உலகில் தற்போது அனைவராலும் கொடிய நோய் என்று சொல்லப்படும் புற்றுநோய்க்கு (கேன்சர் ) இதுவரை முழுமையான மருந்து என்று ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் சித்தர் பெருமக்கள் புற்று நோய் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது என்ற காரணத்தை விரிவாக கொடுத்துள்ளனர். எல்லாம் வல்ல எம் குருநாதரின் பாதங்களை பணிந்து அதற்கான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால்உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.
எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.
இரத்த நாளங்கள் (ஆர்டரி-தமனி, வெய்ன்-சினை, கேட்டல்லரி-நுண்ணாளி) மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலம் (லம்பாடிக் சிஸ்டம்), நிணநீருடன் இரத்த வெள்ளை அணுக்களை, நிணநீர் நாளங்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும். கேடு விளைவிக்கும் கழலை உடைந்து, அதிலிருந்து வெளிவரும் புற்றுநோய் செல்கள், இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்தின் மூலம் மற்ற உடல் உறுப்புகளுக்குச் சென்று அப்பகுதியில் கழலைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு புற்று நோய் பரவுவதை திசுத்தொற்று (மெடாஸ்டாஸிஸ்) (metastasis) என்பர்.
இது ஒரு வகையான பரம்பரை அலகுகளில் (gene or in chromosomal DNA region) ஏற்படும் மாற்றங்களினால் அல்லது டி.என்.ஏ க்களில் பிறழ்வுகளை தூண்டும் பொருள்களினால் (புற்று நோயூட்டி or carcinogen) அல்லது தீ நுண்மங்களினால் (virus, ex Human Papilloma virus) ஏற்படும் நோய் ஆகும. உயிரணு பிரிதலை கட்டுப்படுத்தும் (Ex. Retinoblastoma protein) அல்லது புற்று நோய் வரமால் தடுக்கும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளினால் உயிரணு பிரிதல் கட்டுப்பாடுகள் அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லமால் ஊக்கமடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது. இவ்வாறு தோன்றும் புற்று செல்கள் இரத்தம் அல்லது நிணநீர் (லிம்ப்) வழியாக உடலின் மற்ற பாகங்களை அடைந்து நிவாரணம் செய்யமுடியாத நிலைக்கு கொண்டு செல்கின்றன. இவ்வாறு புற்று செல்கள் கடந்து செல்லும் நிலைக்கு மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்) எனப்பெயர். அண்மைய ஆய்வுகளில் குறு ஆர்.என்.ஏ (microRNA) க்களில் ஏற்ப்படும் மாற்றங்களினாலும் புற்று நோய் தூண்டுப்படுவதாக உறுதி செய்துள்ளது. மேலும் புற்று உயிரணுக்களில் மிக குறைந்த அளவுகளில் புற்று குருத்தணுக்களை (cancer stem cells, Glioblastoma stem cell) அண்மையில் கண்டறிந்துள்ளார்கள். இவை அந்தந்த உறுப்புகளில் நிலவும் சாதரண குருத்தணுக்களில் (normal stem cells, ex. neuronal stem cells) உள்ள கல குறிகைகளில் (cell signaling pathway) ஏற்ப்படும் பிறழ்வுகளால் புற்று குருத்தணுக்களை தோற்றுவிக்கின்றன.
