பலியானவர்களில் கனிசமானோர் வறுமை யில் வாடிய ஏழை மக்கள் என்பது உருக்கமான செய்தியாகும்.
 
மிக் வாயு போபால் நகரம் முழுவதும் காற்று மண்டலத்தில் வியாபித்து தளப்பரப்பை ஒட்டியே நான்கு மணி நேரம் நாச வேலைகளை செய்தது.
இப்போது போபால் நகரம் போபால் நரகம் ஆகியது. தூக்கத்திலே 5 ஆயிரம் பேர் மாண்டு போனார்கள். பார்வையிழந்தோர், பெருங்காய முற்றோர், மீளா நோயுற்றோர் பரிதாப ஜீவன் களின் எண்ணிக்கை மட்டும் ஐந்து லட்சத்திற்கு மேல் ஆனது.
 
விஷமாக மாறிய குடிநீர்
கிணற்று நீர் அருந்துவதற்கு தகுதியற்ற தாக மாறியது. கிணற்று நீர் விஷமாகி விட்டது.கிணற்று நீரை ஆய்வு செய்தபோது
  1. கார்பன் டெட்ரா குளோரைடு 1705 மடங்கும்
  2. குளோரோபார்ம் 13 மடங்கும்
  3. டீரை குளோரோ எதேன் — 50 மடங்கும்
  4. டெட்ரா குளோரோ எதேன் 9 மடங்கும்
  5. டை கொளோரோ பென்ஜைன் 3 மடங்கும்
கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
பராமரிப்பு முறையாக செய்யப்படாதது
மிக் கலனின் உஷ்ணத்தை தணிக்கும் குளிர்விப்பு இயந்திரம் (REFRIGERATION UNIT) அன்று நிறுத்தப்பட்டுக் கிடந்தது.
வாயு சுத்திகரிப்பு இயந்திரம் (GAS SCRUBLRER) மற்றும் அதனை உடனடியாக அழிக்கக் கூடிய நியூட்ரலைஸ் மிக்  (NEUTRALIZE MIC) அன்று ஏனோ செயல்படவில்லை.அது மட்டுமின்றி அபாய கட்டங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த போதுமான பயிற்சியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட வில்லை. தடுப்பு முறைகள் குறித்த அறிவிப்புகள், எச்சரிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தன.
எனவே குறைந்த கல்வி அறிவே கொண்ட பணியாளர்களுக்கு அது குறித்து எவ்வித பயனும் விளையவில்லை.
 
ஆபத்தான கட்டத்தில் எப்படி நடப்பது என செய்முறை பயிற்சிகள் கூட சொல்லிக் கொடுக்கப்படவில்லை.போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த சோக செய்திகளை போபா லின் மழலைகள் (THE BABIES OF BHOPAL) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2002 செப்டம்பர் 14ஆம் தேதி ஜவஹர்லால் நேரு புற்று நோய் ஆய்வு மருத்துவமனையில் போபால் மழலைகளை சோதித்த ஆய்வாளர் கள் குறிப்பிட்ட போது உடல் குறையுடன் பிறந்த சில குழந்தைகளுக்கு மூன்று கண்கள், ஒரு பெண் குழந் தையின் கால் பாதம் அடுத்த கால் பாதத்தை விட ஐந்து மடங்கு பெரிதாக இருந் தது. சிறு  குழந்தைகளுக்கு தலைகள் கோனிப் போய் இருந்தன.
 
ஆறு மைல் சுற்றுப் புறத்தில் வாழ்ந்த மக்கள் குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
பல்லாயிரக்கணக்கான மக்களை காவு வாங் கிய இந்த போபால் விஷவாயு கோரம் மற்று மொரு உண்மையை உலகுக்கு அறைந்த சொல்லியது.
 
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் செயல்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனம் முழு அளவிலான பாதுகாப்பு முறைகளுடன் செயல்பட்டது.
 
ஆனால் ஏழைகளின் இந்திய போபாலில் எந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.
 
முழு முதல் குற்றவாளி வாரன் ஆண்டர் சனை இந்தியாவுக்கு கொண்டுவர இன்னும் முடியவில்லை. அவரை ராஜ மரியாதையுடன் தப்ப வைக்க உதவிய பேர்வழிகள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. முறை யான இழப்பீடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்காமல் மத்திய மாநில அரசுகள் மவுனம் சாதிக்கின்றனர்.
அவர்களைச் சொல்லி குற்றமில்லை, மயானங் களில் மவுனம் தானே கடைபிடிக்க முடியும்.
மயான அமைதியைக் கிழித்து ஒரு புரட்சி ஏற்படும் வரை!

No comments:

Post a Comment