Iமுஸ்லிம் மக்கள் தொகையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் இந்தோனேசியாவை விரைவில் பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும் என்று அமெரிக்கா ஆய்வு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனை சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய ஆய்வில், அடுத்த இருபது ஆண்டுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையிலிருந்து இரு மடங்கு அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அதிகரிக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை
உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வருகிற 2030 ஆம் ஆண்டு வாக்கில் உலக மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல 2030-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.6 கோடியைத் தாண்டும் என்றும் அது கூறுகிறது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் மக்கள் தொகை, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரிக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.
கடந்த 2010ல் இருந்த 6.9 பில்லியன் மக்கள் தொகையில் 234 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது அடுத்த இருபதாண்டுகளில் 35 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு 35 சதவிகிதம் அதிகரித்தால் 2010ல் 1.6 பில்லியனாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை, 2030ல் 2.2 பில்லியனாக அதிகரித்து காணப்படும்.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இஸ்லாமிய மக்கள் தொகையின் இந்த அதிகரிப்பு, இதே வேகத்தில் தொடர்ந்தால், 2030ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொகையில் கால்வாசிக்கும் அதிகமானோர், அதாவது 26.4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர். அதாவது 2030ல் உலக மொத்த மக்கள் தொகை, 2010ல் காணப்பட்ட 6.9 பில்லியனிலிருந்து 8.3 பில்லியனாக அதிகரித்துவிடும் என்றும், இதில் 26.4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த கால சமூகப் பொருளாதார போக்கின் அடிப்படையிலும், தற்போது அதிகரித்து வரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அந்த ஆய்வறிக்கை, இதே போக்கு நீடித்தால் 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடுகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 72 லிருந்து 79 ஆக அதிகரித்துவிடும் என்றும், அந்த 79 நாடுகளிலும் ஒரு மில்லியன் அல்லது அதற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் கூறுகிறது.
இந்தோனோஷியாவை பாகிஸ்தான் முந்திவிடும்
மேலும் இன்றைய நிலையே நீடித்தால், உலகின் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் (சுமார் 60 விழுக்காடு) ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தான் வசிப்பார்கள் என்றும், 20 விழுக்காட்டினர் மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க நாடுகளில் வசிப்பார்கள் என்றும் அது கூறுகிறது.
அதே சமயம் இஸ்லாமிய மக்கள் தொகையில் இந்தோனேஷியாவை, பாகிஸ்தான் முந்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றாலும், 2030 வாக்கில் வேறு எந்த ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் அதிக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இடம்பெயர்தல் மற்றும் சராசரி விகிதத்தைவிட அதிக பிறப்புவிகிதம் ஆகியவையே அடுத்த இருபதாண்டுகளில், இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
1990 லிருந்து 2010வரை உலக இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 2.2 விழுக்காடு அதிகரித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளதாக அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர்.

- நன்றி.. தீக்கதிர்
No comments:
Post a Comment