புற்று நோய் சில வேளைகளில் ஒரு குறிபிட்ட இடத்தில் கட்டியாக வெளிப்படுவதை தீங்கற்ற கட்டி அல்லது பெனின் (benign) கட்டி என அழைக்கப்படும். அவை தன்னிடத்திலேயே எல்லைக்கு உட்பட்டு அடங்குபவை ஆகும், மேலும் அவை ஊடுருவி தாக்கவோ அல்லது இதர இடங்களுக்கு பரவவோ செய்யாது. பொதுவாக இக்கட்டிகளை குறிபிட்ட இடத்தில் அகற்றி விட்டால், புற்று நோயின் தாக்கம் இல்லை என நம்பலாம். பின்னாளில் கண்ணுற்ற புற்று குருத்தணுக்களால் மீண்டும் புற்று தாக்கும் என தெரிகிறது. மிக குறைந்த அளவில் உள்ள புற்று குருத்தணுக்கள் மறுபடியும் புதுபித்து (self=renewal), பெருகி புற்று செல்களாக உருமாற்றம் அடைய வாய்ப்புகள் வெகுவாக உள்ளன. இக்கரணியத்தால் நாம் உட்கொள்ளும் மருந்துகள் புற்று குருத்தணுக்களையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகவும், அதே வேளையில் சாதரண குருத்தணுக்களை பாதுகாக்கும் வண்ணம் அமைய ஆய்வுகள் தொடர்கின்றன. ஆனால் சில நோய்கள், எடுத்துக்காட்டாக இரத்தப்புற்றுநோய், கட்டி இல்லாமலேயே தாக்கும். மருத்துவ முறைகளில் புற்றுநோயைப்பற்றி படித்தல், கண்டறிதல், சிகிச்சை அளித்தல், புற்றுநோயை தடுத்தல் அனைத்தும் அடங்கிய மருத்துவப்பிரிவினை ஆன்கோலோஜி புத்தாக்கவியல் (புற்றுநோயியல்) என்று அழைக்கப்படுகிறது.
புற்று நோய் மாந்தரை எந்த அகவையிலும் தாக்கலாம் என்றாலும் கூட, வயது ஏற ஏற அதற்க்கான வாய்ப்புகள் வேகமாக கூடுகின்றன.[1] புற்றுநோய் காரணமாக சுமார் 13% மனித இன இழப்பு ஏற்பட்டு வருகிறது.[2] அமெரிக்கன் கான்செர் சொசைடி நடத்திய கணிப்பின்படி, உலகில் 7.6 மில்லியன் மக்கள் புற்றுநோய் காரணமாக 2007 ஆண்டில் உயிர் இழந்தனர்.[3] புற்றுநோய் எல்லா விலங்குகளையும் தாக்கக்கூடியது.
பொதுவாக நிறப்புரியில் ஏற்படும் பிறழ்வுகளால் அல்லது மாற்றங்களால், ஒரு உயிரணு புற்று செல்களாக மாற்றப்படும். இந்நிகழ்வுக்கு உருமாற்றம் (transformed cells) எனப்பெயர். இவ்வாறு உருமாற்றம் அடைந்த உயிரணுக்கள் கட்டுப்பாடு இன்றி பல்கி பெருகி புற்றணுவை உருவாக்குகிறது.[4] இவ்வகையான ஒவ்வாத இயல்பு மாற்றங்களுக்கு புற்று ஊக்கிகள், எ.கா.புகையிலை புகை, கதிர் இயக்கம் , வேதியியல் பொருள்கள், அல்லது தொற்றுநோய் பரப்பும் பொருட்கள் காரணமாக அமைகிறது. மேற்கூறிய பொருட்கள் டி.என்.ஏ நகலாக்கம் அல்லது அச்செடுத்தலின் போது பல்வேறு வகையான பிறழ்வுகளை தூண்டுவதால் புற்று செல்கள் தோன்றுகின்றன. சில வேளைகளில் புற்று நோய் மரபு வழியாகவும் கடத்தப்படும். இந்த புற்றுநோயின் பாரம்பரியத்திறன்ஆனது புற்று ஊக்கிகளுக்கும் இடத்தையளிக்கும் ஜெனோம்களுக்கு இடையே நடக்கும் சிக்கலான இடைவினைகளால் வழக்கமாக பாதிப்படைகின்றன. நோய் தோற்ற வகையினை கண்டறியும் புதிய கண்டுபிடிப்பான மெத்தைலேற்றம் மற்றும் குறு ஆர்.என்.ஏ தற்போது மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.
பொதுவாக புற்று உயிரணுக்களில் இரு வகையான மாற்றங்களை காணலாம்.
1.மிகையான உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் (Oncogene)
2. புற்று உயிரணுக்களை கட்டுப்படுத்தும் மரபணுவில் (tumor suppressor genes)
ஏற்படும் பிறழ்வுகள்.
