உலக நாகரீகத்தின் தந்தை
وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ
குர்பானிக்கு மட்டுமல்ல ஹஜ்ஜின் ஒவ்வொரு அமலுக்கும் இபுறாகீம் (அலை) நபியும் அவருடைய குடும்பத்தினருமே காரணகர்த்தாக்கள்.
· கஃபாவை கட்டியது –
· ஹஜ்ஜுக்கு அழைப்பு –
· தல்பியா இபுறாகீம் (அலை) யின் அழைப்புக்கான பதிலே
· ஸஃயு-
· சைத்தானை கல்லெறிதல் –
அவரது சிறப்புக்களில் இன்னொரு முக்கிய அம்சம் அவர் மனித நாகரீகத்தின் தலைமகன்.
பூமியில் மனிதன் தோன்றி சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் ஆயிற்று என்றாலும் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹஜ்ரத் இபுறாகீம் (அலை) அவர்களே பல நாகரீகப் பண்புகள் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் என்று இஸ்லாமிய மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன.
பகரா அத்தியாயத்தின் 124 வசனத்தின் விரிவுரையில் முபஸ்ஸிர்கள் பலரும் இந்தக் கருத்தை கூறுகின்றனர். (குர்துபி = இபுனுகதீர்)
· தண்ணிரை பயன்படுத்தி சுத்தம் செய்த முதலாமவர் –
· முதன்முதலாக பல் விளக்கியவர்
· மீசையை கத்தரித்தவர்
· கத்னா செய்தவர்
· நகம் வெட்டிக் கொண்டவர்
· மேடை மீதேறிப் பேசியவர்
· சுர்வால் அணிந்தவர் (மானத்தை மறைக்கச் சிறந்த்து)
· விருந்தாளிகளை உபசரித்தவர்,
(இந்த நாகரீகங்களைப் பற்றி இஸ்லாமின் சட்டங்களை சுருக்கமாக விளக்கலாம்.)
قال القرطبي: وفي الموطأ وغيره عن يحيى ابن سعيد أنه سمع سعيد بن المسيب يقول: إبراهيم عليه السلام أول من اختتن وأول من ضاف الضيف وأول من قلم أظفاره وأول من قص الشارب وأول من شاب فلما رأى الشيب قال: يا رب ما هذا؟ قال وقار قال: يا رب زدني وقارا وذكر ابن أبي شيبة عن سعد بن إبراهيم عن أبيه قال أول من خطب على المنابر إبراهيم عليه السلام قال غيره وأول من برد البريد وأول من ضرب بالسيف وأول من استاك وأول من استنجى بالماء وأول من لبس السراويل
இந்த நாகரீகங்களை அவர் முதன் முதலாக நடை முறைப் படுத்திய போது அது ஒரு கடும் சோதனையாக இருந்த்து. அதனால் தான் “இக்கடமைகளை கொண்டு இறைவன் இபுறாகீமை சோதித்த போது அவர் அவற்றை நிறைவேற்றினார் “ என்று குர் ஆன் கூறுகிறது.
இபுறாகீம் நபி அறிமுகப் படுத்திய நாகரீகங்களில் மிக முக்கியமானது சிறப்பானது பக்தி நாகரீகம்
பக்தியை – இறைவனுக்கு அடிபணிதலை- மிகச்சரியாகவும் முறையாக செயல்படுத்தி அறிமுகப் படுத்தினார்.
பக்தி இன்று எவ்வளவு கேலிப் பொருளாக இருக்கிறது?
பக்தி இன்று எவ்வளவு கேலிப் பொருளாக இருக்கிறது?
அனைத்திலும் தலை தூக்கியாடும் அநாகரீகம் இப்போது பக்தியை கூட விட்டுவைக்கவில்லை
பலே திருடன் ஒருவன் ஒரு நாள் மாட்டினான்.
விசாரணயில் அவனது திருட்டுத்தன்ங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன, நீதிபதியே மிரண்டு போனார். இத்த்னை நாளாய் தப்பித்து வந்த நீ இப்போது எப்படி மாட்டினாய்? என்று கேட்டார்.
ஒவ்வொரு தடவையும் 10 சதவீத்தை கடவுளுக்கு கொடுத்து விடுவேன். இந்த முறை தொகை அதிகமாக் இருந்த்தால் 5 சதவீதம் மட்டுமே உண்டியலில் போட்டேன். அதுதான் கடவுள் காட்டிக் கொடுத்து விட்டார் என்றன் திருடம் ‘
அடுத்தவன் பொருளை திருடும் போது, அடுத்தவனுக்கு மன வேதனை கொடுத்த போது, குற்றத்திற்கு கடவுளை துணையாக்கிய போது, இறைபக்தி வரவில்லை. மாட்டிக் கொண்ட போது இறை பக்தி வருகிறதென்றால் இது போலித்தனமான பக்தி.
இபுறாகீம் (அலை) மனைவி மகன் பிறந்த நாடு அரசன் என அனைவரையும் விட அல்லாஹ் பெரியவன் என்பதை தன்வாழ்வில் நடை முறைப்படுத்திக் காட்டி வணக்கவியலின் மிக உயர்ந்த நாகரீகத்தை அறிமுகப்படுத்தினார்.
இறை பக்தி என்பது இறைவனுக்கு அவனுடைய கட்டளைகள் அனைத்திலும் எல்லாநேரத்திலும் முழுமையாக கட்டுப்படுவது என்பதை புலப்படுத்தினார்.
நமது இறைபக்தியை சஜ்தாவோடு நிறுத்திக் கொள்கிற நாம் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டிய மிக முக்கியமான செய்தி இது.
நம்மிடையே உள்ள பக்தியாளர்கள் கூட சோதனை வருகிற போது, அல்லது அதிக மகிழ்ச்சியின் போது, அல்லது திருமணம் போன்ற விழாக்களின் போது இறைவனுக்கு அடிபடினிதலை மார்க்கத்திற்கு கட்டுப்படுதலை சற்று தள்ளி வைத்து விடுகிறார்கள்.
பக்தியில் உலக நாகரீகத்தின் தந்தையான இபுறாகீம (அலை) கற்றுக் கொடுத்த உயர்ந்த நாகரீகத்தை பழகினால் நாமும் புகழ் பூத்த வாழ்வை பெற முடியும்.
No comments:
Post a Comment