முதல் வகையில், உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் வெளிப்பாடு வெகுவாக்கப்படுவதால் (Bcl2) அவைகள் கட்டுப்பாடுகள் இல்லாத செல் பிரிதலை ஊக்கவிக்கும். இவ்வகையான மரபணுக்கள் நமது உடலில் நடைபெறும் உயிரணு இறப்பை அல்லது திட்டமிடப்பட்ட உயிரணு இறத்தல் (Apoptosis or Programmed cell death) என்னும் நிகழ்வை தடுக்க வல்லவையால் , உருமாறிய உயிரணுக்கள் பல்கி பெருகுவதற்கு துணை புரிகின்றன.
இரண்டாவது நிகழ்வில், இயற்கையாக நமது உடலில் உள்ள புற்றுகளை மட்டுப்படுத்தும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளால் , புற்று உயிரணுக்கள் பல்கி பெருகுவது ஊக்குவிக்கப்படுகிறது.
புற்று நோயின் அறிகுறியாக கட்டிகள் அமைந்தாலும், அதனை உறுதிபடுத்த திசுக்கள் ஆய்வுக்கு உட்ப்படுத்தபட்டே புற்று உள்ளதா? இல்லையா ? என அறியப்படும்.
புற்று நோய்: - ஏன்? - எப்படி?
புற்று நோய்.
`யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது!
ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.
'வரும் முன் காப்போம்' என்றாலே அது எந்தவகை இடரும் வரும் முன் காப்போம் என்பதைத் தான் குறிக்கும். பொதுவாக இந்த வாக்கியத்தைக் கேட்டால் நோய் வரும்முன் காப்போம் என்பது பற்றித்தான் என்று அனைவரும் சொல்வார்கள். ஏனென்றால் நோய் வரும்முன் சில அறிகுறிகள் தென்படும். அதாவது 'யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்பதைப் போல. நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் அப்போதே தேவையான வைத்தியம் செய்து களை எடுத்துவிட்டால் நோயிலிருந்து தப்பிப்பது மட்டுமல்ல, இறப்பையும் தள்ளிப்போடலாம். இன்றைய மருத்துவ உலகில் புதுப்புது ரகங்களில் புற்று நோயின் தாக்கம் உள்ளது. உதாரணமாக மார்பகப் புற்று நோய், மூளைக் கட்டிகள் என்று பலவகைகளில் மனிதனை ஒரு கை பார்த்துவிடுகிறது. சில சமயம் உயிரை பறித்துக் கொள்ளும் அளவுக்கு இதன் தாக்கம் அதிகம் இருக்கும். இது மாதிரியான நோய்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. இதனால் புற்று நோய் பற்றிய பயம் மக்கள் மனதில் இருந்து கொண்டுதான் உள்ளது. சில வேளைகளில் புற்றுநோய் அதன் அறிகுறியே தென்படாமல் கொரில்லா தாக்குதல் போல் முற்றிய நிலையில் தாக்கிவிடும். இதன்பிறகு அதற்கு சிகிச்சை அளிப்பது பயனற்று போய் மருத்துவர்கள் கை விரித்துவிடுவார்கள் புற்று நோய்க்கு என்ன காரணம்?
பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.
இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும். ஆயினும் பொதுவாக அறிகுறிகள் உள்ளன. அவை:
- மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
- புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
- குணப்படாத புண்கள்.
- கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
- மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
- தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
- விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
- இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
- பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி
- தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
- சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பதுகழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். ,
- இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
- பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி
- காய்ச்சல். (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) *மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். *உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். *திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.
எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?
வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.
நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.
வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை (fast food)அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.
ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.
மார்புப் புற்று:மார்பகப்புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை கண் முன் நிறுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.
- அறிகுறிகள்
- மார்பு வீங்குதல்
- மார்புக் காம்பிலிருந்து வடிதல்
- மார்பகக் காம்பு உள் நோக்கி இழுத்தல்
- சிவந்த / வீக்கமடைந்த மார்புக் காம்பு
- மார்பகம் பெரியதாகுதல்
- மார்பு சுருங்குதல்
- மார்பகம் கல்போல் கடினமாதல்
- எலும்பு வலி
- முதுகு வலி
- குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பக புற்று நோய் இருத்தல் (பெரும்பாலான நெருங்கிய உறவினர்களுக்கு)
- பெண்களுக்கு வயதாகும் போது ஆபத்து அதிகமாகிறது.
- ஏற்கெனவே பாதிப்படைந்த மார்பக புற்றுநோய், இயல்புக்கு மாறுபட்ட மாற்றங்கள், ஏற்கெனவே உள்ள மார்பக நோய்கள்.
- மரபுவழிக் கோளாறு அல்லது மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்)
- 12 வயதிற்கு முன்பாகவே வயதுக்கு வருதல்
- குழந்தை இல்லாமை.
- மது வகைகள், அதிக கொழுப்பான உணவு, அதிக நார்பொருள் உள்ள உணவு, புகைப்பழக்கம், உடற்பருமன் மற்றும் ஏற்கெனவே உள்ள கருவக அல்லது பெருங்குடல் புற்றுநோய்.
- , ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை,
கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது)
சரும புற்று: *சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், *சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், *நாள்பட்ட ஆறாத புண்.
(இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்குகூட இந்த நோய் ஏற்படலாம். `மது அருந்தமாட்டார். புகைப்பிடிக்கும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டதே' என்று வருந்திப்பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்)
இரத்தப்புற்று நோய்
லுகிமியா அல்லது லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய். இரத்த செல்கள் குறிப்பாக, வெள்ளை இரத்த அணுக்கள் இயல்புக்கு மாறாக அதிகளவில் பெருகும் நிலை காணப்படும்.
- அறிகுறிகள்
- அதிகளவில் இரத்தம் வடிதல்
- இரத்தசோகை
- காய்ச்சல், குளிர், இரவுநேரத்தில் வேர்த்தல் மற்றும் ப்ளு போன்ற அடையாளங்கள்
- பலவீனம் மற்றும் சோர்வு
- பசியின்மை மற்றும் /அல்லது எடை குறைதல்
- பல் ஈறுகள் வீக்கமடைதல் அல்லது இரத்தம் வடிதல்
- நரம்பியல் சம்பந்தமான அடையாளங்கள் (தலைவலி)
- ஈரல் மற்றும் கணையம் வீக்கமடைதல்
- காயங்கள் சுலபமாக ஏற்படுதல் மற்றும் அடிக்கடி நோய்தொற்று ஏற்படுதல்
- மூட்டு வலி
- உள்நார்தசைகள் வீக்கமடைதல்
இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா?
தடுக்க முயற்சிக்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம்தானே! குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.
`ஹியூமன் பபிலோமா வைரஸ்' (Human Papilloma Virus - H.P.V) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நோய் தாக்கியிருப்பதை எத்தகைய சோதனை மூலம் கண்டறிய முடியும்?
முதலில் நாம் குறிப்பிட்டிருக்கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.
சரி கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியுமா?
ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு `பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர்' என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந்ததாகும்.
புற்றுநோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்துகொள்வது அவ்வளவு நல்லதில்லை என்பது சரியா?
காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நவீன ஆபரேஷன் முறைகளும்- கருவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. மருத்துவ நிபுணர்களும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். 30, 40 வருடங்களுக்கு முன்னால் புற்றுநோய்க்கு `மேஜர்' ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது `சிம்பிளான' ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று `ரிஸ்க்'தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.
புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் என்னென்ன?
மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன. அவை:
1. ஆபரேஷன்,
2. கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்),
3. ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்).
புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா?
புற்றுநோய் எப்பொழுதும் வலியை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. புற்றுநோயின் வகை, நோயின் அதிகரிப்புதன்மை மற்றும் நோயாளியின் வலி பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்து வலி இருக்கும். பெரும்பாலும் புற்று நோய் வளர்ந்து, எலும்புகள், உறுப்புகள் அல்லது நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.http://en.wikipedia.org/wiki/Cancer
No comments:
Post a Comment